சனி அமாவாசை..ஆனி அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்..பித்ரு தோஷம் நீங்கி சுபிட்சம் பெருகும்
மதுரை: ஆனி மாதம் இறை வழிபாடு மேற்கொள்ளதக்க ஒரு சிறப்பான மாதமாக இருக்கிறது. இந்த ஆனி மாதத்தில் வருகிற அமாவாசை தினத்தில் தர்ப்பணம் தந்து நமது முன்னோர்களை வழிபடுவதால் குடும்பத்தில் சுபிட்சங்கள் பெருகும். சனி அமாவாசையும் ஆனி அமாவாசையும் இணைந்து வரும் நாளில் திதி கொடுத்து தர்ப்பணம் அளித்தால் பித்ரு தோஷம் நீங்கி குடும்பத்தில் சுபிட்சங்கள் அதிகரிக்கும்.
சூரியன் மிதுன ராசியில் பிரவேசிக்கும் மாதமே ஆனி மாதம் எனப்படுகிறது. அந்த வகையில் நாளை வெள்ளிக்கிழமை ஆனி மாத அமாவாசை பிறக்கிறது. சனிக்கிழமை ஆனி அமாவாசை திதி வருகிறது. நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ருதோஷம் எனப்படும். ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் பித்ருதோஷம் உண்டு.லக்னம், பஞ்சமம், சப்தமம், பாக்கியம் இவ்விடங்களில் ராகு கேதுக்கள் நின்றால் பித்ரு தோஷம் ஏற்படுகின்றது. இந்த தோஷம் நீங்க ஆனி அமாவாசையன்று நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம். பலன்கள் என்ன என்பதை இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

மனித வாழ்க்கையில், ஒவ்வொருவருக்கும் குலதெய்வ வழிபாடும் பித்ரு வழிபாடும் மிக மிக அவசியம். நம்முடைய தலையாயக் கடமை. அமாவாசை முதலான நாட்கள், முன்னோர் ஆராதனைக்கு உரிய நாட்கள். பித்ருக்கள் ஆசீர்வாதம் நமக்குப் பரிபூரணமாகக் கிடைக்கின்ற தருணம். மாதந்தோறும் அமாவாசை தர்ப்பணம் அளிக்க முடியாதவர்கள் ஆடி, புரட்டாசி, தை அமாவாசை நாட்களில் முன்னோர் வழிபாடு செய்வது சிறப்பு.
ஆனி மாதத்தில் வருகிற அமாவாசை தினத்தில் தர்ப்பணம் தந்து நமது முன்னோர்களை வழிபடுவதால் குடும்பத்தில் சுபிட்சங்கள் பெருகும். திருமணம் காலதாமதம் ஆகும் நபர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். வீண் பண விரயங்கள் ஏற்படுவது நீங்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும். காரிய தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
சனிக்கிழமை அமாவாசை வருகிறது. ஆனி மாத அமாவாசை தினத்தன்று காலையில் குளித்து விட்டு, உங்கள் ஊரில் இருக்கும் ஆற்றங்கரையில் மறைந்த உங்கள் முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் தர வேண்டும். வீட்டின் பூஜையறையை சுத்தம் செய்து தீபமேற்ற வேண்டும். பின்பு உங்கள் வீட்டிலிருக்கும் மறைந்த முன்னோர்களின் படத்திற்கு பூக்கள் வைத்து, விளக்கேற்றி வணங்க வேண்டும்.
சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் போன்றவற்றை நீர் நிலைகளில் சென்று தர இயலாதவர்கள் அன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் உண்டாகும். வயதானவர்கள் இல்லாதவர்களுக்கு அமாவாசை நாளில் அன்னதானம் கொடுப்பது சிறப்பு. இதன் மூலம் குடும்பத்தில் ஏற்படும் சுப காரிய தடைகள் நீங்கும் சுபிட்சங்கள் உண்டாகும்.
தொழில் செய்யும் இடத்தில் வருமானம் வருவதால் தடை ஏற்பட்டால் ஆனி அமாவாசை தினத்தில் திருஷ்டி பூசணிகாய் அல்லது எலுமிச்சம் பழத்தை வாங்கி , அதன் மீது கற்பூரம் ஏற்றி உங்கள் தொழில், வியாபார இடங்களை திருஷ்டி கழித்து அதற்குரிய பூசணிக்காயை உடைத்தும், எலுமிச்சம் பழத்தை வெட்டி நான்கு திசைகளிலும் வீசி திருஷ்டியை கழித்திட வேண்டும். இதன் மூலம் வருமானம் வருவதில் ஏற்பட்ட தடைகள் நீங்கும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications