பச்சை பயிறு பரிகாரம் சபாஷ்.. பீரோவில் பணம் சேரணுமா? வருமானம், வேலை கிடைக்க உதவும் 3 பச்சை பொருள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆன்மீகத்தில் சிறு சிறு விஷயங்களுக்கு கூட எளிய பரிகாரங்களை செய்து அதன் தீர்வுகளை எளிதாக கண்டறிய முடியும்.. பணப்பற்றாக்குறை, திருஷ்டி, வேலையின்மை போன்ற பிரச்சனைகளையும், இந்த எளிய பரிகாரங்கள் மூலம் நிறைவேற்றிக் கொள்ளவும் முடியும். அதில் ஒன்றுதான் பச்சைப்பயிறு பரிகாரம்.

வீட்டில் பணக்கஷ்டம், வறுமையால் அவதிப்படுபவர்களுக்கு கை கொடுத்து உதவுகிறது பச்சைப்பயிறு பரிகாரம். செவ்வாய்க் கிழமைகளில் பாசிப்பயறு அல்லது பச்சை பயறுடன் வெல்லம் கலந்து பாயசம் செய்து, வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி, சுவாமிக்கு படைக்க வேண்டும். பிறகு, குடும்ப கஷ்டம் தீர்ந்து, கடனும் விரைவில் அடைய வேண்டும் என்று இஷ்ட தெய்வம், குலதெய்வத்தை வேண்டி கொள்ளலாம்.

spirituality pachai payiru pariharam

பச்சைப்பயிறு: அதேபோல, சுத்தம் செய்யப்பட்ட பச்சரிசியுடன் பச்சைப்பயறு, வெல்லம் கலந்து, வீட்டு பூஜை அறையில் சுவாமி படத்திற்கு முன்புவைத்து, பசுமாட்டிற்கும் தானம் செய்யலாம். இதனால் கடன் தொல்லை விரைந்து தீரும்.

அல்லது பூஜை அறையில் சிறிய கிண்ணத்தில் வெந்தயம், பச்சை பயிறு எடுத்துக் கொள்ள வேண்டும். இதில், பெருமாளுக்கு உகந்த பச்சை கற்பூரத்தையும் போட்டு கலந்து பூஜையறையில் வைத்து, மனதார பிராத்தனை செய்து கொள்ள வேண்டும். பிறகு இந்த 3 பொருட்களையும் அப்படியே பணம் வைக்கும் பெட்டியில் தூவி விட வேண்டும். ஆனால், சிறப்பு நேரம் பார்த்து பீரோவில் இவைகளை வைக்க வேண்டும். 3 வாரம் கழித்து இந்த பொருட்களை கால் படாத இடத்தில் கொண்டுபோய் போட்டுவிட வேண்டும். இப்படி செய்து வருவதால், பணம் தங்குதடையின்றி வந்து சேரும் என்பது நம்பிக்கையாகும்.

பறவைகள் : அதேபோல, செவ்வாய்க்கிழமை இரவில் பச்சைப்பயிறை ஊற வைத்து, அதை மறுநாள் புதன்கிழமை பசு மாட்டுக்கு தானம் செய்யலாம். வாரந்தோறும் இப்படி புதன்கிழமைகளில் ஒரு கைப்பிடி பச்சைப்பயிறை தானம் வழங்குவதாலும், காக்கை குருவிகளுக்கு பச்சை பயிறை இரையாக போட்டு வருவதாலும், உங்கள் கடன் பிரச்சனை மெல்ல தீரும்.

சரியான வேலை கிடைக்கவில்லையானால், அல்லது வேலைக்கு செல்வதற்கே நிறைய தடங்கல்கள் உள்ளதென்றால், இதற்கும் பச்சைப்பயிறு திருஷ்டி தேவைப்படுகிறது.

பச்சை பொருட்கள்: அதாவது, ஒரு கைப்பிடி பச்சை பயிறு, துளசி இலை, கொஞ்சம் வில்வம் இந்த மூன்றையும் வைத்து, உங்களுக்கு திருஷ்டி கழிக்க வேண்டும்.. வீட்டு வாயிலில் கிழக்கு முகமாக நின்று, மேற்கண்ட 3 பொருட்களை வைத்து, குடும்பத்திலுள்ள பெரியவர்களை வைத்து திருஷ்டி எடுக்க வேண்டும். இறுதியாக, கையிலுள்ள 3 பொருட்களையும் உங்கள் நெற்றியில் வேகமாக அடித்து, கீழே கொட்டிவிட வேண்டும். இப்படி செய்வதால், இதுவரை உங்கள் செயல்பாடுகளிலிருந்த முட்டுக்கட்டைகள், சறுக்கல்கள், தடங்கல்கள் நொறுங்கி விடும்.

புதன்கிழமையில் பெருமாள் கோவிலுக்கு சென்று, முளை கட்டிய பச்சை பயறு தானமாக தந்து வந்தால், ஜாதகத்தில் புதன் பகவானின் பலம் அதிகரிக்கும். பிராமணருக்கு பச்சை பயிறு தானம் செய்யலாம்.. ஆனால், ராகுகாலத்தில் தானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்... பச்சை பயிறை ஊறவைத்து நெய் மற்றும் சர்க்கரை கலந்து காலை அல்லது மாலை பசுவிற்கு உணவாக தருவதால், வருமானம் பெருகி மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+