பிரசாத தோசைக்கு சண்டை.. வடகலை vs தென் கலை மோதல்.. கடைசியில் தோசை கீழே வீசப்பட்ட கொடுமை.. காஞ்சியில்
காஞ்சிபுரம்: வைகாசி பிரம்மோற்சவம் நடைபெற்று முடிந்துள்ள காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வடகலை, தென்கலை பிரிவு அர்ச்சகர்களிடையே பிரசாத தோசையை யாருக்கு கொடுப்பது என்பதில் மோதல் முற்றியுள்ளது. இறைவனுக்கு படைத்த பிரசாத தோசையை யாருக்குமே தராமல் கடைசியில் கீழேயே வீசி விட்டார். இந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மகாவிஷ்ணுவின் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று. திருவரங்கம், திருப்பதி ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் பெற்ற தலம். யாகம் செய்து தம்மை வழிபட்ட பிரம்மதேவருக்கு தரிசனம் தந்து வரமும் அருளியதால், பெருமாள் வரதராஜ பெருமாள் என்று அழைக்கப்படுகிறார்.
இந்தக் கோயிலில் அத்தி மரத்தாலான பெருமாள், 'அத்தி வரதர்' என்ற பெயரில், கோயில் திருக்குளத்தில் பள்ளிகொண்டிருக்கிறார். 40 வருடங்களுக்கு ஒருமுறை குளத்திலிருந்து வெளியே எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் தருவார். கடந்த 2019ஆம் ஆண்டு அத்திவரதர் பல லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.
வரதராஜ பெருமாள் கோயிலில், பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யப்படும் காஞ்சிபுரம் இட்லி மிகவும் பிரசித்தி பெற்றது. இது மட்டுமல்லாமல் தோசையும் வடையும் நைவேத்தியம் செய்யப்படுகின்றன.
பிரசாத இட்லி மிளகாய் சேர்க்காமல் மிளகும் நெய்யும் சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது. பெருமாளுக்கு இரண்டு இட்லிகளையும் நைவேத்தியம் செய்த பிறகு, ஓர் இட்லி கோயில் கைங்கர்யம் செய்பவர்களுக்கும், மற்றொரு இட்லி கட்டளைதாரருக்கும் கொடுக்கப்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தோசையும் வடையும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன.
15ஆம் நூற்றாண்டில் கோயிலுக்கு வழிப்பட்ட நிவந்தம் ஒன்று, கோயிலில் தாயார் சந்நிதிக்கு எதிரில் உள்ள அந்தக் கல்வெட்டில் இறைவனுக்குப் படைக்கப்படும் தோசைக்குத் தேவையான பொருள்கள், எப்படிச் செய்ய வேண்டும், அதை யார் யாருக்கு எப்படிப் பகிர வேண்டும் என்பதுபோன்ற தகவல்களைத் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பதுடன், அதற்குத் தேவையான தானம் கருவூலத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், கிரந்தமும் தமிழும் கலந்த மொழியில் பொறிக்கப்பட்டிருக்கிறது.
வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கடந்த 10 நாட்கள் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. 3ஆம் விழாவன்று இரவு அனுமந்த வாகன உற்சவமும் நடந்தது. அப்போது வேத பாராயணம் பாடுவதில் வடகலை மற்றும் தென்கலை பிரிவு அர்ச்சகர்கள் இடையே லேசான சலசலப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் நித்தியபடி பூஜைகளும் நடந்தன.
அப்போது சாமிக்கு நைய்வேத்திய நித்தியபடி செய்த பிரசாதம் வழங்கும்போது வடகலை பிரிவினர் வேத பிராயணம் பாடிக்கொண்டு வந்தனர்.
அப்போது வடகலை மற்றும் தென்கலை பிரிவு அர்ச்சகர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்றைய தினம் கோவிலில் வரதராஜ பெருமாளுக்கு படைக்கப்பட்ட பிரசாத தோசையை யாருக்கு கொடுப்பது என்பது தொடர்பாக அர்ச்சகர்களிடையே மோதல் ஏற்பட்டது. வடகலை, தென்கலை பிரிவு அர்ச்சகர்கள் ஒருவருக்கொருவர் கத்தி சண்டை போட்டுக்கொண்டனர். ஒருவரை ஒருவர் தள்ளி விட்டனர். இந்த தள்ளுமுள்ளு சண்டையில் அர்ச்சகர் ஒருவரின் கையில் இருந்த பிரசாத தோசை யாருக்கும் கிடைக்காமல் கீழே விழுந்து விட்டது. இறைவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதம் கீழே விழுந்தது பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வேத பாராயணம் செய்வது தொடங்கி பிரசாத தோசையை யாருக்கு கொடுப்பது என்பது வரை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அர்ச்சகர்களிடையே ஏற்பட்டுள்ள மோதல் பக்தர்களிடையே முக சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications