தை மாத தேய்பிறை அஷ்டமி.. தேவ தேவாஷ்டமி.. பைரவரை தீபம் ஏற்றி வழிபடுங்கள்.. கொடிய தோஷங்கள் நீங்கும்
சென்னை: கொடுத்த கடன் வசூல் ஆக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து 8 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும். தை மாத தேய்பிறை அஷ்டமி தேவ தேவாஷ்டமி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கால பைரவருக்கு எந்த ராசிக்காரர்கள் என்ன தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்று பார்க்கலாம்.
பைரவர் என்றால் பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்று பொருள். பைரவரை வழிபட்டால் நிச்சயம் உடனே கைமேல் பலன்கள் கிடைக்கும். இவரின் அருள் இருந்தால் அஷ்ட சித்தியும் கைகூடும் என்பதை உணர்ந்ததால் சமீபகாலமாக சிவ ஆலயங்களில் பைரவர் சன்னதியில் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக அஷ்டமி திதி நாட்களில் பைரவருக்கு அரளிப்பூ மாலை சாற்றி வழிபடுகின்றனர். இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் தொடங்கி நாளை சனிக்கிழமை மாலை வரைக்கும் அஷ்டமி திதி உள்ளதால் பைரவர் வழிபாடு பற்றி இன்று அறிந்து கொள்வோம்.

காலத்தின் கடவுளான கால பைரவர் தலை விதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர். சிவபெருமானின் அம்சமாக பைரவர் கருதப்படுகிறார். காசி நகரின் காவல் தெய்வம் இவர். நவ கிரகங்களையும், நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்துபவர் பைரவர்தான்.
கடன் பிரச்சினை நீங்கி பணம் வருமானம் அதிகரிக்க செல்வ வளம் பெருக கால பைரவருக்கு விளக்கேற்றி வழிபட வேண்டும். தேய்பிறை அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி வழிபட கடன் பிரச்சினை நீங்கும். பயம் அகலும் எதிரிகள் தொல்லை நீங்கும். பைரவருக்கு வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அர்ச்சனை செய்து வணங்கினால் கடன் பிரச்சினைகள் நீங்கும்.
தை மாதம் செவ்வாய்க் கிழமைகளில் பைரவரை வழிபட்டு விரதம் இருப்பது மிகுந்த பலன்களை கொடுக்கும். எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். ஆனால் செவ்வாய்க் கிழமைகளில் அஷ்டமி இணைந்து வந்தால் அதைவிடச் சிறப்பான நாள் ஏதுமில்லை. குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும்.
பைரவ விரதத்தின் நோக்கமே கேடுகளை அழிப்பதுதான். அதிகாலையில் குளித்து விட்டு, பைரவரை மனதில் நினைத்து வணங்க வேண்டும். பகலில் ஏதாவது ஒரு பொழுது மட்டும் எளிய உணவு சாப்பிடலாம். இரவில் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. அன்று மாலை பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபட வேண்டும். வடைமாலை சாற்ற முடியாதவர்கள் விளக்கேற்றி வழிபடலாம். மறுநாள் நவமியன்று காலை மீண்டும் கோவிலுக்கு சென்று விநாயகர், சிவன், அம்பாள், பைரவரை வணங்கி, ஏழைகளுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும்.
தேய்பிறை அஷ்டமி தினத்தில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். பஞ்ச தீபம் என்பது இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் ஆகும். இவற்றை தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும். அகல் விளக்கில் ஏற்றலாம். பைரவருக்கு இந்த பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம்.
பைரவருக்கு பௌர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத கடன் தொல்லைகள் நீங்கும். இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் பஞ்ச தீப எண்ணெய் ஆகும். இவற்றை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் தீபம் ஏற்ற வேண்டும். பைரவருக்கு இந்த பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம்.
ஏதோ ஒரு சூழ்நிலையில் நாம் சொத்துக்களையோ நகை, பணத்தையோ இழந்திருப்போம். பைரவரின் சன்னதி முன்னால் 27 மிளகை வெள்ளை துணியில் சிறு மூட்டையாக கட்டி அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி 27 நாட்கள் வழிபட்டால் இழந்த பொருட்களும், சொத்துக்களும் திரும்ப கிடைக்கும். தடைபட்ட திருமணம் நடக்கவும், எதிரிகள் தொல்லை நீங்கவும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும். அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம் மற்றும் ஏவல் போன்ற செய்வினை கோளாறுகள் அகலும்.
குழந்தை செல்வம் பெற, திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தைப்பேறு இல்லாதவர்கள் ஆறு தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிவப்பு அரளி பூக்களால் பைரவரை அர்ச்சனை செய்து, ஏழை குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபட விரைவில் அவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும்.

மேஷம் விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமை விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு மாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருளைத் திரும்பப் பெறலாம். எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம்.
திங்கட்கிழமை நாளில் கடக ராசிக்காரர்கள் வழிப்படுவது சிறப்பு. வில்வார்ச்சனை செய்திட சிவனருள் கிட்டும். திங்கட்கிழமை அல்லது சங்கடஹர சதுர்த்தியன்று பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து சந்தனக் காப்பிட்டு புனுகு பூசி நந்தியாவட்டை மலர் மாலை அணிவித்து வழிபட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் விலகும்.
சிம்ம ராசிக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு வடைமாலை சாற்றி வழிபடலாம். தடைகள் நீங்கித் திருமணம் கைகூடும். கடன் வாங்கி வட்டியும், அசலும் கட்ட முடியாமல் தவிப்பவர்கள் ராகு காலத்தில் காலபைரவருக்கு முந்திரிப்பருப்பு மாலை கட்டி, புனுகு சாற்றி, வெண் பொங்கல் நைவேத்தியம் வைத்து வழிபடலாம்.
புதன்கிழமையன்று மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் பைரவரை வழிபடுவது சிறப்பு. நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பூமி லாபம் கிடைக்கும். வியாழக்கிழமையன்று தனுசு, மீனம் ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு. விளக்கேற்றி வந்தால் ஏவல், பில்லி சூன்யம் விலகும். வெள்ளிக்கிழமையன்று ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு மாலையில் வில்வ இலைகளாலும், வாசனை மலர்களாலும் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வந்தால் வறுமை நீங்கி, செல்வப் பேறு கிட்டும்.
சனிக்கிழமை மகரம், கும்ப ராசிக்காரர்கள் வழிபடுவது சிறப்பு. சனி பகவானுக்கு குரு பைரவர். ஆகவே சனிக்கிழமை அன்று இவரை பிரத்யேகமாக வழிபடுவதால் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டமச் சனி விலகி நல்லவை நடக்கும்.
கால பைரவர் உடலில் பூமியைத் தாங்கும் எட்டு நாகங்களும் மாலையாக இருந்து அலங்கரிப்பதால் இவரை வழிபட்டால் சர்ப்ப தோஷங்களும் நீங்கும். சனி பிரதோஷத்தன்று பைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து அவரவர் வசதிக்கேற்ப தேங்காய், தேன், தயிர் சாதம் படைத்து வழிபட்டு பிரசாதமாகப் பக்தர்களுக்கு விநியோகிக்க வழக்குகளில் வெற்றி, வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
எதிரிகளால் ஏற்படும் தொல்லை மற்றும் பில்லி, சூனியம் செய்வினை கோளாறுகள் அடியோடு அகலும். அஷ்டமி திதியில் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம் நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். பதவி உயர்வும் கிட்டும். தொழிலில் லாபம் கிட்டும்.
தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒவ்வொரு செவ்வாய் தோறும் பைரவரை வணங்கி கால பைரவ அஷ்டகம் படித்து வந்தால் எதிரிகளை அழித்து, கடன்கள் தீர்ந்து, யம பயம் மட்டுமில்லாது எவர் பயமுமின்றி நீண்ட நாள் நிம்மதியாக வாழலாம்.சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவரை வணங்கினால், சனிபகவான் மகிழ்ச்சியடைவார். ஏழரை சனி, அஷ்டமத்து சனி, அதிக துன்பங்களை தரமாட்டார். எனவே, பைரவரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் இன்னல்கள் மற்றும் தோஷங்கள் யாவும் நீங்கும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications