Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தைப்பூசம்.. தமிழ் கடவுள் முருகன் ஆலயங்களில் கோலாகலம்.. பழனியில் திருக்கல்யாணம்.. நாளை தேரோட்டம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: தைப்பூசம் திருவிழா நாளைய தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழ் கடவுள் முருகப்பெருமான் ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகிறது. காவடி சுமந்து கொண்டு பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து வருகின்றனர். முத்துக்குமாரசாமிக்கு இன்று திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. தைப்பூச தேரோட்டம் காண பழனியில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

தைப்பூசம் என்றாலே அது தமிழ்கடவுள் முருகனுக்கு உகந்த விழா. அசுரர்களை அழிக்க முருகனுக்கு அன்னை பார்வதி சக்தி வேல் அளித்த நாளாகவும் புராண கதைகள் கூறுகின்றனர். முருகனின் அறுபடை வீடுகளான பழனி, திருச்செந்தூர், திருத்தணி, திருப்பரங்குன்றம், சுவாமி மலை, பழமுதிர்சோலை ஆகிய முருகன் கோவில்களில் தைப்பூசம் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும்.

 Thaipusam celebration Murugan Temple Thirukalyanam in Palani

தை மாதத்தில் வரும் பூசம் நட்சத்திரமே தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. இந்த தைப்பூசமானது குரு பகவானுக்கு உரிய வியாழக்கிழமையில் வருகிறது. இதனால், இந்த தைப்பூசம் இன்னும் கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது. 25ம் தேதி வியாழக்கிழமை காலை 9.14 மணி முதல் அடுத்த நாள் ஜனவரி 26ம் தேதி காலை 11.07 மணி வரை பூசம் நட்சத்திரம் உள்ளது. இதனால், 25ம் தேதியே தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இது மட்டுமின்றி வரும் 24ம் தேதி இரவு 10.44 மணி முதல் தைப்பூச தினமான 25ம் தேதி இரவு 11.56 மணி வரை பௌர்ணமி திதி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தைப்பூச தினத்தை முன்னிட்டு அறுபடை வீடுகள் மட்டுமின்றி அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகளும், அபிஷேகங்களும் நடைபெறும். அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படும் பழனியில் இன்று திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. நாளைய தினம் நடைபெற உள்ள தைப்பூச தேரோட்டத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

இந்த ஆண்டுகக்கான தைப்பூச திருவிழா பழநியில் ஊர்க்கோயில் என அழைக்கப்படும் பெரியநாயகியம்மன் கோயிலில் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அது முதலே பக்தர்களின் கூட்டம் பழனிக்கு அலைமோதி வருகிறது. ஆறாம் திருவிழாவான இன்று வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு வெள்ளித் தேரில் முத்துக்குமார சுவாமி, வள்ளி தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வருவார்.

முக்கிய விழாவான தைப்பூச தினமான நாளைய தினம் மாலையில் தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டத்தைக் காண லட்சக்கணக்காண பக்தர்கள் பழனியில் குவிந்த வண்ணம் உள்ளனர். தைப்பூச திருவிழா முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதால் பழனி நகரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. திண்டுக்கல் - பழனி சாலை, மதுரை சாலை, தாராபுரம் சாலை என திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் கூட்டம் வெள்ளம் போல் காட்சியளிக்கிறது.

பாதையாத்திரையாக வரும் பக்தர்களுக்காக வழி நெடுகிலும் பக்தர்களுக்காக அன்னதான முகாம்களும், மருத்துவ குழுவினரும் நியமிக்கப்பட்டுள்ளனர். பாத யாத்திரை பக்தர்களுக்கு உதவுவதற்காக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளனர்.

தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், விரதமிருந்து முருகக் கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக் கொண்டால் அவர்களைப் பீடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. செம்பட்டி, ஒட்டன்சத்திரம், காரைக்குடி, சிவகங்கை, திருப்பத்தூர், காங்கேயம், திருப்பூர் என பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகளை சுமந்து கொண்டு பாதையாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+