பர்ஸில் பச்சை கற்பூரம்.. பணம் பெருக பர்சில் இதை மட்டும் வெச்சிடாதீங்க.. பிடித்தவர் போட்டோ வைக்கலாமா?
சென்னை: பர்ஸ் பயன்படுத்துபவரா நீங்கள்? அப்படியானால் உங்களிடம் பணம் அதிகமாக புழங்க வேண்டுமானால், பர்ஸை எப்படி வைத்திருக்க வேண்டும்? என்ன நிறத்தில் உபயோகிக்க வேண்டும்? பர்ஸை எங்கே வைத்திருக்க வேண்டும் ? என்பது குறித்தெல்லாம் ஆன்மீகத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.. பணத்தை தவிர பர்ஸுக்குள் என்னென்ன பொருட்களை வைத்திருக்கலாம் தெரியுமா?
பர்ஸில் நிறமும் முக்கியம்.. கருப்பு நிறத்தை தவிர பிரவுன், கிரே, பச்சை வண்ணம், பர்ப்பிள், நேவி ப்ளூ பிங்க் போன்ற நிறங்களில் பர்ஸ் வாங்கலாம்.. சனியுடன் தொடர்புடையதால், கருப்பு நிற பர்ஸை தவிர்த்துவிடலாம்.. அப்படி பயன்படுத்தும்போது, ஏராளமான பணப்பிரச்னைகள் வந்துவிடும்.. பர்ஸ்கள் கிழிந்திருக்கக் கூடாது.

பர்ஸில் என்ன வைக்கலாம்
அதேபோல, பர்ஸில் சதுரமான தங்கம் அல்லது பித்தளையை வைத்துக் கெள்வது பலன்களை பெற்றுத்தரும்.. அதிலும் கங்கை நீரால் சுத்தம் செய்யப்பட்ட சதுரமான துண்டை பர்ஸில் வைப்பதால், நிதிநிலைமை என்றுமே பலவீனமாகாது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
பர்ஸில், ஸ்வஸ்திகா சின்னம், ஓம் சின்னம் போன்றவற்றை வைத்திருக்கலாம். செழிப்பை உண்டுபண்ணும் போட்டோக்களையும் வைத்திருக்கலாம்.. இதுபோன்ற படங்களை பர்ஸில் வைப்பதால் பணம் வீகாது என்றும், மாறாக பணம் இரட்டிப்பாக பெருகும் என்றும் கூறப்படுகிறது. ரூபாய், நாணயங்களை மொத்தமாக போட்டு வைக்காமல், பிரித்து வைப்பது நல்லது. அந்த ரூபாய் நோட்டுகளும் கிழியாமல், சிதையாமல் நல்ல நிலைமையில் இருக்க வேண்டும்.
பர்ஸில் எவ்வளவு வைக்கலாம்
பீரோ, பணப்பெட்டியை போலவே பர்ஸ்களையும் கவனமாக கையாள வேண்டும்.. எப்போதுமே சிறிது பணத்தை பர்ஸில் வைத்திருக்க வேண்டும் என்பார்கள்.. பர்ஸ்ஸை காலியாக வைத்திருப்பது துரதிர்ஷ்டத்தை அழைத்துவந்துவிடுமாம். அதனால், 1 ரூபாய் நாணயமும், 20 ரூபாய் நோட்டை பர்ஸில் போட்டு வைத்திருக்க வேண்டும்.
பர்ஸில் வைத்திருக்கும் பணம் அதிகமாக வேண்டுமானால், நறுமணம் தரக்கூடிய கிராம்பு, ஏலக்காய், ஜவ்வாது, பச்சை கற்பூரம் போன்றவற்றில் எதையாவது வைக்க வேண்டும்.. இது நமக்கு பணத்தை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது. வரவு சம்பந்தமான பில்களை வைக்கலாம். உதாரணத்துக்கு Salary pay slip, Bank mini statement போன்று வைக்கலாம்.
பணம் சேர பச்சை கற்பூரம்
லவங்கப்பட்டையை அரைத்து தூள் செய்து, பச்சை கலர் துணியில் மடித்து, பச்சை நூலால் கட்டி, பணப்பை அல்லது பர்ஸில் வைத்தாலும் பணம் குறைவின்றி சேர துவங்கும். ஏலக்காய், சோம்பு, பச்சைக் கற்பூரம் உள்ளிட்ட பொருட்களை பச்சை நிற பட்டுத் துணி அல்லது பச்சை காகிதத்தில் கட்டி பர்ஸினுள் வைத்து கொண்டாலும் கடன் பிரச்சனைகள் தீர்ந்துவிடும். கோமதி சக்கரங்களை உங்கள் பர்ஸில் ஒற்றைப்படை எண்களில் வைத்தாலும் பணம் குறையாமல் இருக்கும்.












Click it and Unblock the Notifications