எப்பேர்ப்பட்ட கடனும் தீரும்.. 27 மிளகு இருக்கா? பணம், மகிழ்ச்சி பொங்க.. கை கொடுக்கும் கலச பரிகாரம்
சென்னை: நாள் முழுவதும் எவ்வளவுதான் சம்பாதித்தாலும், கடன் தொல்லைகள் உலுக்கி எடுத்து விடும்.. இந்த கடன் தொல்லையிலிருந்து விடுபட வேண்டுமானால், அதற்கு எளிய பரிகாரங்களே நமக்கு உதவுகின்றன.. அதில், ஒருசிலவற்றை மட்டும் இப்போது பார்ப்போம்.
கடனில் மூழ்கியிருப்பவர்களுக்கு எந்நேரமும் சிக்கல்களும், அவதிகளும் இருக்கும்.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக கழியும்.. அன்றைய தினத்தை நகர்த்துவதே பெரும்பாடாக இருக்கும்.. இதனால் மனஉளைச்சலுக்கும் ஆளாக நேரிடும்..

பெருமாள் கோவில்: இப்படி கடன் சிக்கலில் உள்ளவர்கள் பெருமாள் கோவிலுக்கு சென்று சனிக்கிழமை, புதன்கிழமைகளில் சக்கரத்தாழ்வார் சன்னிதியில், துளசி மாலை சாற்றி, 12 முறை வலம் வரலாம். இதுபோல் 12 வாரமும் துளசி மாலை சாற்றி பிரார்த்தனை செய்து வந்தால், கடன் பிரச்சனைக்கு விடிவுகாலம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
அதேபோல, உங்கள் வீட்டு பூஜையறையில் ஒரு தட்டு வைத்து, அதன்மீது வெள்ளி அல்லது செம்புக் கலசத்தை வைக்க வேண்டும். கலசம், தட்டு இரண்டிற்குமே மஞ்சள் தடவி குங்கும பொட்டு வைத்து, வாசனை மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும்..
பூஜையறை: இப்போது உங்களது பணம் 100 ரூபாய் அல்லது விருப்பமான தொகையை கலசத்திற்குள் போட்டு, மஞ்சள் நீரில் நனைத்த ஒரு நூலால், கலசத்தை மஞ்சள் துணியை வைத்து இறுக்கமாக கட்டிவிட வேண்டும். இந்த கலசத்தை பூஜை அறையிலேயே வைத்து தினமும் பூஜை செய்ய வேண்டும்.
இதுபோல 9 சனிக்கிழமைகளில் இந்த கலசத்தை வைத்து பூஜை செய்து முடித்ததுமே, கடைசி கிழமையில் கலசத்தில் உள்ள காணிக்கையை பெருமாள் கோவில் உண்டியலில் போட்டுவிட வேண்டும். இந்த கலச பரிகாரம் செய்யும்போது, வீட்டிலுள்ள கடன், வறுமை ஒழிந்து, செல்வம் தங்கும் என்கிறார்கள்.
கோமாதா வழிபாடு: அதேபோல, செல்வத்தின் அம்சமான கோமாதாவின் வழிபாடுகளையும் மேற்கொள்ளலாம். இதற்கு காலையில் தூங்கி எழுந்ததுமே, பசு மாட்டை பார்க்க வேண்டும்.. பசுவுக்கு கீரையும் பழமும் கொடுத்து, பசுவின் பின்புறத்தை தொட்டு வணங்க வேண்டும். இதனால், வறுமை மெல்ல விலகும்.
அதேபோல, பைரவருக்கு மிளகு பரிகாரம் செய்தாலும் பலன் கிடைக்கும்.. அதாவது, 27 மிளகுகளை ஒரு சிறிய வெள்ளை துணியில் வைத்து மூட்டையாக கட்டிக்கொண்டு, அதனை தூங்கும் முன்பு, உங்களது தலையணைக்கு அடியில் வைத்துவிட வேண்டும். காலையில் எழுந்தவுடன் குளித்து விட்டு, இந்த மிளகு மூட்டையுடன், அருகிலுக்கு கோவிலுக்குச் செல்ல வேண்டும்..
பைரவர் : அங்கு பைரவர் முன்பு, அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, இந்த மிளகு மூட்டையை அதில் நனைத்து வைத்து தீபம் ஏற்றவேண்டும். அப்போது உங்களது கடன் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். இந்த பரிகாரத்தை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் 9 வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.. இதனால், கடன் பிரச்சனை விரைவில் தீர வழி கிடைக்கும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications