திருச்செந்தூரின் பன்னீர் இலை விபூதி.. விசேஷ பிரசாதம்! செய்வினை விரட்டும் மாமருந்து அதிசய பன்னீர் இலை
சென்னை: திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் வழங்கப்படும் விபூதி பிரசாதத்தின் தனித்துவம் என்ன தெரியுமா? மற்ற விபூதிகளைவிட, இந்த பன்னீர் இலை விபூதிக்குள்ள சிறப்பியல்களும், முக்கியத்துவமும் என்ன தெரியுமா?
சூரபத்மனுடன் போரில் வென்று மயிலாகவும், சேவலாகவும் தன்னுடன் வைத்துக்கொண்டவர் முருகப்பெருமான். திருச்செந்தூர் புண்ணியத் தலத்தில் தினமும் காலையில் பக்தர்களுக்கு பன்னீர் இலையில் விபூதி வைத்து பிரசாதமாக வழங்கப்படுகிறது.

மருந்தான விபூதி: முருகப்பெருமான் தன்னுடைய 12 கரங்களால் விசுவாமித்திரரின் காசநோய் நீங்குவதற்காக திருநீறு அளித்ததன் தாத்பர்யம் இது என்கின்றன புராணங்கள்... அதுமட்டுமல்ல, கடற்கரையில் அசுரர்களை வதம் செய்த பிறகு, போர் காயங்கள் ஆறவேண்டும் என்பதற்காக முருகப்பெருமான் தன் பரிவாரங்களுக்கு, 12 கைகளினால் விபூதிப் பிரசாதம் வழங்கினார் என்றும் ஸ்தல புராணங்கள் கூறுகின்றன.
அதேபோல, போர் முடிந்த பின்னரும், முருகனின் பெருமையை துதித்த வேதங்கள் அனைத்தும், ஒன்று சேர்ந்து செந்திலோனின் மகிமையை விளக்கும் பன்னீர் மரங்களாக இந்த இடத்தில் தோன்றியதாம்.. பன்னிரு நரம்புகள் உள்ள பன்னீர் மர இலைகளில் வைத்துத் தரப்படுவதே இலை விபூதி பிரசாதம்.. அதனால்தான், இதற்கு மிகப்பெரிய மகத்துவம் உள்ளது.
களைப்புகள்: இந்த பன்னீர் இலைகளை பார்ப்பதற்கு முருகனின் வேல் போலவே இருக்கும்.. திருச்செந்தூர் கோயிலில் மார்பில் பூசிக் கொள்ள பக்தர்களுக்கு சந்தனத்துடன், பிரசாதகமாக தரப்படும் இந்த விபூதியை, நம்முடைய கைகளில் போடுவார்கள். இந்த விபூதியானது தீராத நோய்களையும் தீர்க்கும் குணமுடையது. இந்த விபூதியை பூசும்போது கை, கால் வலி, வலி, களைப்புகள் நீங்கும். பேய், பிசாசு போன்ற தீவினைகள் இருந்தாலும் விலகிவிடும்.
விசுவாமித்திர மகரிஷி ஒருமுறை இங்கு வந்து தரிசித்ததாகவும், அப்போது இங்கு தரப்பட்ட இலை விபூதி பிரசாதத்தை வாங்கி தரித்ததுமே, அவருக்கு ஏற்பட்டிருந்த குன்ம நோய் நீங்கிவிட்டதாம்.
சிறப்புகள்: அதேபோல, ஆதி சங்கரர் இந்த இலை விபூதியை உண்டு காசநோயை நீக்கிக்கொண்டதாகவும், அதனாலேயே அவர் ஸ்ரீசுப்பிரமணிய புஜங்கம் பாடியதாகவும் கூறப்படுகிறது. அந்தவகையில், வலிப்பு, குஷ்டம் போன்ற பெருவியாதிகளையும் நீக்கக்கூடிய சக்தி இந்த விபூதிக்கு உண்டு. திருநீற்றை பன்னீர் இலையில் பத்திரமாக வைத்துக் கொள்வது செல்வத்தைச் சேமிப்பது போலாகுமாம்.












Click it and Unblock the Notifications