சபரிமலைக் காடு அது சாஸ்தாவின் வீடு.. ஐயப்பனுக்கு டிசம்பர் 26ல் மண்டல பூஜை! ஏற்பாடுகள் விறுவிறு!
திருவனந்தபுரம்: உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நவம்பர் 16ஆம் தேதி தொடங்கிய நிலையில் டிசம்பர் 26 ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற இருக்கிறது. தற்போது வரை 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலைக்கு வந்துள்ள நிலையில் இனி வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது தேவசம்போர்டு.
புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை தொடங்கியுள்ள நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் படையெடுத்து வருகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட தமிழகத்தின் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு தரிசனம் செய்ய வருகின்றனர்.

கடந்த 16ஆம் தேதி மண்டல பூஜை காலம் தொடங்கிய நிலையில் பக்தர்கள் வருகை ஒரு நாளைக்கு 90 ஆயிரத்தை தாண்டி வருகிறது. அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மல்ய தரிசனமும், தொடர்ந்து நெய்யபிஷேகம், கணபதி ஹோமம் நடைபெறுகிறது.
காலையில் 7 மணிக்கு உஷ பூஜையும், மதியம் 12 மணிக்கு களபாபிஷேகம். உச்ச பூஜை மேற்கொள்ளப்பட்டு ஒரு மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. மீண்டும் 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6:00 மணிக்கு தீபாராதனையும் 7:00 மணிக்கு புஷ்பா அபிஷேகமும் ஒன்பதரை மணிக்கு அத்தால பூஜையும் ஐயப்பனுக்கு செய்யப்படுகிறது. தொடர்ந்து 10:50 க்கு ஹரிவராசனம் பாடப்பட்டு 11 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.
தொடர்ந்து எரிமேலியில் இருந்து பெருவழிப்பாதை வழியாகவும், பம்பையில் இருந்து சிறு வழிப் பாதையாகவும் பக்தர்கள் நடைபயணம் மேற்கொண்டு ஐயப்பனை தரிசிக்கின்றனர். இதனால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் பொருட்டு ஆன்லைன் முன்பதிவு மற்றும் ஸ்பாட் புக்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நீண்ட நேரம் காத்திருக்காமல் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 92 ஆயிரம் பக்தர்களும், நேற்று 96 ஆயிரம் பக்தர்களும் தரிசனம் செய்திருக்கின்றனர். இதனால் கூடுதலாக பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து சரங்குத்தியிலிருந்து பக்தர்கள் தடுக்கப்பட்டு 300 பேராக அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் டிசம்பர் 18ஆம் தேதி நிலவரப்படி சுமார் 26 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில் நேற்று வரை 28 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மண்டல பூஜைக்கு இன்னும் ஆறு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் சபரிமலை சன்னிதானத்தில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் 22ஆம் தேதி காலை 6 மணிக்கு ஆரன்முலா பார்த்தசாரதி கோவிலில் தங்க அங்கி தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டு 25ஆம் தேதி மதியம் பம்பை வந்தடையும். அங்கு கணபதி கோவிலில் தங்க அந்தி தரிசனத்துக்காக வைக்கப்பட்டு அங்கிருந்து தலைசுமையாக சன்னிதானம் கொண்டு செல்லப்படுகிறது.
அன்று மாலையே 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து 26ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறும். அன்று அதிகாலை 3:30 மணிக்கு நெய் அபிஷேகம் தொடங்கி 11 மணிக்கு நிறைவடைகிறது. மதியம் 12 மணிக்கு தங்க அங்கி அறிவிக்கப்பட்டு மண்டல பூஜை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து நடை அடைக்கப்பட்டு மீண்டும் 4 மணிக்கு திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 11 மணிக்கு நடை அடைக்கப்படும். அதன் பிறகு மகர விளக்கு கால பூஜைகளுக்காக டிசம்பர் 30-ம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும் என சபரிமலை தேவசம் போர்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications