Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பதி பிரம்மோற்சவம்.. கருடசேவையில் மலையப்பசுவாமி.. 3 லட்சம் பேர் எழுப்பிய கோவிந்தா முழக்கம்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: அலைகடலென திரண்ட பக்தர்கள்.. காணும் இடமெங்கும் கோவிந்தா முழக்கம் என திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திருமலை பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட வாகன சேவையை காண 3 லட்சம் பக்தர்கள் திருமலையில் திரண்டனர்.

திருமலை திருப்பதி வருடாந்திர பிரம்மோற்சவம் கருடக்கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினசரியும் மலையப்பசுவாமி அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வருகிறார். ஐந்தாம் நாளான நேற்றைய தினம் காலையில் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி அணிந்து உலா வந்தார்.

Thirumala Tirupati Brahmotsavam 2023 5 lakhs devotees witness Garuda vahana sevai

நேற்று மாலையில் மலையப்பசுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளினார். இந்த உற்சவத்தில் மலையப்ப சுவாமி தங்கம், வைரம், மரகத பச்சை கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு பெரிய திருவடி எனப்படும் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது கூடியிருந்த பக்தர்கள் எழுப்பிய கோவிந்தா முழக்கம் விண்ணை எட்டியது.

தூளசி மாலையுடன் மூல விக்ரக மூர்த்தியான ஏழுமலையான் ஸ்ரீ வெங்கடேஸ்வரசுவாமி அணிந்திருக்கும் பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தங்க சங்கிலி, மகர கண்டி, லட்சுமி ஹாரம் போன்ற நகைகளை கருட சேவையின் போது மட்டும். ஆண்டுக்கு ஒரே ஒரு முறை, உற்சவ மூர்த்தியான மலையப்ப சாமி அணிந்து சேவை சாதித்தார். இந்த நகைகள் மூலவரை விட்டு என்றுமே பிரியாது இருப்பவை ஆகும்.

நேற்று காலை முதலே பக்தர்கள் திருமலைக்கு வர தொடங்கிவிட்டதால், திருப்பதி பஸ் நிலையம், ரயில் நிலையங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் பக்தர்களே நிரம்பி இருந்தனர். மலைப்பாதையில் விபத்துகளை தவிர்க்க ஏற்கெனவே கடந்த 21-ம் தேதி மாலை 6 மணி முதல் இன்று 23ம் தேதி அதிகாலை 6 மணி வரை பைக்குகள் திருமலைக்கு வர தடை விதிக்கப்பட்டதால், பக்தர்கள் ஆந்திர அரசு பஸ்களிலும், ஜீப், கார்களிலும் வர தொடங்கினர். இதனால் காலை முதலே திருமலையில் கூட்டம் கூட தொடங்கிவிட்டது.

Thirumala Tirupati Brahmotsavam 2023 5 lakhs devotees witness Garuda vahana sevai

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதிகள் அனைத்தும் பல்வேறு வகையான மலர்களால் அலங்கரிங்கப்பட்டு பூலோக சொர்க்கமாக காட்சி அளித்தது. சென்னையிலிருந்து சுமார் 6 டன் மலர்கள் நன்கொடையாக வழங்கப்பட்ட நிலையில் வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 6 டன் மலர்களை வாங்கிய தேவஸ்தானம் அவற்றுடன் சேர்த்து இறக்கு மதிப்பு செய்யப்பட்ட மலர்களையும் பயன்படுத்தி ஏழுமலையான் கோவில், சுற்றுவட்டார பகுதிகளை அலங்கரித்திருந்தது.

திருமலையில் உள்ள 4 மாடவீதிகளில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் அமர்ந்து வாகன சேவையை கண்டு களிக்கும் வகையில் திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடுகளை செய்திருந்தது. ஆதலால், நேற்று காலை நடைபெற்ற மோகினி அலங்கார வாகன சேவையின் போதே 4 மாட வீதிகளிலும் பக்தர்கள் நிரம்பி விட்டனர். நேற்று மதியம் 12 மணிக்கு மாட வீதிகளில் காத்திருந்த பக்தர்களுக்கு உணவு பொட்டலங்கள், குடிநீர், மோர் போன்றவை வழங்கப்பட்டன. பக்தர்களுக்கான வசதிகளை அவ்வப்போது தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி, நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

திருமலைக்கு வந்த திரளான பக்தர்களுக்கு காலை 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை இலவச அன்னபிரசாதமும் அன்னதான மையத்தில் வழங்கப்பட்டது. மாட வீதிகளில் 2.5 லட்சம் மோர் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டன. 747 துப்புரவு தொழிலாளிகள் நேற்று மாட வீதிகளில் பணியாற்றி உடனுக்குடன் குப்பைகளை அகற்றி கழிவறைகளை சுத்தம் செய்தனர். 1500 ஸ்ரீவாரி சேவகர்கள் மூலம் உணவுகள், குடிநீர் போன்றவை விநியோகம் செய்யப்பட்டன.

கருட சேவைக்கு 3,600 காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், 1,130 தேவஸ்தான கண்காணிப்பு ஊழியர்களும், 1,200 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். 2,770 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் நேற்று தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கருட சேவையை காண திருமலையில் முக்கியமான 20 இடங்களில் ராட்சத தொலைக்காட்சி பெட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஆந்திர அரசு பஸ்கள் நேற்று மட்டும் திருப்பதி-திருமலை இடையே 24 மணி நேரமும் இயக்கப்பட்டன.

Thirumala Tirupati Brahmotsavam 2023 5 lakhs devotees witness Garuda vahana sevai

6ம் நாளான இன்று காலை சிறிய திருவடி என்று அழைக்கப்படும் அனுமந்த வாகனத்தில் மலையப்பசுவாமி மாட வீதியில் வலம் வந்தார். அப்போது சுவாமி வேடமணிந்து ஏராளமான கலைஞர்கள் நடனமாடினர். இதைக் காண மாட வீதியில் திரண்டிருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.
கோவிந்தா, கோவிந்தா' என்ற பக்தி முழக்கத்துடன் மலையப்ப சுவாமியை தரிசனம் செய்தனர். இன்று மாலை தங்க ரத உற்சவம் நடைபெற உள்ளது.

எட்டாம் நாள் காலை நாளை மறுநாள் திருத்தேர் உற்சவம் நடைபெறும். திருத்தேரில் மலையப்ப சுவாமி உபய நாச்சியர்களுடன் எழுந்தருளுவார். எட்டாம் நாள் இரவு மலையப்பசுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். பத்தாவது அவதாரமான கல்கி அவதாரத்தில் ஸ்ரீமன் நாராயணன் குதிரையின் மீது எழுந்தருள்வார் குதிரை வாகனம் மாடவீதிகளில் வருகின்ற பொழுது ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி பாடப்படுவது சிறப்பு

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+