குபேர மூலையில் பணம் கொட்டணுமா? அப்ப இந்த செடியை விடாதீங்க.. சூப்பர் அதிர்ஷ்டம் தரும் மருத்துவ குணம்
சென்னை: பெரும்பாலும், வீடுகளில் பணம் செழிக்க வேண்டுமானாலோ அல்லது பணம் தங்கியிருக்க வேண்டும் என்றாலோ முக்கிய வாஸ்து செடிகளை வீடுகளில் வளர்ப்பது பெருகி வருகிறது. அந்தவகையில், வீட்டில் வளர்க்கப்படும் செடிகளில் மிக முக்கியமானது மூங்கில் செடியாகும்.. இதற்கு என்ன காரணம்? மூங்கில் செடிகளை எந்த திசையில் வளர்க்கலாம்? இதன் பலன்கள் என்னென்ன? சுருக்கமாக பார்க்கலாம்.
எப்போதுமே நம்முடைய வீடுகளை சுற்றி மரங்கள், செடிகள் இருந்தாலே, நமக்கான ஆரோக்கியம் கூடும் என்பார்கள்.. காரணம் தாவரங்களிலிருந்து கிடைக்கும்..

ஆக்ஸிஜன் - ஆரோக்கியம்
அதிக ஆக்சிஜன் உற்பத்தி செய்து தரும் மலர்களையும், செடிகளையும் வைப்பதால், உடலுக்கு நன்மை கிடைக்கும்.. இவைகள் அதிக ஆக்சிஜன் வழங்குவதுடன், மாசுபடும் துகள்களை சிலவகை செடிகள் கவர்ந்து அழித்து விடும். இதனால் சுற்றுப்புறச்சூழலும் மாசுபடாமல் இருக்கும்.
வீட்டுக்கு வெளியே இப்படியென்றால், இந்த தாவரங்களை வீடுகளுக்குள் வைத்திருக்கும்போது, மேலும் ஆரோக்கியம் பெருகும். ஆனால், சில வகையான செடிகளை மட்டுமே வீட்டுக்குள் வளர்க்க முடியும். இதுகுறித்து வாஸ்துவில் விரிவாகவே சொல்லப்பட்டுள்ளது.
மூங்கில் செடி அதிர்ஷ்டம்
சிலவகையான செடிகளை வீட்டில் வளர்த்தால், குடும்பத்தில் அதிக பிரச்சனையும், அதிக பொருளாதார இழப்பும் வந்துவிடும் என்பார்கள். குறிப்பாக, பருத்தி செடியை வீட்டில் வைக்க வேண்டாம் என்பார்கள்.. இது துர்திரஷ்டத்தை அதிகமாக வீட்டுக்குள் கொண்டுவந்துவிடும்.. அதேபோல, போன்சாய், பருத்தி செடிகள், புளி, அத்திப்பழம், போன்றவைகளையும் வீட்டில் வளர்க்கக்கூடாது.
எனவே, சுற்றுச்சூழல் நன்றாக இருக்கவும், பாசிட்டிவ் எனர்ஜி பெருகவும், குடும்பத்தில் நிதி நெருக்கடி சீராகவும், மனதில் அமைதி பெறவும் குறிப்பிட்ட செடிகளை வளர்க்க வேண்டும். அந்தவகையில், பெரிதும் பயன்தரக்கூடிய மூங்கில் செடியாகும்.
உரிய திசை என்ன
2-3 அடி உயரம் வரை வளரக்கூடியவை மூங்கில் செடிகளை கிழக்கு திசையில் நட்டு வைக்கலாம்.. கிழக்கு திசைக்கான சூழல் இல்லாவிட்டால், வடக்கு, வடமேற்கு திசையிலும் நடலாம். இதனால், வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் கிடைப்பதுடன், பண நெருக்கடியும் சீராகும். படுக்கை அறையிலும் வைக்கலாம். இதனால், தம்பதிக்குள் அந்நியோன்யம் கூடும்.. பிள்ளைகள் படிக்கும் அறையிலும் மூங்கில் செடிகளை வைக்கலாம்.
வீடுகள் மட்டுமல்லாமல், தொழில் செய்யும் அலுவலகங்களிலும், கடைகளிலும் வைக்கலாம். வீட்டின் வரவேற்பறையில் அழகான மேஜையின் மீது இதை வைக்கலாம். அலமாரிகளில் வைக்கலாம்.
சூரிய ஒளி - தண்ணீர்
மூங்கில் செடி இருக்குமிடமெல்லாம் சுற்றுப்புறம் தூய்மையாக இருப்பதுடன், எதிர்மறை சக்தியும் அகற்றப்படும். ஆனால், எங்கு வைத்தாலும், சூரிய ஒளி நேராக படும்படி வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் செடி சுருங்கிவிடும். எக்காரணம் கொண்டும் இந்த செடியின் இலைகள் காய்ந்து விடக்கூடாது. பணத்தட்டுப்பாடும் வந்துவிடும். மூங்கில் செடிக்கு உப்புத் தண்ணீரை ஊற்றக்கூடாது. சுத்தமான நீரை ஊற்ற வேண்டும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications