நிலம், சொந்த வீடு வாங்க ஆசை? கேட்டதை தீர்த்து வைக்கும் சிறுவாபுரி முருகன்.. சொத்து விவகாரமும் தீருமே

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறுவாபுரிக்குச் சென்று இதயசுத்தியுடன் வணங்கினால், நினைத்த காரியம் விரைந்து நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.. அப்படியென்ன இந்த கோயிலில் சிறப்பு உள்ளது? யார் யாரெல்லாம் இந்த கோயிலுக்கு சென்று வேண்டி கொள்ளலாம்? என்னென்ன பிரச்சனைகளுக்கு சிறுவாபுரி முருகன கோயிலுக்கு சென்று பிரார்த்திக்கலாம்? சுருக்கமாக பார்க்கலாம.

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறுவாபுரி.. சென்னையிலிருந்து செங்குன்றம் காரனோடை அல்லது மீஞ்சூர் பொன்னேரி வழியாகவும் சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு செல்லலாம்.. சின்னம்பேடு, சிறுவை, தென் சிறுவாபுரி, குசலபுரி என்று இன்னும் பல பெயர்கள் இந்த கோயிலுக்கு உண்டு.

spirituality siruvapuri murugan Land

ராமர், லட்சுமணன், லவ குசா

இந்த பெயர் வருவதற்கு ஒரு காரணமும் உள்ளது.. அதாவது ராமர் பட்டாபிஷேகத்திற்கு பிறகு அகஸ்தியர் சொன்னபடி, அஸ்வமேத யாகத்தை தொடங்கினார். பிறகு பலிபீடக் குதிரை அனுப்பி வைக்கப்படுகின்றன.. அந்த குதிரை வால்மீகி முனிவரின் ஆசிரமத்திற்கு வந்துள்ளது.

உடனே அங்கிருந்த லவா-குசா 2 பேரும் குதிரையை கட்டிப் போட்டு தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர். இந்த விஷயம் தெரிந்த ராமர், குதிரையை மீட்க லட்சுமணனுக்கு உத்தரவிடுகிறார்- ஆனால் லட்சுமணனால் அந்த 2 குழந்தைகளையும் வெல்ல முடியவில்லை. கடைசியில் ராமரே நேரடியாக வந்து, சிறுவர்களான லவ குசனுடன் போர் புரிந்தார்.. அதனால்தர்ன, இது சிறுவா பொற் புரி என்று அழைக்கப்பட்டு, நாளடைவில் சிறுவாபுரி என மருவியது.

ராஜகோபுரம், கொடி மரம்

அந்தவகையில், ராமருக்கும் லவகுசனுக்கும் போர் நடந்த இடம் இதுவாகும். அதேபோல முருகப் பெருமான் வள்ளியை திருமணம் செய்வதற்கு செல்லும் வழியில் சிறுவாபுரியில் இளைப்பாறி சென்றதாகவும் புராணம் கூறுகிறது. அதேபோல, அருணகிரிநாதர் திருப்புகழில் இந்த திருத்தலம் பற்றி பாடியுள்ளார்.

5 நிலைகளைக் கொண்ட ராஜ கோபுரமும் உயரமான கொடிமரமும் இந்தக் கோயிலின் சிறப்பு அம்சங்களாகும்.. மூலவர் பால சுப்ரமணிய சுவாமி நான்கரை அடி உயரத்தில் காட்சி தருகிறார். திருக்கார்த்திகை, நவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

சொந்த வீடு ஆசை

சொந்தமாக வீடு அமையவேண்டும் என்று நினைப்பவர்கள்தான் பெரும்பாலும் இங்கு வந்து வேண்டிக் கொள்வார்கள். ஆனால், நிலம், வீடு, வீட்டு மனை என பூமி சார்ந்த விவகாரங்களில் அவதிப்படுபவர்கள், இந்த கோயிலுக்கு வந்து வணங்கி சென்றால், வெற்றி கிடைக்கும். அதேபோல வழக்குகள், சொத்து விவரங்கள் பிரச்சனை இருந்தால், உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று பன்னீர் திராட்சை சாற்றி அபிஷேகம் செய்யலாம்.

அதேபோல, ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் சனி இணைவுள்ளவர்கள் இங்கு வந்து கொண்டைக்கடலை வைத்து நெய்வேத்தியம் செய்தால் உரிய பலனை பெறலாம்..

தீராத நோயும் தீரும்

தீராத நோயில் அவதிப்படுபவர்கள், இந்த கோயிலுக்கு வந்து 48 நாட்கள், நெல்லி முள்ளி பொடி கொண்டு அபிஷேகம் செய்து வரவேண்டும்.. 48 நாட்களும் வரவேண்டிய அவசியமில்லை.. ஆனால், கோவில் அர்ச்சகரிடம், அந்த பொடியை தந்து கொடுத்து அபிஷேகத்தில் சேர்க்க செய்தால் போதும். மிதுன லக்ன மற்றும் கன்னியா லக்ன ஜாதகர்கள் பிள்ளை வரம் வேண்டுபவர்கள், சஷ்டி திதி அல்லது புனர்பூசம் நட்சத்திரம் தினத்தில் இரட்டை வெற்றிலை இரட்டை வாழைப்பழம் வைத்து நெய்வேத்தியம் செய்து வேண்டிக் கொண்டால் பலன் பெறலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+