சபரிமலை கோவிலில் மாசி மாத பூஜை.. ஐயப்ப பக்தர்களே நடை திறப்பு எப்போது?.. வெளியான குட்நியூஸ்
சபரிமலை: மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்குப் பிறகு அடைக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 13ஆம் தேதி கும்பம் மாத பூஜைக்காக திறக்கப்பட உள்ளது. 14 ஆம் தேதி காலை முதல் 18ஆம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். அதன்படி மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 12 ஆம் தேதி மாலையில் திறக்கப்படுகிறது. தொடர்ந்து மறுநாள் முதல் 17ஆம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். எனவே அதற்கு முன்னதாகவே காணிக்கை நாணயங்களை எண்ணி முடிப்பதற்கு திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரிகள் தீவிரம் காட்டியுள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக சபரிமலை சீசனான மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்தின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருவது வழக்கம்.
அந்த வகையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த நவம்பர் 17ம் தேதி முதல் தொடங்கிய மண்டல பூஜை டிசம்பர் மாதம் 27 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன்பிறகு 2 நாள் இடைவெளிக்கு பிறகு மகரவிளக்கு கால பூஜைகளுக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. கடந்த மாதம் 20 ஆம் தேதியுடன் மகர விளக்கு பூஜை, மகர ஜோதி தரிசனத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து நடை சாத்தப்பட்டது.
கடந்த சபரிமலை சீசனின் போது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்டம் வழக்கமாக இருந்தபோதும் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டது. அப்படி வசதிகள் கூட இல்லாமல் மக்கள் பல மணிநேரம் வரிசையில் காத்திருந்தனர். இந்த முறை 50 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதனிடையே மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் பிப்ரவரி 13 ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் கோவில் நடை திறக்கப்படும். அன்று பூஜைகள் ஏதும் நடத்தப்படாது. மீண்டும் கோவில் நடை அடைக்கப்பட்டு, பிப்ரவரி 14 ம் தேதி காலை நடைதிறக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டு, காலை 5 மணிக்கு பிறகே பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த நாட்களில் சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பிப்ரவரி 18 ம் தேதி வரை 5 நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும். முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
14ஆம் தேதி காலை 5 மணிக்கு நெய் அபிஷேகத்தில் தொடங்கி இரவு வரை பல்வேறு பூஜைகள் நடத்தப்படும். 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை தினமும் இரவு 7 மணிக்கு படி பூஜை நடைபெறும். பக்தர்கள் முன்பதிவு செய்ய வசதியாக நிலக்கல்லில் ஸ்பாட் புக்கிங் மையங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான பூஜைகளுக்கு பிறகு வரும் 18 ஆம் தேதி இரவு ஹரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு கோயில் நடை சாத்தப்படவுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications