கண் திருஷ்டிக்கு சூப்பர் டிப்ஸ்.. இந்த ஒரு பொருளை உங்க அறையில் வைத்து பாருங்க.. 48 நாளில் ஆச்சரியம்
சென்னை: படிகார கற்கள் இயல்பாகவே மருத்துவ குணம் நிறைந்தவை.. அதேசமயம், வாழ்க்கையின் தடைக்கற்களை இந்த படிகார கற்கள் எப்படி போக்குகின்றன தெரியுமா?
படிகார கற்களில் எதிர்மறையான சக்திகள் உள்ளன.. கால்சியம் சத்துக்கள் நிறைய உள்ளன.. அதேபோல அதிர்வுகளை ஈர்த்துக் கொள்ளும் ஆற்றலும் நிறைய உள்ளது.. ஆதனால்தான், குடிநீரை சுத்தப்படுத்துவதற்காக இந்த கற்களை கிராமப்புறங்களில் பயன்படுத்துவார்கள்.

படிகார பொடி: தொற்றுகள் அதிகம் சேர்ந்துவிடுவதால் ஏற்படும் பாத விரல் புண்களுக்கு படிகார கல் சிறந்த மருந்தாகிறது.. அதேபோல, அக்குள் பகுதிகளில் வியர்வையால் உண்டாகும் கெட்ட கிருமிகளின் வளர்ச்சியை தடுப்பதிலும் இந்த படிகாரம் அபார மருந்தாகிறது. இந்த படிகார பொடியை, ஷாம்பு அல்லது சீயக்காயுடன் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகுகள், அரிப்புகள் நீங்கும்...
இப்படி பல்வேறு மருத்துவ நன்மைகளை தந்தாலும், இயல்பாகவே திருஷ்டி எடுக்கக்கூடிய சக்தி இந்த படிகாரத்துக்கு உண்டு. அதனால்தான், படிகாரம், எலுமிச்சை, மிளகாய் இந்த மூன்றையும் திருஷ்டியை நீக்கும் கலவையாக நம் முன்னோர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
திருஷ்டி பொருள்: உங்கள் வீடுகளுக்கு புதிய வாகனங்களை வாங்க நேரிடும்போதும், அவைகளை பயன்படுத்தும்போதும், இந்த திருஷ்டிப்பொருளை மாட்டி தொங்க விடுவார்கள்.. இதனால், உங்கள் மீது விழும் கண்பார்வையை இந்த பொருட்கள் ஈர்த்துக் கொள்ளும்.
அதேபோல, உங்கள் வீட்டிலும், அலுவலகத்திலும்கூட, வாஸ்து தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், இந்த பரிகாரத்தை பயன்படுத்தலாம்.. வெறும் 50 கிராம் படிகாரத்தை, வீடு, அலுவலகத்தின் ஒவ்வொரு ரூமின் மூலையிலும் வைத்தால், கண் திருஷ்டி இருந்தாலும் அது உடனே சரியாகிவிடும் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.
பிரச்சனைகள்: திருஷ்டி மட்டுமல்லாமல், வாஸ்து தோஷங்களால் ஏற்படும் பிரச்சனைகளையும் இந்த படிகாரம் நீக்கிவிடும் என்கிறார்கள்.. இதன்மூலம் வீட்டில் மகிழ்ச்சி, அமைதி நிலவுவதுடன், பணமும் சேர துவங்குமாம்.. சில நாட்களில் படிகாரத்தின் நிறம் மாறத்தொடங்கிவிடும்போது, புதிய படிகாரம் மாற்றி வைத்துவிட வேண்டுமாம்.
அதேபோல, இன்னொரு வகையிலும் பரிகாரம் செய்யலாம். இதற்கு ஒரு வெள்ளை பேப்பரில் உங்களுடைய கடன் பிரச்சனை அல்லது வருமானம் குறைவு அல்லது வேறு எந்த பிரச்சனையாக இருந்தாலும், அதை சுருக்கமாக எழுதுங்கள்.
பச்சை கற்பூரம்: அந்த பேப்பருக்கு நடுவே ஒரு பச்சைக்கற்பூரத்தையும், ஒரு சிறிய துண்டு படிகாரத்தையும் வைத்து அந்த பேப்பரை மடித்து கொள்ள வேண்டும். இந்த பேப்பரை ஒரு மஞ்சள் துணியில் கட்டி அப்படியே பூஜை அறையில் ஒரு அலமாரியில் வைத்து, உங்களது குல தெய்வத்தை மனதார நினைத்து கொண்டால் போதும். அந்த பேப்பரில் எழுதிய விஷயம், 48 நாட்களுக்குள் நடக்க நிறைய வாய்ப்புள்ளதாக நம்பிக்கையுடன் சொல்லப்படுகிறது.
அந்தவகையில், படிகாரத்தின் பயன்பாடு பண ஆதாயத்தையும் உண்டுபண்ணக்கூடியது.. வீட்டில் துடைக்கும்போதும் படிகாரம் பயன்படுத்தலாம். குளிக்கும் நீரிலும் படிகாரத்தை சேர்க்கலாம்.. அவ்வளவு ஏன்? அதேபோல, தூங்கும் முன் கறுப்பு துணியில் படிகாரத்தை கட்டி தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினாலும், கெட்ட கனவுகள் வராது என்கிறார்கள். நிபுணர்கள்.
எதிர்மறை சக்திகள்: வீட்டிற்குள் எதிர்மறை சக்திகள் நுழையாமல் தடுக்கும் சக்தி படிகார கற்களுக்கு உண்டு... அந்தவகையில் நோய்க்கிருமிகளை வீட்டிற்குள் வரவிடாமலும் இந்த படிகாரம் தடுக்கிறது... அதனால்தான், வாசற்படிகளில் இதை கட்டி வைத்தால் திருஷ்டி தோஷம் எதுவும் உண்டாகாது என்று பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications