Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சகுனங்களும் பலன்களும்.. காகம் தலையில் தட்டுதே.. காரிய தடை வருமோ.. யோசிக்கிறீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் ஒரு நல்ல காரியத்திற்காக சென்று கொண்டிருக்கும் போது காகம் நம்முடைய தலையில் தட்டும் அப்போது மனதிற்கு நெருடலாகவே இருக்கும். அதே போல சிலரது தலை மேல் காகம் பறந்து வந்து எச்சமிடும். இப்படிப்பட்ட விசயங்கள் நல்லதாக இருக்குமா? ஏதாவது ஆபத்து வருமோ? நாம் போகும் காரியம் தடையாகுமோ என்று யோசிப்பார்கள். சகுனங்கள் சொல்லும் பலன்களை பார்க்கலாம்.

சகுனங்கள்: நம்முடைய முன்னோர்கள் எந்த ஒரு நற்காரியத்தையும் சகுனம் பார்த்து செய்வதையே வழக்கமாக வைத்திருந்தனர். நம் நாட்டில் இன்றைக்கும் சகுனம் பார்த்து பல காரியங்கள் செய்கின்றனர். பூனை குறுக்கே போனால் சகுனத்தடையாக நினைக்கின்றனர். அதே போல பல்லி சாஸ்திரம், பஞ்ச பட்சி சாஸ்திரம் படித்து அதன்படி பல காரியங்களில் முடிவு எடுக்கின்றனர். கிளி ஜோதிடம் பார்த்து எதிர்காலத்தை தெரிந்து கொள்பவர்கள் இன்றைக்கும் பலர் இருக்கின்றனர். பயணம் செய்யும் போது நிறைகுடம் கொண்டு வரும் பெண் எதிரே வந்தால் நல்லது நடக்கும் என்று நம்பினார்கள். துணி துவைப்பவர்கள் அழுக்கு துணி சேகரித்துக்கொண்டு எதிரே வந்தால் நாம் போகும் காரியம் ஜெயமாகும் என்ற நம்பிக்கை இருந்தது. அதே போல நம்முடைய உறவினர்கள் போலவே நம்முடன் இருக்கும் காகங்கள் சில சகுனங்களை உணர்த்தும்.

Sagunangal tharum palangal in Tamil: Kagam sollum Sagunangal Kagam Kothuvathu Nallatha

காகங்கள் உணர்த்தும் சகுனம்: வராஹமிஹிரரின் பிருஹத் சம்ஹிதாவில் காக்கைகள் பற்றி பல குறிப்புகள் உள்ளன 1500 ஆண்டுகளுக்கு முன் காக்கைகள் பற்றி நூற்றுக் கணக்கில் சமஸ்கிருத ஸ்லோகங்களை எழுதி வைத்திருக்கிறார். விவசாயம், மற்றும் மரங்களுக்கு வரும் வியாதிகள், நிலத்தடி நீர் கண்டுபிடிப்பது, கோவில் கட்டுவது, விக்ரகம் வைப்பது, சகுன சாஸ்திரம், கட்டிடம் கட்டுவது, வீடுகளின் வகைகள், மலர்கள், யானை, குதிரை, பசுமாடுகள் தொடர்பான சாஸ்திரங்கள், வானிலை, மழை, மேகம் தொடர்பான சாஸ்திரங்கள் அதில் எழுதப்பட்டுள்ளன.

காகம் கட்டும் கூடுகள்: ஒரு மரத்தில் காக்கையின் கூடு எந்தக் கிளையில் இருக்கிறது என்றும் அதற்கும் மழைக்கும் உள்ள தொடர்பு பற்றியும் வராஹமிஹிரர் எழுதியுள்ளார். வைகாசி மாதத்தில் நல்ல ஒரு மரத்தில் காகம் கூடு கட்டினால் தானிய விளைச்சல் அமோகமாக இருக்கும். ஒரு பட்டுப்போன மரத்தில்கூடு கட்டினால் பஞ்சம் அழிவு ஏற்படும். மரத்தின் கிழக்குப் புற கிளையில் கூடு கட்டினால் இலையுதிர் காலத்தில் மழை பெய்யும். மேற்குக் கிளையில் கூடு கட்டினால் மழைக்காலத்தில் மட்டும் மழை பெய்யும். தெற்கு மற்றும் வடக்கு கிழக்கு கிளைகளில் கூடு கட்டினால் மழைக்காலத்துக்கும் காற்றடி காலத்துக்கும் இடையே மழை பெய்யும். மரத்தின் உச்சியில் கூடு கட்டினால் ஆவணி,புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய 4 மாதங்களுக்கு மழை கொட்டும். தென்கிழக்கு திசை கிளையில் கூடு கட்டினால் அவ்வப்போது மழை பெய்யும். தென்மேற்கு திசையில் கூடு கட்டினால் காற்றடிக் கால பயிர்கள் தழைக்கும். கோவில்கள், வீடுகள், முட்புதர்கள் முதலிய இடங்களில் கூடு கட்டினால் பசி, பட்டினி, பஞ்சம் வரும்.

அழிவை எச்சரிக்கும் காகங்கள்: ஒரு கிராமத்தின் நடுவில் காரணம் இன்றி காக்கைகள் கூட்டம் போட்டு சத்தம் எழுப்பினால் பஞ்சம் வரும். ஊரைச் சுற்றிச்சுற்றி வந்தால் எதிரிகள் முற்றுகை இடுவர். பல குழுக்களாகப் பிரிந்து சத்தம் எழுப்பி எச்சரித்தால் அழிவு ஏற்படும். சுனாமி, பூகம்பம், திடீர் வெள்ளம் ஆகியவற்றுக்கு முன் இப்படி பறந்துள்ளன. காகங்கள் இரவில் வலம் வந்தால் ஊருக்கு அழிவு! ஒரு தனி மனிதனை காகம் வலம் வந்தால் அவனுக்கு சொந்தக்காரர்கள் இடமிருந்து தொல்லை ஏற்படும். இடம் இருந்து வலம் போனால் எதிரிகள் இடமிருந்து தொல்லை ஏற்படும். துணிச்சலாக மக்களைத் தாக்கினால் எதிரிகள் பெருகுவர்.

பட்டம் பதவி கிடைக்கும்: தங்க நகை வரும்: காகம் மஞ்சள் நிற பொருட்களை உங்களிடம் இருந்து பறித்துச் சென்றால் நீங்கள் தங்க நகைகளை இழப்பீர்கள். அது மஞ்சள் நிறத்தைக் கொண்டுவந்தால் உங்களுக்கு தங்கம் கிடைக்கும் என எழுதப்பட்டுள்ளது. ஒருவரின் குடைகள், செருப்புகள், வண்டிகள், கருவிகளை காக்கைகள் தாக்கினால் அவருக்கு ஏதோ ஆபத்து வரப்போகிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். காகங்கள் மண்ணையோ, தானியங்களையோ, பூக்களையோ கொத்தி வந்து நம் மீது போட்டால் தன லாபம். பட்டம் பதவிகள் கிடைக்கும். குடைகள், வண்டிகள், சட்டையில் எச்சம் போட்டால் செல்வமும் உணவும் கிடைக்கும்! கலயங்கள், விலையுயர்ந்த பொருட்களைத் தூக்கிச் சென்றால் பொருள் இழப்பு என்பதை உணர்த்துகின்றன.

காகமும் ஆட்சி மாற்றமும்: ஒரு காக்கை 3 அல்லது 4 குஞ்சு பொறித்தால் அமோக உணவு விளைச்சல். ஐந்து குஞ்சுகள் பொறித்தால் ஆட்சி மாற்றம் ஏற்படும். அதற்கு பதிலாக காகங்கள் ஒரே முட்டை இட்டாலோ, முட்டையே இடாமல் இருந்தாலோ கூட்டில் இருந்து முட்டைகளை தள்ளி உடைத்து விட்டாலோ நல்லதல்ல என்கிறார் வராஹமிஹிரர்.

காகங்கள் தட்டினால் என்ன பலன்: பயணம் செல்லும் போது வாகனம், குடை, காலணி ஆகியவற்றின்மீது எச்சம் இட்டால், பயணத்தின்போது உணவுக்குப் பஞ்சம் இருக்காது; நல்ல உணவு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. நடந்து செல்லும் போது சிலரது தலையில் காகம் தட்டும். அப்படி ஒருவருடைய வாகனம், குடை, காலணி அல்லது அவர் உடல், நிழல் ஆகியவற்றை காகம் தன் சிறகால் தீண்டினால், பயணத்தின்போது அவருக்கு மரணத்திற்கு சமமான பாதிப்பு ஏற்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதே நேரம், பூஜை செய்வது போன்று காகம் பூக்களைக் கொண்டு மேலே தூவினால், அந்தப் பயணத்தால் பலவிதமான தன லாபம் ஏற்படும்.

லாபம் தரம் பொருட்கள்: பயணம் செல்லும் போது காகம் எந்தப் பொருளைத் தன் அலகால் கொண்டு வருகிறதோ, அந்தப் பொருளின் வகையிலான லாபம் பயணத்தில் கிடைக்கும். உதாரணமாக, சிவப்பு நிறப்பொருள் தங்கம் வகையிலான லாபத்தையும், வெண்ணிறப் பொருள் வெள்ளி லாபத்தையும், பஞ்சு போன்றவை வஸ்திர லாபத்தையும் குறிக்கும். இது போன்ற உள்ள பொருட்களை அந்த இடத்திலிருந்து காகம் எடுத்துச்செல்வதுபோல் கண்டால், அந்தந்த வழிகளில் நஷ்டம் ஏற்படும் என்று அர்த்தம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+