Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மொய்ப்பணம்" வைக்கும்போது, 1 ரூபாய் சேர்த்து ஏன் வைக்கிறோம் தெரியுமா? "மொய்விருந்து" ஆச்சரியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சில செயல்களுக்கு காரணமே தெரியாமல், காலம் காலமாகவே செய்து வருகிறோம்.. அதில் ஒன்றுதான் இந்த மொய்ப்பணம்.. எல்லா மொய்த் தொகையையுமே ஒற்றைப்படையில் செலுத்துகிறோமே? ஏன் தெரியுமா?

கல்யாணம், காது குத்து, கிரகப்பிரவேசம், மஞ்சள் நீராட்டு விழா, இப்படி எந்த சுப நிகழ்ச்சிகளின்போதும் மொய் செய்வது நம்முடைய முன்னோர்களின் பழக்கம்.. அது இன்று வரை தொடர்ந்து வருகிறது. சில சமயம், பிறந்தநாள் விழாக்களுக்குகூட மொய் செய்வார்கள்.

 spiritual and Lifestyle information, why 1 rupee coin added gift in marriage events

மொய்: இப்படி மொய் செய்யும் போது 100, 500, 1000 என்று மொய் செய்யாமல் அதனுடன் ஒரு ரூபாயையும் சேர்த்து வைத்து மொய் செய்து கொண்டிருக்கிறோம். எல்லாவற்றுக்குமே முன்னோர்கள் ஒரு காரணத்தை வைத்துள்ளதைப்போல, இதற்கும் காரணங்களை வைத்திருக்கிறார்கள்..

அதாவது, அந்தக்காலத்தில் எல்லாம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் கிடையாது.. பணம் என்பது பொன் மற்றும் வெள்ளி போன்ற மதிப்புமிக்க உலோகத்தில் நாணயங்கள் வடிவத்தில் மட்டுமே உருவாக்கப்பட்டிருந்தன.. இவைகள்தான் புழக்கத்திலும் இருந்து வந்தன... இவைகளை கொண்டுதான் மொய்ப்பணம் தந்து வருகிறார்கள்..

வராகன்: ஒரு வராகன் பொன் என்பது 32 குண்றி எடை (குண்டுமணி) அந்த 32 என்பது, முப்பத்து இரண்டு வகையான தர்மங்களை குறிப்பதாகும்.. அதனால்தான், இது தர்மம் தவறாது சம்பாதித்த நாணயமாக முன்னோர்கள் கருதினார்கள்.

அதுபோலவே, நீங்களும் தர்மம் வழுவாமல் இந்த பணத்தை செலவிடுங்கள் என்பதை நினைவூட்டும் வகையில்தான், மதிப்புமிக்க உலோக நாணயங்களை, மொய்ப்பணமாக தந்தார்களாம்.. மொய் செய்பவருக்கும்தான் ஒரு மதிப்புமிக்க பொருளை அன்பளிப்பாக கொடுத்ததாக ஒரு மனநிறைவு கிடைக்குமாம்.. இதற்கு பிறகு ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் வந்துவிட்டன.. எனினும், உலோக நாணயங்களை போல் நோட்டுத்தாள்கள் உண்மை மதிப்பு கொண்டவை கிடையாது.

ரூபாய் நோட்டுக்கள்: ரூபாய் தாளை மொய்ப்பணமாக தருபவர் மனதிலும், உண்மையான மதிப்பு கொண்ட பணத்தை மொய்யாக செய்யவில்லை என்ற மனக்குறை இருக்கவே செய்யும்.. இவைகளெல்லாம் முற்றிலும் நீங்கும் வகையில்தான், மொய்ப்பணமாக எத்தனை ரூபாய் கட்டுக்கள் வைத்தாலும், அதனுடன், நிஜமான மதிப்பு கொண்ட, ஒரு வெள்ளி ரூபாய் நாணயத்தையும் சேர்த்துக் கொடுக்கும் பழக்கத்தை கடைப்பிடித்துள்ளனர்..

அதுமட்டுமல்ல, மதிப்புமிக்க வெள்ளியில்தான் நாணயங்களும் உருவாக்கப்பட்டன.. அதனாலேயே மொய்ப்பணத்தில், 101, 501, 1001 என்று ஒரு ரூபாய் சேர்த்து வைக்கும் பழக்கம் மரபானது என்கிறார்கள்..

இன்னொரு காரணத்தையும் இதற்கு சொல்கிறார்கள்.. 100, 500 , 1000 என்று ரூபாய் நோட்டுக்களை மொய்யாக வைக்கும்போது, அந்த உறவுகளுக்கு ஒரு முடிவு கட்டப்பட்ட எண்ணாக தோன்றிவிடும்.. மொய் செய்பவர் - மொய் பெறுபவர் என இரு தரப்புக்குமே உறவு நீடிக்கும் விதமாகவே, 101 501 1001 ரூபாய்களை தருகிறார்கள்.. இதனால், உறவுகள் வளர்ந்து கொண்டே செல்லும் ஒரு எண்ணம் ஏற்படுமாம்..

விசேஷம்: இன்னொரு காரணத்தையும் இதற்கு சொல்கிறார்கள்.. அதாவது, ஒற்றைபடை எண் எப்போதுமே சற்று விசேஷமான நம்பர்தான்.. சிலருக்கு சென்ட்டிமென்ட்டாகவும் இது கருதப்படுகிறது.. அதனாலேயே இரட்டை இலக்கம் இல்லாமல், ஒற்றை இலக்கத்தில் மொய் செய்யப்படுகிறதாம்.

இன்னொரு காரணத்தையும் இதற்கு சொல்கிறார்கள்.. மொய் எழுதும்போது எப்போதுமே, கல்யாண பந்தலில் கூட்டம் முந்தி தள்ளும்.. அதனால், பணம் தருபவரின் பெயர்களை அவசர அவசரமாக குறித்து கொண்டு, மொய்ப்பணத்தையும் அங்கிருப்பவர்கள் குறித்து வைத்து கொள்வார்கள்.. பெரும்பாலும், 100, 1000 என்று இரட்டை இலக்கமாகவே இருந்தாலும், கவனக்குறைவால் மொய்ப்பணத்தில் பிழை ஏற்பட்டுவிடும்..

50 அல்லது 100 ரூபாயின் கடைசி இலக்கம் பூஜ்ஜியமாகும். ஆனால் அதனுடன் 1 ரூபாய் சேர்ந்தால் அது 51 மற்றும் 101 ஆக மாறும்.. ஆதுமட்டுமல்ல, மொய் செய்தவரின் தொகை மறக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே, ஒற்றை படை இலக்கத்தில் மொய் செய்கிறார்களாம்.

வழியும் அன்பு: எனினும் இந்த மொய்ப்பணம் வெறும் பணம் மட்டுமே கிடையாது.. சுபநிகழ்ச்சியை நடத்துபவரின் நிதித்தேவைக்கு உதவும் ஈகை மட்டுமே கிடையாது.. வட்டியில்லா முதலீடு மட்டுமே கிடையாது.. அனைத்தையும் தாண்டி, அன்பளிப்புடன் பகிரும் அன்பு..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+