தை அமாவாசை: பித்ரு சாபம் பெற்றால் என்ன நடக்கும்? கருட புராணம் சொல்லும் விளக்கம்! ’இதை’ மறக்காதீங்க!
சென்னை: மாதம்தோறும் அமாவாசை வந்தாலும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. தை அமாவாசை அன்று பித்ரு லோகம் புறப்படும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது மிகச் சிறந்த பலன்களை அளிக்கும். அதே நேரத்தில் பித்ருகளின் சாபம் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்து கருட புராணம் விளக்கி இருக்கிறது.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை வருகிறது. அதே நேரத்தில் ஆடி மாசம் வரும் அமாவாசை, புரட்டாசியில் வரும் மஹாளய அமாவாசை, தை அமாவாசை போன்றவை அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.

தை அமாவாசை தினத்தில் முன்னோர்கள் நினைத்து தர்ப்பணம் கொடுப்பதும் இறை வழிபாடு நடத்துவதும் மிகச் சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு தை அமாவாசை 29ஆம் தேதி புதன்கிழமை வந்துள்ளது.
28ஆம் தேதி இரவு 8.10 மணிக்கு தொடங்கிய அமாவாசை ஜனவரி 29ஆம் தேதி (இன்று) இரவு 7.12 மணி வரை தொடர்கிறது. இந்த நேரத்தில் பித்ரு தர்ப்பணம் கொடுப்பது மிகச்சிறந்த பலன்களை அளிக்கும் என்கின்றனர் ஜோதிட நிபுணர்கள். அதே நேரத்தில் தை அமாவாசைக்கும், ஆடி அமாவாசைக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. ஆடி அமாவாசை அன்று பித்துரு லோகத்தில் இருந்து உலகிற்கு வரும் முன்னோர்கள், மகாளய அமாவாசையில் நம் வீட்டு முன்பு நின்று நாம் படைக்கும் உணவுகளையும் தர்ப்பணங்களையும் ஏற்றுக் கொள்கின்றனர்.
அதற்குப் பிறகு அவர்கள் தை அமாவாசையில் மீண்டும் பித்ரு லோகம் புறப்பட்டுச் செல்வதாக ஐதீகம். அதன் காரணமாகத் தான் இந்த மூன்று அமாவாசைகளும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மறைந்த தாய், தந்தை, தாத்தா, முப்பாட்டன்கள் உள்ளிட்ட முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய முக்கிய கடமை இருக்கிறது. அதன் காரணமாகத் தான் சாதத்தை ஆறு பிண்டங்களாக வைத்து எள், தண்ணீர், தர்பை கொண்டு அவர்களை பூஜிக்க வேண்டும்.
ஆறு பிண்டங்களையும் இணைத்து காகத்திற்கு வைக்கும் போது நம் முன்னோர்களை அவற்றை உணவாக எடுத்துக் கொள்வதாக நம்பிக்கை. இந்த தர்ப்பணம் பித்ருகளின் குறைகள், கோபங்களை தணிக்கும். அவர்களின் மனதை குளிரச் செய்து குடும்பத்தில் எழுந்த பிரச்சனை இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள். பித்ரு கடமை நிறைவேற்றினால் நன்மைகள் வளரும் என சிவபெருமான் ஸ்ரீராமரிடம் சொல்லி இருக்கிறார். அதனால் தான் வனவாச காலத்தில் இருந்த போது தந்தைக்குச் செய்ய முடியாத தர்ப்பணத்தை ராமேஸ்வரத்தில் வைத்து ராமபிரான் செய்தார் என்கிறார்கள்.
ஒருவேளை பித்ருகளுக்கு நாம் தை அமாவாசையில் தர்ப்பணம் செய்யாவிட்டால் என்ன மாதிரியான பிரச்சனைகள் வரும் என்பதை விளக்கி இருக்கிறது கருட புராணம். நம் முன்னோர்களுக்கு சிரத்தையுடன் செய்யும் காரியம் என்பதால் இது 'சிரார்த்தம்' என அழைக்கப்படுகிறது. எனவே தை அமாவாசை திதி அன்று ஆறு கடல் உள்ளிட்ட நீர் நிலைகளின் நீராடி முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படையில் வைத்து தர்ப்பணம் செய்து விரதம் கடைபிடிக்கலாம். தொடர்ந்து வீட்டில் கிழக்குப் பக்கமாக முன்னோர்களின் புகைப்படங்களை வைத்து அவர்களுக்கு பிடித்தவற்றை படைத்து காகங்களுக்கு உணவாக வழங்கலாம்.
தை அமாவாசை அன்றுதான் பித்ருலோகம் புறப்படும் முன்னோர்களுக்கு தாகம் அதிகமாக இருக்கும் அதன் காரணமாகத்தான் அன்று நீர்நிலைகளில் எள், தண்ணீர் தெளித்து தர்ப்பணம் செய்கிறோம். அதனால் அவர்கள் மகிழ்ச்சியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள். 'பித்ருக்களின் சாபத்திற்கு ஆளாகிவிட்டால் தெய்வத்தால் கூட கருணை காட்ட முடியாது' என்கிறது கருட புராணம். எனவே நிச்சயமாக தை அமாவாசையான இன்று உங்கள் முன்னோர்களுக்கு வழிபாடு நடத்துவது சிறந்த பலன்களை தரும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications