அழகு தமிழில்.. திருப்பாவை, திருவெம்பாவை சொல்லுங்க.. "ஒன்இந்தியாதமிழ்" வழங்கும் பரிசுகளை வெல்லுங்கள்
சென்னை: மார்கழி மாதத்தில் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாடி இறைவனை வணங்குவார்கள். ஒன் இந்தியா தமிழ் நடத்தும் திருப்பாவை பாடல் போட்டியில் நீங்களும் பங்கு பெறலாம். திருப்பாவை, திருவெம்பாவை பாடல் கூறும் குழந்தைகளுக்கு சிறப்பான பரிசுகள் காத்திருக்கிறது.

மார்கழி மாதத்தில் கோவில்களிலும் கிராமங்களிலும் அதிகாலையில் பஜனைகள் களைகட்டும். திருப்பாவை, திருவெம்பாவை பாடி இறைவனை வழிபடுவார்கள். வீட்டு வாசல்களில் கோலமிட்டு அதில் பூசணிப்பூக்களை வைத்தும் அழகுபடுத்துவார்கள். சென்னை சபாக்களில் மார்கழி கச்சேரிகளும் களைகட்டும்.
"ஒன் இந்தியா தமிழ்" இணைய தளமும், மார்கழி மாதத்தை கொண்டாட தயாராகி விட்டது. இசை ஆர்வமும், இறை பக்தியும் நிறைந்த குழந்தைகளுக்காக திருப்பாவை, திருவெம்பாவை பாடல் போட்டி நடத்தப்படுகிறது. ஒன் இந்தியா வாசகர்களே உங்கள் வீட்டு குழந்தைகளையும் இந்த போட்டியில் பங்கு பெற்று பரிசுகளை அள்ளிச்செல்லுங்கள்.
பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒரே பெண்மணியானவரான ஆண்டாள் இயற்றிய திருப்பாவையும், மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது இயற்றிய திருவெம்பாவையும் பாவைப்பாட்டுக்களில் சிறந்தவை. உங்கள் வீட்டு குட்டீஸ்களை அழகாக ஆண்டாளைப் போல அலங்கரித்து திருப்பாவை பாட வைத்து வீடியோவாக எங்களுக்கு அனுப்புங்கள். அதிக அளவிலும், அச்சு பிசகாமலும், சரியாக திருப்பாவை, திருவெம்பாவை பாடி வீடியோ அனுப்பும் குழந்தைகளுக்கு அற்புதமான பரிசுகள் காத்திருக்கின்றன. மார்கழி மாதம் நிறைவடையும் வரை உங்களுக்கு நேரமுள்ளது. பயன்படுத்துவீர்.
திருப்பாவை, திருவெம்பாவை பாடி வீடியோவாக 9148926682 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு உடனே அனுப்புங்கள். முதல் பரிசாக 2000 ரூபாய்க்கான கிஃப்ட் வவுச்சரும், இரண்டாவது பரிசாக 1000 ரூபாய்க்கான கிஃப்ட் வவுச்சரும், மூன்றாவது பரிசாக 500 ரூபாய்க்கான கிஃப்ட் வவுச்சரும் காத்திருக்கின்றன. நன்கு நினைவில் கொள்ளுங்கள்.. 15 அல்லது அந்த வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மட்டுமே போட்டியில் பங்கேற்கலாம். பாடி, பரமனடி போற்றுவோம் வாருங்கள்!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications