செவ்வாழை பரிகாரம்.. 21 நாட்கள் செவ்வாழைப்பழத்தில் மாலை.. மகிழ்ச்சி, பணம், பதவி அசால்ட்டா கிடைக்குமே
சென்னை: நினைத்த வேலை கிடைக்க வேண்டுமா? உயர் பதவிக்கு செல்ல வேண்டுமா? வீட்டிலுள்ள வறுமை, துன்பம் நீங்கவேண்டுமா? இதோ செவ்வாழைப்பழத்தில் எளிய பரிகாரங்களை செய்யலாம். முழு மனதுடன், இந்த பரிகாரத்தை செய்யும்போது, நினைத்த காரியம் கைகூடும் என்பார்கள்.
செவ்வாழை பழத்தில் வைட்டமின் C, இரும்புச்சத்து, நார்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. ரத்த சோகை இருந்தால், தினமும் 1 அல்லது 2 பழம் சாப்பிட்டு வந்தாலே போதும்.

நெஞ்செரிச்சல் இருந்தால் 1 மாதம் வரை தொடர்ச்சியாக செவ்வாழை சாப்பிட்டுவந்தாலே போதும். நரம்புத்தளர்ச்சி உள்ளவர்கள் 48 நாட்களுக்கு செவ்வாழையை சாப்பிட்டு வந்தாலேபோதும்.
செவ்வாழை நன்மை: தினமும் 100 கிராம் செவ்வாழையை சாப்பிட்டு வந்தால், கண் கோளாறுகள் ஏற்படுவதில்லை. தினந்தோறும் செவ்வாழை சாப்பிடுவதால், உடலுக்கு சத்துக்களில் 60 சதவீதத்தை பெறலாம். பெண்கள் செவ்வாழைய சாப்பிட்டால் கர்ப்பப்பை பலப்படும். இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், வைட்டமின் B6 கருவுறுதலின் விகிதத்தை அதிகரிக்க செய்வதுடன், கருமுட்டைகள் சிதையாமலும் பாதுகாக்கின்றன..
இப்படி எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்ட செவ்வாழை, ஆன்மீகத்திலும் முக்கியத்துவம் பெறுகிறது.. செவ்வாழை பழத்தை பிசைந்து முருகனுக்கு அபிஷேகம் செய்யலாம். எந்தவொரு முருகர் கோயிலிலும், இந்த பஞ்சாமிர்தத்தில் அபிஷேகம் செய்து வரும்போது, உங்களுடைய கோரிக்கை நிறைவேறும்.
செவ்வாய்க்கிழமை: குறிப்பாக செவ்வாய்க்கிழமைகளில், முருகனுக்கு செய்யும் இந்த அபிஷேகம்.. வாழ்க்கையில் அடுத்த முன்னேற்ற நிலைமைக்கு உங்களை கொண்டு செல்லும்.. அதேபோல, செவ்வாழைப்பழத்தை வாங்கி, யாசகம் கேட்பவர்களுக்கு தானம் தரலாம்.
அதேபோல விநாயகருக்கு 9 செவ்வாழை பழங்களை மாலையாக கோர்க்கலாம். இப்படி 12 வாரங்கள் விநாயகருக்கு செவ்வாழை பழங்களை மாலையாக கோர்த்து, வாரந்தோறும் புதன்கிழமையன்று வழிபட்டு வர வேண்டும். தொடர்ந்து 12 வாரங்கள் வழிபட்ட பிறகு சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் படைத்து வழிபாட்டை முடித்துக் கொள்ள வேண்டும்.. இப்படி செய்வதால், 12 வாரத்திற்குள் விரும்பிய வேலை உங்களுக்கு கிடைக்குமாம்.. நேர்காணல் என்றாலும், உங்களால் சிறப்பாக பங்கேற்று வெற்றி பெற முடியும்.
பரிகாரம்: அதேபோல, செவ்வாழை பழத்தில் வேறுவிதமான பரிகாரமும் செய்யலாம்.. இதற்கு பூஜைக்காகவும், உங்களுக்கெனவும் தனித்தனியாக செவ்வாழைப்பழங்களை வாங்கி வைத்து கொள்ள வேண்டும்.
வியாழக்கிழமைகளில் 21 செவ்வாழை பழங்களை பூஜை அறையில் வைத்து ஒருவேளை விரதமிருந்து, இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். 21 செவ்வாழை பழங்களை வைத்து, பூஜித்து மனதார வழிபட்டு வரும்போது, எப்பேர்ப்பட்ட வறுமையும், கஷ்டமும் நீங்கி, வீட்டிற்குள் பணவரவு அதிகரிக்கும். பிரார்த்தனை முடிந்ததுமே, இந்த செவ்வாழை பழங்களை யாசகம் கேட்போர் அல்லது கஷ்டப்படுபவர்களுக்கு தானம் செய்யலாம்.
தெய்வ அருள்: அதேபோல, தினமும் ஒரு செவ்வாழை பழம் வீதம் 21 நாட்கள் செவ்வாழை பழங்களை நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.. இதனால், குரு அருளையும், விநாயகர், மகாலட்சுமி அருளையும் பெற முடியும்.












Click it and Unblock the Notifications