பர்ஸில் ஏலக்காயை போட்டு வைங்க.. பணத்தை ஈர்க்கும் ஏலக்காய் விதைகள்.. கடனை தீர்க்க சிம்பிள் பரிகாரம்
சென்னை: ஏலக்காய் விதைகளை பொறுத்தவரை, அதிக அளவிலான நார்ச்சத்து உள்ளது. செரிமான பிரச்சினைகளை தீர்க்கக்கூடியது.. உணவில் தொடர்ந்து சாப்பிடுவதால், மலச்சிக்கல், அமிலத்தன்மை, வாயு, வயிறு வீக்கம், வயிறு உப்புசம் உள்ளிட்ட கோளாறுகளை தடுக்கக்கூடியது.. சமையலில் பயன்படுத்தப்படும் ஏலக்காய், உணவை குடல் வழியாக விரைவாக கொண்டு செல்லவும் உதவுகிறது. இத்தனை பண்புகளை கொண்ட ஏலக்காய்கள், ஆன்மீகத்திலும் முக்கிய இடத்தை பெற்றுள்ளன.
குடும்பத்தில் பணச்சிக்கல், கடன் தொல்லை உள்ளிட்ட கஷ்டங்களில் சிக்கி கொண்டால், மகாலட்சுமியின் அருளை பெற்றாலே போதும்.. இதற்கு மகாலட்சுமிக்கு பிடித்தமான செயல்களை செய்ய வேண்டும்.

பணத்தை ஈர்க்கும் வாசனை ஏலக்காய்
இதில் முதன்மையானதுதான் ஏலக்காய் விதைகள். பூஜை அறையில் வைக்கப்பட்டிருக்கும் பித்தளை அல்லது செம்பு பாத்திரத்தில் ஏலக்காய்களை நிரப்பி வைப்பதால், லட்சுமி கடாட்சமும், நிதி வளமும் சேரும்..
அதேபோல, வெள்ளிக்கிழமைகளில் பூஜை அறையில் உள்ள மகாலட்சுமியை வழிபடுவதற்கு ஏலக்காய் மாலைகளை அணிவிக்கலாம். ஏலக்காய்களை மாலையாக கட்டி மகாலட்சுமிக்கு சாற்றி வழிபட்டு வந்தால், வறுமை நீங்கி செல்வம் சேரும் என்பது நம்பிக்கையாகும். ஏலக்காய் மாலை சாத்துவதுடன், ஏலக்காய் தீர்த்தம் வைத்து வழிபடும்போது, கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
திருஷ்டி எடுக்கும் ஏலக்காய்
அதேபோல 3 ஏலக்காய் விதைகளை வலது கையில் வைத்து, வடக்கு பார்த்து அமர்ந்து, "ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நமக" மந்திரத்தை 108 முறை உச்சரிப்பதால், உங்களது இன்னல்கள் மெல்ல தீரும்.. அதேபோல, ஒரு சிறிய பாத்திரத்தில் ஏலக்காய்களை நிரப்பி, வீட்டின் வரவேற்பறையில் வைத்தால் கண் திருஷ்டி விழாது.
9 ஏலக்காய்களை ஒரு நூலில் கோர்த்து, உங்களது வலது மணிக்கட்டில் கட்டிக் கொள்வதால், துஷ்ட சக்திகள் உங்களை அண்டாது.. அல்லது ஏலக்காய் தூளை ஒரு சிறிய பொட்டலமாக கட்டி மணிபர்ஸில் வைத்து கொண்டாலும், பணம் சேரும்.. பச்சை கற்பூரத்துடன், ஏலக்காயையும் பொடித்து பொட்டலம் போல கட்டி, பீரோ அல்லது பணப்பெட்டி அல்லது தொழில் செய்யும் இடங்களில் வைப்பதால் முன்னேற்றம் உண்டாகும்.
விநாயகருக்கு மாலை
விநாயகருக்கு ஏலக்காய், வெட்டி வேரில் பரிகாரம் செய்வது சிறப்பை தரும்.. கடனை அடைக்கவும், கொடுத்த பணம் திரும்ப கிடைக்கவும் இந்த பரிகாரத்தை செய்யலாம். இதற்கு விநாயகருக்கும், காமாட்சி அம்மனுக்கும் விளக்கில் நெய் விட்டு, பஞ்சு திரியுடன் வெட்டி வேரையும் கலந்து விளக்கேற்ற வேண்டும். "ஓம் கணபதியே நமஹ" என்ற மந்திரத்தை 108 முறை, ஒரு வாரத்துக்கு மனதார சொல்லி வழிபட வேண்டும்.
முதல் நாள் ஒரு ஏலக்காய், அடுத்த இரண்டு ஏலக்காய் என்று தினமும் ஊசி நூலில் ஏலக்காய்களை கோர்த்துக் கொண்டே போக வேண்டும். ஒரு வாரத்தில் ஏழு ஏலக்காய்கள் கட்டி முடித்ததுமே, விநாயகருக்கு அதனை மாலையாக அணிவித்து பிரார்த்திக் கொள்ள வேண்டும். உங்களது வேண்டுதல் நிறைவடைந்ததும், இந்த ஏலக்காய் மாலையை, யாரும் கால் படாத ஒதுக்குப்புறத்தில் போட்டுவிடலாம்.
-
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
இந்திய கப்பல்களில் வந்த 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஆனால் இது பத்தாது! ப.சிதம்பரம் சொன்ன பாயிண்ட் -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
ரஷ்யாவின் அதிரடி முடிவு.. திகைப்பில் நின்ற சீனா! கத்தார் போருக்கு நடுவே இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
தொங்கு சந்தையான பங்கு சந்தை.. 1200000000000 ரூபாய் பாழாப் போச்சு! மண்ணை அள்ளிப் போட்ட ஈரான் போர்! -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
IT Jobs: 3 பிரிவில் காலியிடங்கள்.. சென்னை உள்பட 2 இடங்களில் மார்ச் 21ல் இண்டர்வியூ.. ரெடியா? -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது!












Click it and Unblock the Notifications