Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மறந்தும் செருப்பை இப்படி வைக்காதீங்க.. செருப்புகள், ஷூக்கள் இப்படி வைத்தால் வீட்டில் வறுமை வந்துடும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீட்டில் பாசிடிவ் எனர்ஜி நிறைந்திருந்தாலே, மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் தழைக்கும் என்பார்கள்.. இதுகுறித்து வாஸ்துவில் நிறைய சொல்லப்பட்டுள்ளது. அந்தவகையில் செருப்புகள் குறித்தும் வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எப்போதுமே நம்முடைய வீட்டில் ஒவ்வொரு பொருளையும், அதற்குரிய திசையிலேயே வைக்க வேண்டும் என்பார்கள்.. காரணம், நாம் வைக்கும் பொருட்களும்கூட, நம்முடைய பிரச்சனைகளுக்கு அடிப்படையாக காரணமாக அமைந்துவிடும்.

நமக்கு தெரியாமலேயே செய்யும் சிறிய தவறுகள்கூட, வாஸ்துவில் பெரிய பாதிப்பை உண்டுபண்ணி, நிதி நிலைமையை மோசமாக்கிவிடும்.. இதனால், வீட்டில் எதிர்மறை ஆற்றலின் தாக்கம் அதிகமாகவே இருககும். அதனால்தான் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க வாஸ்துவில் உள்ள குறிப்புகளை நம்முடைய பெரியவர்கள் தவறாமல் பின்பற்றி வருகிறார்கள்.

Spirituality Slipper Vastu tips Shoes

காலணிகள்: அந்தவகையில், காலணிகளை வீட்டில் எப்படி வைக்க வேண்டும்? செருப்புகள் வைக்க தகுந்த திசை எது? செருப்பு ஸ்டாண்டு எங்கே வைக்கலாம்? என்பது குறித்தெல்லாம்கூட நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

எப்போதுமே நம்முடைய வீட்டில் ஒவ்வொரு பொருளையும், அதற்குரிய திசையிலேயே வைக்க வேண்டும் என்பார்கள்.. காரணம், நாம் வைக்கும் பொருட்களும்கூட, நம்முடைய பிரச்சனைகளுக்கு அடிப்படையான காரணமாக அமைந்துவிடும்.

மேற்கு திசை: செருப்புகளை வைப்பது மட்டுமல்ல, செருப்புகளை கழட்டுவதும்கூட, தெற்கு அல்லது மேற்கு திசையில் தான் கழற்ற வேண்டுமாம். வாசலிலேயே வைத்து செருப்புகளை கழற்றக் கூடாது..

செருப்பு வைக்கும் ஸ்டாண்ட் மேற்கு திசையில் அல்லது வீட்டின் தலைவாசலுக்கு வலது பக்கம் தான் வைக்க வேண்டும். மேற்கு திசை இல்லாமல் போனால், வடமேற்கு அல்லது தென்மேற்கு திசைகளை பயன்படுத்தலாம். இது குடும்பத்தில் ஏற்படும் பாதிப்புகளை ஓரளவு தடுக்கும். ஆனால், பெரும்பாலும் மேற்கு திசையையே பயன்படுத்த வேண்டும். இந்த ஸ்டாண்ட், பூஜையறை அல்லது கிச்சனின் அருகில் வைக்கக்கூடாது.

அபசகுனம்: அதேபோல, செருப்புகளை எப்போதுமே தலைகீழாக வைக்கக்கூடாதாம்.. அப்படி வைப்பது அபசகுனம் என்பார்கள்.. இதனால், குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகமாகிவிடும். அதுவும் வடகிழக்கு மூலையில் செருப்பு விடவே கூடாது. இப்படியிருந்தால் குடும்ப உறுப்பினர்களுக்கு கஷ்டம் அதிகமாகிவிடுமாம்..

சிதறிய நிலையிலும் கழற்றிவிடக்கூடாது. அதனால் வீட்டிற்குள் நுழைந்ததுமே செருப்பு எப்போதும் நேராக இருக்கும்படி கழற்றி விட வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களின் செருப்புக்களை அடுக்கியே வைத்திருக்க வேண்டும். குவியலாக செருப்புகளை போட்டு வைப்பதும் பிரச்சனைகளை தந்துவிடும். பயன்படுத்தாத பழைய செருப்புக்கள் இருந்தால் அதனை வெளியே வீசிவிட வேண்டும். பழைய செருப்புக்களை வைத்திருப்பதும் கஷ்டத்தை தந்துவிடும்.

மறந்தும்கூடாது: ஆனால், வடக்கு கிழக்கு மூலையில் மட்டும் செருப்பை விடவேக்கூடாது. இது குபேரனுக்குரிய இடம் என்பதால், இங்கு மட்டும் செருப்பை விடக்கூடாது.

வீட்டின் தலைவாசல் பகுதி எந்த அளவுக்கு வெளிச்சமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு நம்முடைய வாழ்க்கையும் பிரகாசமாக இருக்கும் என்பது நம்பிக்கை. வாசல் பகுதி எப்போதுமே சுத்தமாக இருக்க வேண்டும்.. பழைய பொருட்களை, நெளிந்த, உடைந்த நாற்காலிகள், குப்பைகள் போன்றவற்றை கதவுக்கு அருகில் வைக்கக்கூடாது... இதுவும் எதிர்மறையை அதிகரிக்கும்.

கண்ணாடி திசை: கதவுக்கு எதிரே கண்ணாடி வைப்பது நன்மையை தரும்.. இதனால் வீட்டிற்குள் நுழையும் எதிர்மறை ஆற்றலை தவிர்க்கலாம்.. வாசற்கதவை திறந்தாலும், மூடினாலும் சத்தம் வரக்கூடாது... இது குடும்ப உறுப்பினர்களின் மகிழ்ச்சியை கெடுத்துவிடும் என்பார்கள்.. எனவே, வாசற்கதவுகளில் கிரீச் சத்தம் கேட்காதவாறு அவ்வப்போது எண்ணெய் தடவிவிட வேண்டும்.

சின்ன கதவு, பெரிய கதவு என்றில்லாமல், ஒரே ஒரு கதவு மட்டும் வாசலில் இருக்க வேண்டும். இந்த கதவு பகுதியும் இருட்டாக இருக்கக்கூடாது.. எதிர்மறை ஆற்றலை விரைவாக இருட்டுகள் ஈர்த்துவிடும் என்பதால், எப்போதுமே வாசற்பகுதியில் விளக்கு போட்டு வைக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+