கோதுமை பால்.. சம்பளம் கையில் தங்க, அரசு வேலை கிடைக்க.. இந்த ஒரே பரிகாரம் போதுமே.. ஆச்சரிய வன்னி மரம்
சென்னை: அரசு வேலை என்பது பலருக்கும் கனவாகவே இருக்கிறது.. அதேபோல, பாடுபட்டு உழைத்தாலும் சம்பளம் சிலருக்கு கையில் தங்குவது இல்லை.. இதற்கெல்லாம் எளிய பரிகாரங்கள் வாஸ்துவில் சொல்லப்பட்டுள்ளன. அதில் ஒருசிலவற்றை பார்ப்போம்.
அரசு வேலை கிடைக்க வேண்டும் என்றால், அல்லது தற்போதுள்ளதைவிட உயர்ந்த வேலைக்கு செல்ல வேண்டுமானால், சூரிய நமஸ்காரம் மிகவும் முக்கியம்.. சூரியனை வணங்கும்போது உங்கள் இரண்டு கைகளாலும் தண்ணீரை எடுத்து அவர் மீது ஊற்றி அபிஷேகம் செய்வது போல, தரையில் ஊற்ற வேண்டும்.

சூரிய நமஸ்காரம்: அத்துடன், "ஓம் சூர்யாய நமஹ" என்ற மந்திரத்தையும் சொல்ல வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், அரசாங்க வேலைக்கான வாய்ப்புகள் உங்களை தேடி அதிகமாக வரக்கூடும்.. தினமும் காலையில் குளித்து முடித்து, சூரிய நமஸ்காரம் செய்வதால், வருமானம் நிரந்தரமாக வரத்துவங்குவதுடன், வேலை இல்லாதவர்களுக்கும் வேலை விரைந்து கிடைக்கும்.
சிலரது ஜாதகத்தில் தோஷங்கள் இருந்தாலும் வேலை கிடைப்பதில் சிரமம் ஏற்படலாம். இதற்கு படிகார கல், 3 மிளகு, 2 துண்டு பட்டை எடுத்து வலது கையில் வைத்து மூடி, உங்கள் தலையை சுற்றி 21 முறை சுற்றி கொள்ள வேண்டும். பிறகு இந்த பொருளை, ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி அல்லது ஓடும் நீரில் போட்டுவிடலாம்.
கணபதி வழிபாடு: எந்த காரியத்தை துவங்குவதானாலும் அதற்கு துணையாக இருப்பது கணபதி வழிபாடுகள்தான்.. கணபதியை வழிபட்டாலே, வேண்டுதல்கள் விரைந்து நிறைவேறிவிடும். எனவே, சதுர்த்தி நாளில், விநாயகரை வழிபட்டால் அரசு வேலை கைகூடி வரும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
அதேபோல, தினந்தோறும் அரசமரத்தடி விநாயகருக்கு தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்து வந்தாலும் உங்களுக்கு அரசாங்க வேலை விரைவாக கிடைக்குமாம்.. ஆஞ்சநேயரை வணங்கி தினமும் அனுமன் சாலிசா படிப்பவர்களுக்கும் வேலையில் சிக்கல் இருந்தாலும் நீங்கிவிடும்.. தினமும் முடியாவிட்டாலும், செவ்வாய்க்கிழமைகளில் மட்டுமாவது அனுமன் சாலிசாவை படித்து வரலாம்.
அரசு வேலை: காவல்துறை, ராணுவம், தீயணைப்புத்துறையில் வேலையில் சேர வேண்டும் என்று நினைத்தால், செவ்வாய்கிழமைகளில் விரதம் இருந்து கந்தனை வணங்கி வரலாம்.. புதன்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று, அகல் விளக்கு ஏற்றி வழிபடலாம்.
அரசு வேலைக்காக முயற்சிக்கும் பெண்கள், எப்போதும் சிவப்பு நிற துணியை தன்னுடன் வைத்திருக்கலாம்.. மங்களகரமான நிறம் என்பதால், சிறிய அளவில் சிவப்பு நிற துணியையாவது பர்ஸ்களில் வைத்திருக்கலாம்.. மஞ்சள் நிற தோல் உடைய வாழைப்பழத்தை பிறருக்கு தானமாக தரலாம்.. காரணம் மஞ்சள் நிறம் குரு பகவானுக்கு உகந்த நிறம் என்பதால், இந்த நிற பழத்தை தானமாக தரலாம்.
தானங்கள்: பசு மாட்டிற்கு கீரை, வெல்லம், கோதுமை மாவு போன்றவற்றை தந்து வந்தாலும், அரசு வேலை கிடைக்கலாம். அதேபோல, காகங்கள், புறா, கிளி போன்ற பறவைகளுக்கும் தானியங்களை வழங்கி வரலாம். இதனால், அனைத்து உயிர்களின் ஆசீர்வாதங்களும் உங்களுக்கு கிடைக்கும்.
வன்னி மர செடியை நட்டு வளர்த்து வந்தாலும், உங்களது அரசுப்பணியின் கனவை நினைவாகும். வன்னி மர செடியை வாங்கி வந்து,. வீட்டில் வைத்து நாள்தோறும் தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும்.. இந்த செடி ஓரளவு பெரிதாக வளர வேண்டும். அதுவரை வீட்டிலேயே தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும்.
கோதுமை பால்: ஊற வைத்த கோதுமையை மிக்ஸியில் அரைத்து, வடிகட்டி வரும் மஞ்சள் கலந்த வெள்ளை நிற பாலை, வீட்டில் வளர்த்து வரும் வன்னி மரத்திற்கு ஊற்ற வேண்டும்.. வாரத்தில் ஒரு நாள் கோதுமை பாலை வன்னி செடிக்கு ஊற்றலாம்..
இந்த செடி சிறிது பெரிதாக வளர்ந்ததுமே, உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு, அந்த வன்னி மர செடியை தானமாக தந்துவிட, வேண்டும்.. அத்துடன், வன்னி மரத்தை உங்கள் கைகளாலேயே நட்டு வைத்து வர வேண்டும். கோயிலில் செடியை நட்டு வைத்தாலும், அது செழித்து வளரும்வரை, அதற்கு தேவையானதை செய்து கொண்டே இருக்க வேண்டும். இந்த பரிகாரத்தை முறையாக செய்து முடித்துமே, நீங்கள் வேண்டிக் கொண்ட அரசு வேலை கிடைத்துவிடுமாம்.












Click it and Unblock the Notifications