ஆமா, கனவில் உங்களுக்கு இறந்தவர்கள் வர்றாங்களா? அதுக்கு காரணம் தெரியுமா.. இதான் விஷயமே.. பலே விளக்கம்
சென்னை: கனவுகள் மனிதர்கள் அனைவருக்கும் பொதுவானது. ஆனால் இந்த கனவை புரிந்துக்கொள்வது என்பது ஒவ்வொரு சமூகத்திற்கும் வித்தியாசமானது. உதாரணமாக ரோஜா கனவில் வருகிறது எனில் அது சிலருக்கு மரண பயத்தை ஏற்படுத்தலாம். சிலருக்கு காதல் தொடர்பான சிந்தனையை ஏற்படுத்தலாம். ஆனால் இறந்து போன ஒருவர் கனவில் வந்தால் அதற்கு பெரும்பாலும் ஒரே அர்த்தமாகதான் இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இந்திய சமூகத்தை பொறுத்த அளவில் கனவுக்கு மிகுந்த முக்கியத்துவம் இருக்கிறது. ஒவ்வொரு சுக, துக்க நிகழ்வுகளுக்கு முன்னர் வரும் கனவுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. உதாரணமாக தான் ஆசை ஆசையாய் வைத்து வளர்த்த செடி ஒன்று ஒரு சில நொடிகளில் கண் முன்னே வாடி பட்டுவிடுவதை போன்ற கனவு கண்டபின் சில நாட்களில் அந்த வீட்டில் யாராவது மரணமடைந்திருப்பார்கள். இந்த கனவுக்கும் அவருடைய மரணத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் இந்த கனவை கண்ட பின்னர்தான் வீட்டில் இப்படி நிகழ்ந்திருப்பதாக கூறுவார்கள்.
130 கோடி மக்கள் மற்றும் 33 கோடி கடவுள்கள் வாழும் இந்தியாவில் கனவுகள் மதங்களுடன் தொடர்புபடுத்தப்பட்டு வருகிறது. இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் கனவுகள் பற்றி அறிவியல் ஆய்வாளர்கள் கூறும் சில விஷயங்கள் நம்மை சிலிர்க்க வைக்ககின்றன. கனவுகள் என்பது சொல்லப்படாத ரகசியம் போன்று. அவற்றை மதங்களுடன் தொடர்புபடுத்தி பார்ப்பதைவிட அக்கனவை அறிவியல் ரீதியாக புரிந்துகொண்டால் அதிலிருந்து ஏராளமான நன்மைகளை பெற முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதாவது உங்களுக்கு மிகவும் நெருக்கமான நண்பருக்கு உங்கள் குடும்பம் குறித்து ஒரு ரகசியம் தெரிந்திருக்கிறது. ஆனால் அவர் திடீரென எதிர்பாராத விதமாக வெளிநாடு செல்கிறார். பொவதற்கு முன்னர் இந்த ரகசியம் குறித்து ஒரு கடிதத்தை எழுதி உங்களுக்கு அனுப்பி வைக்கிறார். நீங்கள் அதை வழக்கமான கடிதம் என்று நினைத்து படிக்காமல் தவிர்த்துவிடுகறீர்கள் எனில் அந்த ரகசியம் குறித்து உங்களுக்கு எதுவும் தெரியாமல் போய்விடும். நண்பரும் எவ்வித கவலையும் இன்றி வெளிநாட்டில் ஜாலியாக இருந்துவிடுவார்.
இப்போது விஷயத்திற்கு வருவோம். நண்பர்தான் உங்கள் கனவு, அவர் எழுதிய கடிதம்தான் கனவின் விளக்கம். இதை படிப்பதும் படிக்காததும் உங்கள் விருப்பம். ஆனால் படித்தால் பல விஷயங்களை நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம். கனவும் இப்படி திறக்கப்படாத கடிதம் போன்றதுதான். எனவே இந்த கனவை படிக்க வேண்டும் எனில் கனவு எப்படி வருகிறது ஏன் வருகிறது என்பது குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டும். ஆய்வாளர்களின் கூற்றுப்படி பெரும்பாலான கனவுகள் சமீபத்திய நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு இருக்கும்.
உதாரணமாக நாம் மிகவும் கூர்ந்து கவனித்த சினிமாக்கள், ஆழ்ந்து படித்த புத்தகங்கள், விரும்பி செய்த விஷயங்கள் என பெரும்பாலான கனவுகள் இதனை சுற்றித்தான் இருக்கும். ஆனால் இந்த விஷயங்களில் சம்பந்தமே இல்லாத ஆட்கள், காட்சிகள் இருப்பதால்தான் கனவுகள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இன்னும் சரியாக சொல்வதெனில் சிறுவயதில் நிறைவேறாத ஆசைகள் அதிகமாக கனவில் வரலாம். பாலியல் தொடர்பான விஷயங்கள் கனவில் வரலாம்.
இவையெல்லாம் சாதாரண கனவுகள். இவற்றிற்குள் எந்த பெரிய அர்த்தமும் புதைந்திருக்காது. ஆனால் வேறு சில கனவுகளும் வரும். அதாவது பஸ்ஸை தவறவிடுவது, மேலிருந்து கீழே குதிப்பது, கொலை செய்யப்படுவது, யாரோ துரத்துவதால் தொடர்ந்து ஓடுவது, நெருப்பில் குதிப்பது, நீந்துவது, ரோஜாவை பிடித்திருப்பது ஆகியவை வித்தியசமான கனவாகும். இவற்றை இரண்டு விஷயங்கள் கொண்டு விளக்கலாம். முதலாவது பிரபஞ்ச குறியீடுகள். மேற்குறிப்பிட்டவை அனைத்தும் பொதுவான பிரபஞ்ச குறியீடுகள்தான்.
நெருப்பு எனில் காமம் அல்லது அழிவு, நீர் எனில் அமைதி, ரோஜா எனில் அழகு என அர்த்தம். பஸ்ஸை தவறவிடுவது பற்றிய கனவு எனில் நீங்கள் மிஸ் செய்துவிடுகிறீர்கள். இந்த கனவின் அர்த்தம் புறப்பாடு. அதாவது புறப்பாடு எனில் மரணம். ஆனால் நீங்கள் மரணத்தை தவற விட்டுவிடுகிறீர்கள். எனவே மரணத்தை தழுவ இப்போது நீங்கள் விரும்பவில்லை என்பதை கனவு பஸ்-தவறவிடுவது கனவு மூலம் விளக்குகிறது. இதுபோல பல பிரபஞ்ச குறியீடுகள் இருக்கிறது.

கனவில் நெருப்பு, ரோஜா, நீர் போன்றவை வந்தால் அவற்றிற்கு ஒரே அர்த்தம்தான். ஆனால், இது தவிர தனிப்பட்ட குறியீடுகள் இருக்கிறது. உதாரணமாக நீங்கள் சிறு வயதில் ஒரு கோயிலையொட்டி உள்ள இடத்தில் விளையாடி இருப்பீர்கள். அங்கு உங்களுக்கு கிடைத்த நட்பு மிகவும் அழகானதாக இருக்கலாம். பின்னாட்களில் நீங்கள் 'கோயில்' குறித்து கனவு காண்கிறீர்கள் எனில் உங்களுடைய மனசு அழகான நட்பை பெற்றிருப்பதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று அர்த்தம். அல்லது ஒரு அழகான நட்பை பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதை மனம் உணர்த்துகிறது. என்று அர்த்தம்.
இந்த குறியீடுகள் ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடலாம். இதைத்தான் தனிமனித குறியீடுகள் என்று அழைக்கப்படுகிறது. எனவே கனவை விளக்கி அதில் வரும் தகவல்களை நாம் புரிந்துகொள்ள நம்மை பற்றி முதலில் நமக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும். அதேபோல இறந்தவர்கள் கனவில் வந்தால் அதற்கும் சில விளக்கங்கள் இருக்கிறது. மனிதர்களின் 80 சதவிகித கனவுகள் நம் ஆழ் மனதில் இருக்கும் ஆசையை வெளிப்படுத்துவதாகதான் இருக்கிறது. எனவே இறந்தவர்கள் மீண்டும் உயிருடன் திரும்ப வேண்டும் என்பதற்காக இந்த கனவு வந்திருக்கலாம்.
ஆனால் நமக்கு அவ்வளவு பரிட்சயம் இல்லாதவர், முக்கியமில்லாத நபர் இறந்து போயிருப்பார். ஆனால் கனவில் அவர் மீண்டும் உயிருடன் வருகிறார் எனில் நிச்சயம் இது ஆழ்மன ஆசை தொடர்பான கனவாக இருக்காது. அப்படியெனில் இதற்கு என்னதான் அர்த்தம்? கனவை நன்கு கவனித்தால் விஷயம் புரிந்துவிடும். அதாவது இறந்தவர் மீண்டும் திரும்பி வருகிறார். இறப்பு-திரும்புதல். ஏற்கனவே இருக்கும் சூழல் உங்களுக்கு மிகவும் பிடித்துவிட்டிருக்கிறது. ஆனால் தற்போது சூழல் மாறியிருக்கிறது. வேலை, வீடு, ஊர் ஆகியவை கூட மாறியிருக்கலாம். எனவே உங்கள் மனம் பழைய சூழலை விரும்புகிறது. இதுதான் கனவு மூலம் தெரிய வந்திருக்கிறது.
அதேபோல இறந்தவர்கள் கனவில் வந்தால் பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்தியா போன்ற நீண்ட பண்பாட்டு பாரம்பரியம் கொண்ட நாடுகளில் கனவுகள் குறித்து பல்வேறு நம்பிக்கைகள் நிலவி வருகிறது. இது தவிர தொடர்ச்சியாக கனவுகளை ஆராய்வதன் மூலமாக இதய நோய்களை கூட எளிதில் கண்டுகொள்ளலாம் என விஞ்ஞானிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். அதாவது ஒரு 60 வயது முதியவர் தொடர்ச்சியாக கவலை தரும் கனவுகளையே கண்டுக்கொண்டிருக்கிறார். இதனையடுத்து மருத்துவர்களிடம் அவர் பரிசோதனை செய்தபோது அவருக்கு இருதய நோய் இருப்பது தெரிய வந்துள்ளது. ஆக கனவுகளை எளிதாக எடுத்துக்கொள்ளாமல் அதனை விளக்கிக்கொள்ள சிக்மன்ட் பிராய்ட் போன்றோரின் புத்தகங்களை வாசிக்கலாம்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications