மனைவி கர்ப்பமாக இருக்கும்போது, கணவன் முடி வெட்டக்கூடாது.. ஷேவ் பண்ணவும் கூடாது.. ஓஹோ, இதுதான் காரணமா
சென்னை: மனைவி மகிழ்ச்சியாக இருந்தால், வயிற்றிலுள்ள குழந்தையும் மகிழ்ச்சியாக ஆரோக்கியமாக இருக்கும்.. அதனால்தான், இதனை மையப்படுத்தி இந்து மரபுகளில் கணவன் செய்யக்கூடாத சில சடங்குகளை வைத்துள்ளார்கள். அந்தவகையில் ஒருசிலவற்றை இங்கே பார்ப்போம்.
மனைவி கர்ப்பமாக இருக்கும் போது மரம் வெட்டுவது, கடலில் குளிப்பது போன்ற காரியங்களில் ஈடுபடக்கூடாது. மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவன் பிணத்தை சுமந்து செல்வதை தவிர்க்க வேண்டும்.. வெளியூருக்கு அடிக்கடி பயணம் செய்வது, வெளிநாட்டு பயணங்கள் உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும்.. கூடுமானவரை மனைவியை பிரியாமல், கர்ப்ப காலத்தில் கூடவே இருப்பது நல்லது.

கர்ப்பம்: அதுமட்டுமல்ல, மனைவி கர்ப்பமாக இருக்கும்போது, உடலளவிலும் சரி மனதளவிலும் சரி பல மாற்றங்களை உணர்வார்கள். இந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல், சில சமயங்களில் மன அழுத்தத்துக்கும் ஆளாக நேரிடும்.. எனவே, இதுபோன்ற நேரங்களிலும் உற்ற துணையாக கணவர் உடனிருப்பது மனைவிக்கு மகிழ்ச்சியை தரும்.
அதேபோல, மனைவியின் கர்ப்ப காலத்தில் கணவன் மொட்டையடிக்கக் கூடாது... கர்ப்பமாகி 6 மாதங்களுக்கு பிறகு கணவன் ஷேவ் செய்யவும் கூடாது. காரணம், கருவில் ஒரு உயிர் வளர்ந்து வரும் நேரத்தில் வளர்ச்சிகரமான செயல்களை மட்டும் தான் செய்ய வேண்டும். முடியை வெட்டுவது, தாடியை ஷேவ் செய்வது இவையெல்லாம் வளர்ச்சியை தடுக்க கூடிய செயல்களாகும். இதனால் கருவிலுள்ள குழந்தைக்கு ஆரோக்கியத்திலும், குழந்தையின் வளர்ச்சியிலும் பாதிப்பை தரக்கூடுமாம். அதனால்தான், முடிவெட்டவோ, தாடி ஷேவ் செய்யவும் கூடாது என்கிறார்கள்.
ஹார்மோன்: அதுமட்டுமல்ல, மனைவி கர்ப்பமாக இருக்கும்போது, உடலில் ஹார்மோன் மாற்றங்கள் அதிகமாக இருக்கும்... இந்த மாற்றத்தினால், மனைவியின் தோற்றத்திலும் மாற்றங்கள் ஏற்படக்கூடும்..
முகம் பொலிவுடன் மின்னும் என்றாலும் சிலர் உடல் மெலிந்து, சிலர் உடல் பருத்து காணப்படுவார்கள். இதனால் மனைவி கவலையை அடையக்கூடுமாம். அப்படியிருக்கும்போது, கணவன்மார்களும் முடி, தாடியை மழித்து கொள்ளாமல், தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே, தாடி, தலைமுடியை வளர்க்கிறார்களாம்.
வேண்டுதல்: இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. குழந்தையும் தாயும் நன்றாக இருக்கவேண்டும், குழந்தை எந்த வித பிரச்சினைகள் இல்லாதபடி சுகப்பிரசவம் ஏற்படவேண்டும் என்று தெய்வத்திடம் வேண்டி பிரார்த்தனை செய்வார்கள். குழந்தை நல்ல முறையில் பிறந்ததுமே, கோவில் சென்று மொட்டையடித்து வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். இதற்காகவே, மனைவி கர்ப்பமாக இருக்கும் போது முடி வெட்டக்கூடாது என்று சொல்வார்களாம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications