அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நவராத்திரி கொலு! தசாவதாரம் முதல் கைலாயத்தில் சிவன் வரை! அசத்தல்
கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின், மான்டேகா நகரில் "ஒன்இந்தியாதமிழ்" வாசகர் ராஜி கோவிந்தராஜனின் வீட்டில் நவராத்திரியை முன்னிட்டு கொலு வைக்கப்பட்டுள்ளது. இந்த கொலுவுக்கு 150-க்கும் மேற்பட்டோர் வந்திருந்து கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசை முடிந்தவுடன் அடுத்த நாளே நவராத்திரி தொடங்கும். இந்த 9 நாட்களும் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய 3 தெய்வங்களை போற்றும் வகையில் தலா 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

அதாவது மகிஷாசுரன் என்ற அசுரனை அழிக்க 9 நாட்கள் கொலு வைத்து போரிட்டு 10 ஆம் நாள் வென்றார். அது முதல் மகிஷாசுரமர்த்தினி என அழைக்கப்பட்டாள்.
அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த 22 ஆம் தேதி தொடங்கிய நவராத்திரி, வரும் அக்டோபர் 1 ஆம் தேதி (நாளை) ஆயுத பூஜையுடன் முடிவடைகிறது. அம்பிகையை கொண்டாடும் வகையில் வழக்கம் இருக்கும் வீடுகளில் இந்த கொலு ஆண்டுதோறும் வைக்கப்படுகிறது.

அந்த வகையில் நமது "ஒன்இந்தியாதமிழ்" வாசகர் ராஜி கோவிந்தராஜன், அமெரிக்காவில் கலிபோர்னியாவில் மான்டேகாவில் வசித்து வந்தாலும் ஆண்டுதோறும் கொலு வைக்கும் பழக்கத்தை தவறாமல் செய்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளை மையமாக வைத்து அவர் கொலு வைத்து வருகிறார்.

இந்த ஆண்டு 7 படிகளில் அவர் கொலு வைத்துள்ளார். அதில் அழகான கொலு பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதில் தசாவதாரம் எனும் மையப்பொருளை வைத்து அவர் வைத்திருக்கும் கொலுவை பார்த்தால் அப்படியே தசாவாரத்தை தத்ரூபமாக நேரில் பார்த்தது போல் இருக்கிறது.

அது போல் துர்க்கை, சரஸ்வதி, அஷ்டலட்சுமிகளையும் தனது கொலுவில் அவர் வைத்துள்ளார். அது போல் ராமர் சீதை, கைலாயத்தில் சிவன் இருப்பது போன்று விஷ்ணுவின் பல்வேறு வடிவங்களையும் வைத்துள்ளார்.
இந்த விழாவுக்கு அவர் வசிக்கும் பகுதியை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோரை அழைத்துள்ளார். அப்போது அங்கு வீணை வாசிக்கப்பட்டது. குழந்தைகள் நடனமாடினார்கள். அது போல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பக்தி பாடல்களை பாடினர்.

அமெரிக்காவில் உள்ள மக்களுக்கும் தமிழ் கலாச்சாரத்தை புகுத்திய இந்த நவராத்திரி விழாவில் கலந்து கொண்டோருக்கு உணவு பரிமாறப்பட்டது. மேலும் மஞ்சள், குங்குமம், திருமாங்கல்ய சரடு, வெற்றிலை பாக்கு, தேங்காய், வாழைப்பழம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் இருக்கும் தாம்பூலம் வழங்கப்பட்டது. பின்னர் ஆரத்தி எடுக்கப்பட்டு விழா முடிந்தது.

-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications