தை அமாவாசை.. ராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கு வழிபாடு.. பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடி தர்ப்பணம்
ராமநாதபுரம்: தை அமாவாசையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்லாயிக்கணக்கானோர் ஆறு, கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர். ராமேஸ்வரம், கன்னியாகுமரி, பாபநாசத்தில் பல்லாயிரக்கணக்கானோர் தர்ப்பணம் அளித்து முன்னோர்களை வழிபட்டனர்.
அமாவாசை தினம் தந்தை காரகன் சூரியனும் தாய் காரகன் சந்திரனும் ஒரே ராசியில் சந்திக்கும் போது ஏற்படுகிறது. 30 திதிகளில் அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்க ஏற்ற திதி. இந்த நாளில் நம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது வழக்கம். புனித நீர் நிலைகளுக்கு சென்று நீராடி அவர்களுக்கு பிடித்தமான பொருட்களை வைத்து படையலிட்டு எள்ளும் தண்ணீரும் அளித்து வழிபடுவார்கள்.

வருடந்தோறும் அமாவாசை திதிகளில் தர்ப்பணம் அளிக்க முடியாதவர்கள் ஆடி அமாவாசை, புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை, தை அமாவாசை போன்றவை சிறப்பு வாய்ந்த நாட்களாகும். நம்முடைய பித்ருகளுக்கு தர்ப்பணம் பூஜை செய்யாதவர்கள் முன்னோர்களின் சாபத்திற்கு ஆளாகின்றனர். அப்படி சாபம் பெற்றவர்களின் வீடுகளில் தான் ஊனமுற்ற குழந்தைகள் பிறக்கிறது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே வரும் தை அமாவாசை நாளில் நாம் மறக்காமல் தர்ப்பணம் அளிக்க வேண்டும்.
பித்ரு லோகத்தில் உள்ள நமது முன்னோர்கள் தட்சிணாயாண புண்ணிய காலமான ஆடி அமாவாசை நாளில் பூவுலகத்திற்கு வந்து புரட்டாசி மாதத்தில் மகாளாய பட்ச காலத்தில் நம்முடனே இருந்து உத்தராயாண புண்ணிய காலமான தை மாதத்தில் வரும் அமாவாசை நாளில் நம்மை ஆசிர்வதித்து மீண்டும் பிதுர் லோகத்திற்கு திரும்பி செல்வதாக ஐதீகம்.
தை அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும்.இந்த ஆண்டு தை அமாவாசை இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் முன்னோர்களை நினைத்து வணங்கி அவர்களுக்கு திதி கொடுக்கலாம். இதன்மூலம் நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும். தை அமாவாசையில் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபட்டு விட்டு, அவற்றை ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்கினால் நன்மைகள் பல வந்து சேரும்.
இன்றைய தினம் தை அமாவாசை கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி ஆகிய தீர்த்தங்களில் அதிகாலையிலேயே குவிந்த ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபட்டனர். எள் பச்சரிசி தர்ப்பபை வைத்து வழிபட்டு தர்ப்பணம் அளித்தனர். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம், பாபநாசம் ஆகிய நீர்நிலை பகுதிகளில் புனித நீராடி, அமாவாசை தர்ப்பணம் கொடுத்தனர். திருவள்ளூரில் வீற்றிருக்கும் வீரராகவப் பெருமாள், சாலிஹோத்திர மகரிஷி என்பவருக்கு தை அமாவாசை அன்று காட்சி கொடுத்தார். இந்த நிகழ்வு அந்த ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆலயத்தை அமாவாசை தலம்' என்றும் அழைப்பார்கள். தை அமாவாசை தினமான இன்று ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபட்டனர். பக்தர்களுக்கு தேனும், தினை மாவும் பிரசாதமாக வழங்கப்பட்டது.
தை அமாவாசை தினமான இன்று திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்களால் ஏற்றப்படும் இந்த லட்ச தீபங்களால் நெல்லையப்பர் ஆலயம் முழுவதும் ஒளிவெள்ளத்தில் பிரகாசிக்கும்.
சென்னை மயிலாப்பூர் தெப்பக்குளத்தில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபட்டனர். திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையிலும் பாபாநாசத்திலும் குவிந்த ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களை வழிபட்டனர். காகம் சனி பகவானின் வாகனமாகக் கருதப்படுகிறது. நமது முன்னோர்களாகக் கருதப்படும் காகங்களுக்கு அமாவாசை போன்ற நாட்களில் உணவு படைத்து வழிபடுவது வழக்கம். முன்னோர்களின் ஆன்மாக்கள் அமாவாசையன்று காகம் வடிவில் நமது இல்லம் தேடி வந்து உணவு உண்டு மனம் குளிர்ந்து நமது குடும்பத்துக்கு ஆசி வழங்குவதாக ஐதீகம்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications