Sivanmalai: சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் கடல் நீர்! சுனாமி வருமா? பக்தர்கள் அச்சம்!
திருப்பூர்: காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலின் ஆண்டவன் உத்தரவு கண்ணாடிப் பேழையில் இன்று கடல்நீர் வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. இதை வைப்பதால் என்ன பலன்கள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். கடல் நீர் வைத்து வழிபட சொல்லியிருப்பதால் ஒருவேளை இயற்கைச் சீற்றம் நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 'ஆண்டவன் உத்தரவு' என்ற பெயரில் விநோத வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்த மலைக் கோயிலில் எந்தக் கோயிலிலும் இல்லாத ஒரு சிறப்பு அம்சமாக, இக்கோயிலில் 'ஆண்டவன் உத்தரவு' என்ற பெயரில், ஏதாவது ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜை செய்யும் வழக்கம் பின்பற்றப்படுகிறது.
பக்தர்களின் கனவில் முருகன் வந்து குறிப்பிட்ட பொருளை வைத்து வழிபட வேண்டும் என சொல்வார். அதை கேட்டுவிட்டு சிவன்மலைக்கு வந்து பக்தர்கள் பூசாரியிடம் சொல்வார்கள். அப்போது பூசாரி அந்த பக்தர்கள் சொல்வது உண்மையா பொய்யா என்பதை பூ போட்டு பார்ப்பார்.
ஒரு வேளை உண்மையாக இருந்தால் ஏற்கெனவே வழிபட்டு வரும் பொருளை கண்ணாடி பேழையில் இருந்து எடுத்துவிட்டு பக்தர்கள் சொல்லும் புதிய பொருளை வைப்பார்கள். இதனால் தான், இது 'ஆண்டவன் உத்தரவு' என்றும் அழைக்கப்படுகிறது'.
இந்நிலையில், கோவை மாவட்டம் மணியகாரம்பாளையம் இடிகரையைச் சேர்ந்த பெண் பக்தர் பவானி என்பவரின் கனவில் வந்ததாக கடல்நீர் வைத்துப் பூஜை செய்யப்பட்டு, மேற்கண்ட பொருள் கண்ணாடிப் பேழைக்குள் இன்று வைக்கப்பட்டது. இவ்வாறு காட்சிக்கு வைக்கப்படும் பொருள் தொடர்பாக ஏதேனும் ஒரு சம்பவம் நிகழும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
முன்னதாக கண்ணாடிப் பேழைக்குள் கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் பிரம்பு மற்றும் சூடம் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வந்த நிலையில், சுமார் 7 மாதங்களுக்குக் பிறகு பக்தரின் கனவில் வந்த கடல்நீர் வைக்கப்பட்டு பூஜிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
கடல் நீரை வைத்து வழிபடுவதால் சுனாமி ஏதேனும் வருமா, இல்லை கடலில் இயற்கைச் சீற்றங்கள் ஏதேனும் நடக்குமா, தற்போது வடகிழக்கு பருவமழைக் காலம் என்பதால் கடலில் ஏதேனும் ஆக்ரோஷ புயல் உருவாகுமா இல்லை கடல் சார்ந்த தொழில் வளர்ச்சி அடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்த பூஜைப் பொருள் மற்றொரு பக்தரின் கனவில் வரும் வரை, கண்ணாடிப் பேழைக்குள் இந்தப் பொருளை பக்தர்கள் பார்த்து வழிபாடுவார்கள்.
கார்கில் போர், சுனாமி, சசிகலா சிறை சென்ற விவகாரம் என நிறைய விஷயங்களை சிவன்மலை ஆண்டவர் முன்கூட்டியே மக்களுக்கு உணர்த்தியிருக்கிறார் என்பதால் இங்கு வைக்கப்படும் பொருட்களுக்கு மக்கள் மத்தியில் அத்தனை எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அது போல் பருத்தி, இளநீர், மஞ்சள் உள்ளிட்டவை வைத்து பூஜை செய்ய சொன்ன போது படுபாதாளத்தில் இருந்த அவற்றின் விலையில் உயர்வு ஏற்பட்டு விவசாயிகளின் வயிற்றில் பால் வார்க்கப்பட்டது. அது போல் கொரோனா காலகட்டத்தில் மஞ்சளை வைத்து பூஜை செய்ய சொன்ன போது நாம் கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க மஞ்சள் தூளை நிறைய பயன்படுத்தினோம். மஞ்சள் ஒரு கிருமிநாசினி. இப்படியாக பல்வேறு விஷயங்களை இந்த உத்தரவு பெட்டி உணர்த்தியுள்ளது.
-
வைகாசி விசாகம் 2026: எப்படி விரதம் இருந்தால் முருகனின் அருளை பெற முடியும்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications