மூலிகை சாம்பிராணி.. வீடெல்லாம் மகிழ்ச்சியும், மணமும் பரவும்.. தெய்வீக தூபம் தரும் அற்புத ஆன்மீக பலன்
சென்னை: 36 வகையான மூலிகை பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் தெய்வீக சாம்பிராணி பற்றி தெரியுமா? 7 வகையான பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் தெய்வீக தூபம் பற்றி தெரியுமா? இவைகளை எப்படி தயாரிக்க வேண்டும்? இதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன? சுருக்கமாக பார்ப்போம். ஒவ்வொரு மூலிகைக்கும் ஒவ்வொரு சிறப்புகள் உள்ளன.. அதனால்தான் சில முக்கிய மூலிகைகளை கொண்டு, சாம்பிராணி தயாரித்து, அதை வீடுகளில் பயன்படுத்துகிறார்கள்.
மருதாணி: குறிப்பாக, வெள்ளை குங்கிலியம், கருப்பு குங்கிலியம் இரண்டையும் நன்றாக தூள் செய்து கொள்ள வேண்டும். இதில், மருதாணி, துளிசி, வில்வம், நொச்சி, தும்பை, கரிசலாங்கண்ணி, சீந்தல், அருகம்புல், தூதுவளை, வேப்பிலை போன்ற அனைத்தையும் பவுடராக்கி கொண்டு, ஒன்று கலக்க வேண்டும்.

அதேபோல, ஆவாரம் பூ, வெட்டிவேர், நாய்கடுகு, வெண்கடுகு, சடாமஞ்சி, மருதாணி விதை, நன்னாரி, பச்சைக் கற்பூரம், வலம்புரி காய், இடம்புரி காய், அகில், துகில், கருங்காலிப்பட்டை, தேவதாரம் பட்டை, அரசங்குச்சி, நாவல் மர குச்சி, ஆலங்குச்சி இவைகளையும் மிஷினில் தந்து நன்றாக பொடித்து கொள்ள வேண்டும். இப்போது அனைத்து பவுடர்களையும் ஒன்றுகலந்து, இதனுடன் ஜவ்வாது, புனுகு, சந்தனம், தசாங்கம்பொடி போன்றவையும் இடித்து ஒன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும்.
மூலிகை பொடி: வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமையில் வீட்டில் சாம்பிராணி புகை போடும்போது, அதனுடன் இந்த மூலிகை பொடியிலிருந்து ஒரு ஸ்பூன் சேர்த்து தூபம் போட்டு வர வேண்டும். இப்படி தொடர்ந்து செய்வதால், வீட்டிற்குள்ளிருக்கும் தீயசக்திகள் விலகி, நல்ல நல்ல காரியங்கள் வீட்டில் தொடர்ந்து நடைபெற துவங்கும்.. வீட்டிற்குள் தெய்வீக கடாட்சம் நிறைந்து காணப்படும்.. இறைசக்தி இருப்பதையும் உங்களால் உணர முடியும்.
அதேபோல 7 வகையான மூலிகையை பயன்படுத்தியும், தூபம் போடலாம். குறிப்பாக, பைரவருக்கு உகந்த வெண்கடுகு, நாய்கடுகு, மகாலட்சுமிக்கு உரிய மருதாணி விதை, விநாயகருக்கு உரிய அருகம்புல் பொடி, சிவன், சக்திக்கு உரிய வில்வப்பொடி, வேம்பு பொடி, குங்கிலியம் போன்ற பொருட்களை எல்லாம் ஒன்றாக அரைத்து, தூள் செய்து கொள்ள வேண்டும்.
விஷ ஜந்துக்கள்: இந்த பவுடரை, சாம்பிராணியுடன் சேர்த்து, வாரத்திற்கு 3 முறை வீட்டில் தூபம் போட்டு வரலாம். இப்படி 48 நாட்கள் செய்து வந்தால், வீட்டிலுள்ள வறுமை நீங்கும்.. இந்த பொடி, நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கிறது. எனவே, தொடர்ந்து சாம்பிராணியுடன் பயன்படுத்தி வரும்போது, வீட்டிற்குள் நல்ல சக்தி பரவி நிலைக்கும்.. வீட்டிற்குள் விஷ ஜந்துக்கள் இருந்தாலும், இந்த வாசனைக்கு வெளியேறிவிடும்.












Click it and Unblock the Notifications