சனி பெயர்ச்சி பலன் 2023: சனியின் வக்ர பார்வை.. தீபாவளி வரை 4 ராசிக்காரர்கள் ரொம்ப உஷார்
சென்னை: கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்யும் சனி பகவான் ஐப்பசி மாதத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார். தீபாவளிக்கு முன்பாகவே சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் நிகழும். சனி பகவானின் வக்ர பார்வையால் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்கள் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்று பார்க்கலாம்.
துலாம்: சனி பகவான் வக்ர நிலையில் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். பண வருமானம் அபரிமிதமாக இருக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். கடன் வாங்கி வீடு, மனை, வண்டி வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பு அமையும். வேலை இல்லாமல் சுற்றி திரிந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். கையில் தாரளமாக பணப்புழக்கம் இருந்து வரும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்பு அமையும். உடன் பிறந்தவர்களுக்கு வேலை மற்றும் சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். உறவினர்களால் எதிர்பாராத நன்மை ஏற்படும். மூத்த சகோதரர்களுடன் கருத்து மோதல்கள் ஏற்படும். கடன் பிரச்சினைகள் நீங்கும். தீராத நோய்கள் தீரும். சனிக்கிழமையில் சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடவும்.

விருச்சிகம்: சனிபகவான் தற்போது உங்களுடைய ராசிக்கு அர்த்தாஷ்டம சனியாக பயணம் செய்கிறார். புதிய விஷயங்களைக் கற்க சந்தர்ப்பம் அமையும். எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும். புதிய ஆடை, ஆபரணங்கள், வண்டி வாகனங்கள் வந்து சேரும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கவும். வேலைக்கு ஏற்ற ஊதிய உயர்வும் கிடைக்கும். கையில் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பும், லாபமும் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி, தகவல் தொடர்பு துறைகளில் லாபம் அதிகரிக்கும். சனி பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. தங்க நகைகளை கவனமாகக் கையாளுங்கள். நவம்பர் மாதத்திற்கு மேல் எடுக்கும் முயற்சிகள் சாதகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களைக் ஆலோசிக்காமல் எந்த ஒரு முக்கிய முடிவும் எடுக்க வேண்டாம்.
தனுசு: சனி பகவான் உங்களுடைய ராசிக்கு மூன்றாவது வீட்டில் பயணம் செய்கிறார். ஏழரை சனி காலம் முடிந்த நிலையில் சனி பகவான் மீண்டும் வக்ர நிலையில் பயணம் செய்வதால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். மாணவர்களில் சிலருக்கு உயர்கல்வி பயில வெளிநாடு செல்லும் யோகமும் ஒரு சிலருக்கு அமையும். விரயச் செலவுகள் அடிக்கடி வந்து போகும். வீடு மற்றும் ஊர் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்யத்தில் அக்கறை காட்டவும். சனி பகவானால் ஏற்படும் பாதிப்புகள் குறைய திருநள்ளாறு நள தீர்த்தக்குளத்தில் நீராடி சனிபகவானை வணங்கலாம்.
மகரம்: உங்கள் ராசி நாதன் சனி பகவான் தற்போது இரண்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். ஏழரை சனியில் பாத சனி நடந்தாலும் தன ஸ்தான சனி பகவான் பின்னோக்கி செல்லும் போது எதிர்பாராத தனவரவும் பொருள் வரவும் கிடைக்கும். முன்னோர்கள் சொத்து கணவன் அல்லது மனைவி மூலம் வருமானம் வந்து சேரும். கொடுத்த பணம் வட்டியுடன் வந்து சேரும். கைக்கு வராத பணம் வந்து சேரும். ஏற்றுமதி இறக்குமதி நல்ல லாபகரமாக அமையும். தீபாவளிக்குப் பிறகு சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடக்க சந்தர்ப்பம் அமையும். திடீர் திருப்பங்கள் ஏற்படும். பழைய நண்பர்களை சந்திப்பார்கள். குடும்பத்தோடு புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பணியிடங்களில் வேலைப்பளு ஏற்படும். வார்த்தைகளில் கவனமும் நிதானமும் அவசியம்.
கும்பம்: உங்களுடைய ராசிநாதன் சனி பகவான் ஜென்ம சனியாக உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். நவம்பர் மாதம் வரைக்கும் பின்னோக்கி பயணம் செய்யும் சனிபகவானால் தள்ளிப் போன சுபகாரியங்கள் விரைவில் நடைபெறும். வேலை விசயமாக வெளியூர் மற்றும் வெளி மாநிலம் செல்வதற்கு ஒரு சிலருக்கு வாய்ப்புகள் தேடி வரும்.மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் தேடி வரும். வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் அமையும். வீடு வாங்கும் யோகம் தேடி வரும். கடன் பிரச்சினை இருந்தாலும் பணம் பல வழிகளில் இருந்தும் வந்து சேரும். வெளி வட்டாரப் பழக்க வழக்கங்கள் சாதகமாகவும் அவர்களால் நன்மையும் ஏற்படும். திருமணம் கைகூடி வரும். பிள்ளைகளுக்கு திருமணம் நடைபெறும் காலமாகும். விலையுயர்ந்த பொருள்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். யாரையும் நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
மீனம்: சனி பகவான் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் இருக்கிறார். வக்ர நிலையில் பயணம் செய்வதால் இதுவரை வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். இடம், வீடு, வண்டி, வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் தாமகவே அமையும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். கொடுத்துள்ள பணம் பொருள்கள் தவணை முறையில் வந்து சேரும். விசா, பாஸ்போர்ட், விஷயங்கள் சாதகமாக அமையும். வேலையின் நிமித்தம் வேலைக்காக வெளியூர் மற்றும் வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் வந்து சேரும். விரைய சனி காலம் என்பதால் திடீர் செலவுகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தேய்பிறை அஷ்டமி நாளில் காலபைரவருக்கு தேய்பிறை மிளகு தீபம் ஏற்றி வழிபடலாம்.












Click it and Unblock the Notifications