திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்.. 19ல் கருட சேவை.. மாற்றங்களை செய்த திருமலை தேவஸ்தானம்
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் வரும் 14ஆம் தேதி அங்குரர்ப்பணத்துடன் தொடங்குகிறது. பிரம்மோற்ச விழாவின் முக்கிய அம்சமான கருடவாகன சேவை தொடங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான முன்னுரிமை தரிசனமும் ரத்து செய்யப்படும் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையானை தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து செல்கின்றனர். பூலோக வைகுண்டமாக கருதப்படும் திருப்பதி கோயிலில், கடந்த மாதம் 9 நாட்கள் வருடாந்திர பிரமோற்சவம் வெகுவிமரிசையாக சிறப்பாக நடைபெற்றது. கடந்த மாதம் 18 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற்றது. 9 நாட்கள் நடைபெற்ற இந்த பிரம்மோற்சவத்தில் 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர். பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில் நவராத்திரி பிரம்மோற்சவம் வரும் ஞாயிற்றுக்கிழமை 15ஆம் தேதி தொடங்க உள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி,நவராத்திரி பிரம்மோற்சவத்திற்கான அங்குரர்ப்பணம் இம்மாதம் 14ஆம் தேதி நடைபெற உள்ளதாக கூறினார்.
வரும் 19ஆம் தேதி கருட வாகன புறப்பாடு, 22ஆம் தேதி தங்கத் தேரோட்டம், 23 ஆம் தேதி சக்கர ஸ்நானம் போன்றவை நடைபெறும் எனத் தெரிவித்தார். வருடாந்திர பிரம்மோற்சவத்தில் நடைபெறும் கொடியேற்றம், கொடி இறக்கம், திருத்தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் இந்த நவராத்திரி பிரமோற்சவத்தில் நடைபெறாது.
பக்தர்களின் வசதிக்காக கருட சேவையை முன்கூட்டியே நடத்தவும் தேவஸ்தான நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. வழக்கமாக கருட சேவை இரவு 7 மணிக்கு தொடங்கும். ஆனால் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் போது 1 மணி நேரத்திற்கு முன்னதாக கருட சேவை தொடங்க திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து தேவஸ்தான் நிர்வாகம் கோவில் அர்ச்சகர்களுடன் ஆலோசனை நடத்தியது. அப்போது சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு எப்பொழுது வேண்டுமென்றாலும் கருட சேவையை தொடங்கலாம் என்று அர்ச்சகர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மீண்டும் ஒரு முறை ஆலோசனை நடத்தி 19ஆம் தேதி கருட சேவை மாலை 6.15 மணி அல்லது 6.30 மணிக்கு தொடங்குவது குறித்து அறிவிக்கப்படும் என்றும் தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார். கருடசேவையை முன்னிட்டு வரும் 19ஆம் தேதி திருமலையில் இருசக்கர வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக கருட சேவையின் போது திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மாதம் தோறும் பவுர்ணமி நாட்களில் நடைபெறும் கருட சேவைக்கே பக்தர்கள் குவிந்து வருவார்கள். கடந்த வருடாந்திர பிரம்மோற்சவத்தின் போதும் கருட சேவை நாளில் ஏராளமான பக்தர்கள் திருப்பதி திருமலையில் குவிந்தனர். ஆகையால் இம்முறையும் அதிகளவு பக்தர்கள் வருவார்கள் என்பதால் அவர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்யும் வகையில் கருட வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளி வீதி உலா வரும் நேரத்தை மாற்றியமைக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
நவராத்திரி பிரமோற்சவத்தை முன்னிட்டு மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர் ஆகியோருக்கு வழங்கப்படும் முன்னுரிமை தரிசனத்திற்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாகக் தெரிவித்தார். அதே போல, கல்யாண உற்சவம் உள்ளிட்ட கட்டண சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி கூறினார்.
புரட்டாசி மாதம் என்பதால் பக்தர்கள் வார நாட்களிலும் ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்து கொண்டிருக்கின்றனர். புரட்டாசி சனிக்கிழமை நாட்களில் கூட்ட நெரிசரை தவிர்க்கும் வகையில் நாளை வெள்ளிக்கிழமை 13ஆம் தேதியும், 14 ஆம் தேதி சனிக்கிழமை 15 ஞாயிற்றுக்கிழமை ஆகிய தேதிகளில் ஸ்லாட்டட் தரிசன டோக்கன் வழங்கப்பட மாட்டாது என்று தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வரும் 28ஆம் தேதி சந்திரகிரகணம் நிகழ உள்ளதை முன்னிட்டு 28ஆம் தேதி இரவு 7.05 முதல் 29 அதிகாலை 3.15 வரை கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும் எனவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications