Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெற்றிலை வெற்றி.. வெற்றிலையின் காம்பு சாப்பிடலாமா? நரம்புகளை நீக்கணுமா? அடேங்கப்பா இதுல இவ்ளோ இருக்கா

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெற்றிலைகள் ஆன்மீகத்தில் தவிர்க்க முடியாத முக்கியத்துவத்தை பெற்று வருகின்றன.. எப்போதுமே வெற்றிலையின் நுனிப்பகுதி, அடிப்பகுதியை நீக்கிவிட்டு பயன்படுத்த சொல்வது ஏன் தெரியுமா? வெற்றிலையில் மை போட்டு பார்ப்பது ஏன் தெரியுமா? சுருக்கமாக பார்ப்போம்.

சிலர் கிராமப்புறங்களில் வெற்றிலையில் மை போட்டு பார்ப்பார்கள்.. இதற்கு காரணம், வெற்றிலைக்கு ஊடகத்தன்மை அதிகம்.. எண்ணங்களையும் சக்தி அலைகளையும் எளிதில் கடத்தக்கூடியவை என்பதால், வெற்றிலையை வைத்து மை போட்டு பார்க்கும் வழக்கம் இருந்தது..

spirituality betel leaf betel leaves

வெற்றிலையில் மை: யாராவது நபர்கள் காணாமல் போய்விட்டாலோ அல்லது பொருட்கள் தொலைந்து போனாலோ, அதனை கண்டுபிடிப்பதற்காக வெற்றிலையில் மை போட்டு பார்ப்பார்கள். வெற்றிலையில் மை தடவி அஞ்சனா தேவி மந்திரத்தை 1008 முறை சொன்னால் தொலைவில் நடக்க இருப்பதையும் பார்க்க முடியும் என்கிறார்கள் சித்தர்கள்..

அதேபோல தெய்வாம்சம் நிறைந்த வெற்றிலைகள், ஆன்மீகத்தில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றுள்ளது.. எந்தவொரு சுபகாரியத்தை ஆரம்பிக்கும்போதும், சுப காரியங்களுக்கான தொகையை ஒருவருக்கு தரும்போதும், வெற்றிலையையும் சேர்த்து தருவார்கள். வெறும் வெற்றிலை பாக்கை மட்டுமே வைத்து, திருமண நிச்சயத்தை உறுதி செய்து கொள்வார்கள்..

வெற்றிலைகள்: இதற்கெல்லாம் காரணம், வெற்றிலை மங்களம் மற்றும் செழுமையின் சின்னமாக கருதப்படுகிறது.. வெற்றிலையிலுள்ள உள்ளார்ந்த பண்புகள் நேர்மறை ஆற்றலையும், தெய்வீக ஆசீர்வாதங்களையும் வழிபடுபவர்களுக்கு ஈர்க்கக்கூடியது.

இந்த 3 தேவிகள் இருக்கும் இடங்களிலெல்லாம் முப்பெரும் தேவர்களும் இருப்பார்கள். இந்த அனைத்து தெய்வங்களின் ஆசீர்வாதமும் நமக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக வெற்றிலையை பூஜைகளில் வைத்து வழிபடப்படுகிறது.

காம்பு பகுதி: வெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரவஸ்வதியும், காம்பில் பார்வதியும் வாசம் செய்வதாக ஐதீகம்.. அதேபோல, பச்சையாக உள்ள இலைகள் அம்பாள் அம்சமாக பார்க்கப்படுகிறது.. தரித்ததும் சிவப்பாகிறது, அது சிவம். வெற்றிலை நுனியில் லக்ஷ்மி, நடுவில் சரஸ்வதி, காம்புப் பகுதியில் சக்தி வாசம் செய்வதாகவும், வெற்றிலையின் மேல்பாகம் ஸ்ரீதேவியும் அடி பாகம் மூதேவியும் உள்ளதாக முன்னோர்கள் தெரிவித்துள்ளார்கள்.

ஆனால், வெற்றிலையில் உள்ள காம்புகளை நீக்கிவிட்டு சாப்பிட சொல்வது ஏன் தெரியுமா? சிவபெருமான் உணவு உண்டதும் வெற்றிலை போட வேண்டும் என்று உமாதேவியாரிடம் சொல்லிக்கொண்டிருந்தாராம். இதைக் கேட்டுக் கொண்டிருந்த, பெருமானின் கழுத்தை அலங்கரிக்கும் நாகத்திற்கு, பெருமானுக்கு பணிவிடை செய்யும் வாய்ப்பு கிடைத்ததே என்று எண்ணி, சரசரவென்று. கழுத்தைவிட்டு கீழிறங்கி, வேகமாய் போய், வெற்றிலையை வாயில் கவ்விக்கொண்டு வந்து பெருமான் எதிரே போட்டதாம்.

சிவபெருமான்: இதை பார்த்துக்கொண்டு இருந்த, பெருமானுக்கும், தேவிக்கும் என்னசெய்வதென்றே புரியவில்லையாம். எனினும், அதன் பக்தியை நினைத்து, வெற்றிலையை கழுவிவிட்டு நுனியையும், அடியையும் கிள்ளிவிட்டு பயன்படுத்தினாராம.. கவ்விக்கொண்டு வந்து போட்டாலும், நாகம் விஷம் என்பதுடன், எந்த பக்கத்திலிருந்து கவ்வி வந்தது என்பது தெரியாததால், அதன் காம்பு மற்றும் நரம்புப்பகுதியை நீக்கி பயன்படுத்தினார்களாம்.

அறிவியலின்படி, வெற்றிலையின் பின்பறமுள்ள நரம்புப் பகுதிகள், நம்முடைய உடலில் இருக்கும் வெள்ளை அணுக்களை அழித்துவிடுமாம்.. அதனால்தான் பெரியோர்கள் அந்த நரம்புப் பகுதியை நீக்கிவிட்டு சாப்பிட சொல்கிறார்கள்.

பூஜைகளில் கழுவிய பிறகே வெற்றிலைகளை பயன்பாட்டுக்கு வைக்க வேண்டும். வெற்றிலையின் நுனிப்பாகம் எப்போதுமே சாமிக்கு இடதுபுறம் வருமாறு வைக்க வேண்டும்... அதாவது, வெற்றிலையின் காம்பு பகுதி சாமிக்கு வலதுபுறம் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். வெற்றிலை தெய்வத்தை பார்த்தவாறு வைக்க வேண்டும். ஒருபோதும், தெற்கு பகுதியை நோக்கி இருக்கக்கூடாது என்பார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+