சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை.. நாளை நடை திறப்பு.. என்னென்ன ஏற்பாடுகள்
சபரிமலை: கார்த்திகை மாதம் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை பிறக்கிறது. ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்க உள்ளனர். மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது. 41 நாட்கள் பூஜைகள் நடைபெற்று டிசம்பர் 27 ஆம் தேதி ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடைபெறும்.
சபரிமலை: கேரள மாநிலம் சபரிமலையில் அருள்பாலிக்கும் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறந்து பூஜைகள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் ஐயப்பனை காண்பது பலருக்கும் ஆனந்தம். சாமியே சரணம் ஐயப்பா என்று சரண கோஷம் முழங்க ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் 1ஆம் தேதி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். இந்த ஆண்டு மண்டல பூஜை நாளை மறுநாள் சனிக்கிழமை 17ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.

ஐயப்பன் கோவில் நடை திறப்பு: மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஓராண்டு காலம் மேல் சாந்தியாக இருந்த ஜெயராமன் நம்பூதிரி ஐயப்பன் கோவில் நடையை திறந்து வைக்கிறார். ஐயப்பன் சன்னதியில் தீபம் ஏற்றிய பின் 18 படிகள் வழியாக கீழே இறங்கி சென்று ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்ப்பார்.
புதிய மேல் சாந்தி: 18ஆம் படிக்கு கீழே இருமுடி கட்டுடன் நிற்கும் புதிய மேல் சாந்திகளான சபரிமலை பி.என். மகேஷ், மாளிகைபுறம் மேல்சாந்தி வி.ஜி.முரளி ஆகியோரை கைப்பிடித்து கோவிலுக்கு முன் அழைத்து வருவார். இரவு 7 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு சபரிமலை மேல் சாந்தி பி.என். மகேஷுக்கு அபிஷேகம் நடத்துவார். ஐயப்பன் மூல மந்திரத்தை காதில் ஓதி சன்னதிக்குள் அழைத்து செல்வார். இதுபோல மாளிகைபுறம் மேல் சாந்திக்கும் அபிஷேகம் நடத்தி மூலஸ்தானத்திற்குள் அழைத்து செல்லப்படுவார்.
நெய்யபிஷேகம்: நவம்பர் 17ஆம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதிகாலை 3:00 மணிக்கு புதிய மேல் சாந்தி பி.என்.மகேஷ் நடை திறந்து தீபம் ஏற்றியதும், இந்தாண்டுக்கான மண்டல பூஜைக்காலம் தொடங்குகிறது.
ஐயப்பனுக்கு தங்க அங்கி: நவம்பர் 17 முதல் தினசரியும் அதிகாலை 3.15 மணி முதல் மதியம் 12 மணி வரை நெய்யபிஷேகம் நடக்கும். இரவு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுவது வழக்கம். 420 சவரன் எடை கொண்ட தங்க அங்கியை திருவிதாங்கூர் மன்னர் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கினார். இந்த தங்க அங்கி பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும்.
டிசம்பர் 27 மண்டல பூஜை: தங்க அங்கி அணிந்து தீப ஒளியும் ஜொலிக்கும் ஐயப்பனை காண ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். இன்று மதியம் 12.30 மணியில் இருந்து ஒரு மணிக்குள் ஐயப்பனுக்கு மண்டல பூஜைகள் நடைபெறும். மாலை 5 மணிக்கு புஷ்ப அபிஷேகம் நடைபெறும். டிசம்பர் 27ஆம் தேதி இரவு அத்தாழ பூஜை நடைபெற்ற பின்னர் கோயில் நடை அடைக்கப்படும்.
மகரவிளக்கு பூஜை: பின்னர் மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்படும். 31ஆம் தேதி முதல் 2024ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி வரை மகரவிளக்கு பூஜைகள் நடைபெறும். அன்று மாலை 6.30 மணிக்கு மகர ஜோதி தரிசனம் நடைபெறும். தொடர்ந்து 19ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். 20ஆம் தேதி காலையில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனத்திற்கு பின்னர் கோவில் நடை அடைக்கப்படும். அன்றுடன் நடப்பு மண்டல மகரவிளக்கு சீசன் நிறைவுபெறும்.
முன்பதிவு அவசியம்: ஐயப்பனை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம். பக்தர்கள் https://sabarimalaonline.org எனும் இணையதள முகவரியில் தரிசனத்திற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில், நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் பாதுகாப்பு: இந்தாண்டும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிலக்கல்லில் நிறுத்த வேண்டும். இங்கிருந்து கேரள அரசு பேருந்தில் பம்பை வரை செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் சுமார் 7, 500 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications