கனவில் வரும் சூரிய கிரகணம்.. நீரும் நெருப்பும் கண்டால் என்ன பாதிப்பு.. பலன்கள் பாருங்கள்
சென்னை: சூரிய கிரகணம் ஏற்பட்டது போல கனவு வந்தால் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று கனவு சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. சூரிய கிரகணம் முடிந்தது போல கனவு கண்டால் உங்களுக்கு நம்முடைய பிரச்சினைகள் தீரப்போகிறது என்று அர்த்தம். கனவில் நீர், நெருப்பு தொடர்பான பொருட்களை பார்த்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.
சூரியன்: நவ கிரகங்களின் தலைவன் சூரியன். ஒளிக்கடவுளான சூரியனை நாம் கனவில் காண நேர்ந்தால் நம்முடைய வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் விரைவில் நிகழும். நாம் பார்க்கும் வேலையில் புரமோசன் கிடைக்கப்போகிறது என்பதை அந்த கனவு அறிவுறுத்துகிறது. நோய்கள் நீங்கி நம்முடைய ஆரோக்கியம் அதிகரிக்கும். நிதி நிலைமையும் மேம்படும்.

நெருப்பு: நெருப்பு நம்முடைய கனவில் வந்தால் செல்வ செழிப்பு ஏற்படும் என்று பொருளாகும். ஓமகுண்டம் கனவில் வந்தால் சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும் என்று அர்த்தம். தீ பிடித்து விட்டது போல கனவு கண்டால் ஏதோ கெட்ட தகவல் தேடி வரப்போகிறது என்று அர்த்தமாகும். நெருப்பு உங்களை சுற்றி எரிவது போல கனவு வந்தால், உடல் பலமடையும் என்று அர்த்தம். நெருப்பு பற்ற வைப்பது போல கனவு வந்தால், முன் கோபத்தால் நல்ல வாய்ப்பை நழுவவிட போகிறீர்கள் என்று அர்த்தம்.
தீபம்: தீ மிதிப்பது போல் கனவு கண்டால், ஏதோ பெரிய சிக்கலில் மாட்ட போகிறீர்கள் என்று பொருள் எனவே கவனமாக இருக்க வேண்டும். விளக்கு ஏற்றுவது போல கனவு வந்தாலோ, விளக்கு எரிவது போல கனவு கண்டாலோ நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படப்போகிறது என்று அர்த்தமாகும். நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு ஆரோக்கியம் அதிகரிக்கும்.
சூரிய கிரகணம்: கிரகணங்கள் கனவில் வரக்கூடாது என்று சொல்வார்கள். சூரிய கிரகணம் ஏற்பட்டது போல கனவு வந்தால் தீமை ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
சூரிய கிரகணம் முடிந்தது போல கனவு கண்டால் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளில் இருந்து மீள போகிறீர்கள் என்று அர்த்தமாகும்.
நல்ல காலம்: நீர் தொடர்பான கனவு வந்தால் நமக்கு மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். அதிக குளிரில் நடுங்குவதை போல் கனவு கண்டால் அது ஒரு நல்ல கனவாகும். இந்த கனவு உங்கள் கெட்ட காலம் முடிந்து, இனிவரும் காலம் உங்களுக்கு செழிப்பாக இருக்கும் என்பதற்கான அறிகுறியாகும். தடைபட்ட காரியங்கள் விரைவில் நிறைவேறும்.
குளிக்கும் கனவு: குளத்தில் குளிப்பது போல கனவு கண்டால், உங்களுக்கு இருக்கும் நல்லபெயரையும், வெற்றியையும் யாராலும் தடுக்க முடியாது என்று அர்த்தம்.
குளத்து நீரில் கால் கழுவுவதை போல கனவு கண்டால், உங்களின் தரித்திரம் விலகி உங்களிடம் புது உற்சாகம் ஏற்படும். குளத்தில் தாமரை, அல்லி பூக்கள் பூத்து இருப்பது போல கனவு கண்டால், தடையற்ற பணவரவு வரும். குளத்தில் அதிகமான தண்ணீர் இருப்பது போல கனவு வந்தால், பெரிய இடத்தில் இருந்து ஆதரவு கிடைக்கும் என்று அர்த்தம்.
மழை கனவு: மழை பெய்வது போல கனவில் வந்தால் மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். இடி மின்னலுடன் மழை பெய்வது போல கனவில் வந்தால் தேவையற்ற செலவுகள் வரப்போகிறது என்று அர்த்தமாகும். அதே நேரத்தில் அருவியில் தண்ணீர் கொட்டுவது போல் கனவு கண்டால் மிகுந்த பணவரவு ஏற்பட போகிறது என்று அர்த்தம். நதியை கனவில் கண்டால் நமக்கு ஏற்பட்டிருந்த துன்பம் அனைத்தும் நீங்கப்போகிறது என்று உணர்த்துகிறது.
கடல் கனவு: உங்கள் கனவில் கடல் வந்தால், வெளிநாடுகளுக்குப் போவதற்கான வாய்ப்பு எளிதாகும். மேலும் வெளிநாட்டவருடன் வியாபாரத் தொடர்பு ஏற்பட்டு செல்வம் பெருகும் என்று உணர்த்துகிறது. கடற்கரையில் இருப்பது போல் கனவு கண்டால் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவீர்கள் என்று பொருள். கடலில் படகு அல்லது ஓடம் தண்ணீரில் மிதப்பது போல கனவு கண்டால் துக்ககரமான செய்தி வரபோகிறது என்று அர்த்தம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications