திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்.. கோலாகலமாக தயாராகும் ஏழுமலையான் கோவில்.. முழு விபரம்
திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் வரும் 15ஆம் தேதி தொடங்க உள்ளது. 23ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. நவராத்திரி பிரம்மோற்சவத்துக்கு கொடியேற்றமும், கொடி இறக்க நிகழ்ச்சிகளும் கிடையாது.
உலக பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். திருமலைக்கு வரும் பக்தர்கள் முன்கூட்டியே ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும். லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்வார்கள். திரும்பும் திசை எங்கும் கோவிந்தா முழக்கம் எதிரொலிக்கும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவங்கள் நடத்தப்படுகின்றன. இதில் கடந்த செப்டம்பர் 18ஆம்தேதி முதல் 26ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்றது.
வரும் 15ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. நவராத்திரி பிரம்மோற்சவத்துக்கு கொடியேற்றமும், கொடி இறக்க நிகழ்ச்சிகளும் கிடையாது. மேலும் தேர்த் திருவிழாவும் நடைபெறாது. அதற்கு பதிலாக தங்கத் தேரோட்டம் மட்டுமே நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த நாட்களில் என்னென்ன சேவைகள் நடைபெறும் என முழு விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது
அக்டோபர் 15 ஞாயிறு - பெரிய சேஷ வாகனம்
அக்டோபர் 16 திங்கள் சின்ன சேஷ வாகனம் ஹம்ச வாகனம்
அக்டோபர் 17 செவ்வாய் சிம்ம வாகனம் முத்துப்பந்தல் வாகனம்
அக்டோபர் 18 புதன் கற்ப விருட்ச வாகனம் சர்வ பூபால வாகனம்
அக்டோபர் 19 வியாழன் மோகினி அலங்காரம் கருட சேவை
அக்டோபர் 20 வெள்ளி அனுமந்த வாகனம் புஷ்பக விமானம், கஜ வாகனம்
அக்டோபர் 21 சனி சூர்ய பிரபை வாகனம் சந்திர பிரபை வாகனம்
அக்டோபர் 22 ஞாயிறு தங்க ரத ஊர்வலம் அஸ்வ வாகனம்
அக்டோபர் 23 திங்கள் சக்ர ஸ்நானம் -
புரட்டாசி மாதத்தில் பக்தர்கள் லட்சக்கணக்கில் திருமலையில் குவிந்தனர். ஏழுமலையானை தரிசனம் செய்ய சுமார் 48 மணி நேரம் ஆகிறது
இதே நிலை நீடித்ததால், வரும் 3 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் கூட்டத்தை ஓரளவு கட்டுப்படுத்த வரும் 6, 7, 8, 13,14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் திருப்பதியில் விநியோகம் செய்யப்படும் சர்வ தரிசன டோக்கன்களை நிறுத்தி வைக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. நாளை வெள்ளிக்கிழமை 6ஆம் தேதி தொலைபேசி மூலம் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி பக்தர்களிடம் குறைகளை கேட்க உள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications