திருப்பதி ஏழுமலை வெங்கடேசா! புரட்டாசி மாதம் வெங்கடாஜலபதியை தரிசிக்க! இன்று புக்கிங்!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் செப்டம்பர் மாத தரிசன டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. காலை 10 மணிக்கு தேவஸ்தானத்தின் ஆன்லைனில் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகின்றன.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதம் வரை தரிசன டிக்கெட்டுகள், சேவைகளுக்கான முன்பதிவுகள் ஏற்கெனவே முடிவடைந்துவிட்டது. இந்த நிலையில் செப்டம்பர் மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள், உற்சவ சேவைகள் உள்ளிட்டவைகளுக்கு முன்பதிவு செய்ய நாளை ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் எந்த தேதியில் எத்தனை மணிக்கு தரிசன டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் என்கிற விவரத்தை தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டு வருகிறது. ரூ 300 விரைவு தரிசன டிக்கெட்டுகள் ஒவ்வொரு மாதமும் 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.
அந்த வகையில் இந்த மாதம் தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. அது போல் சேவை டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படும். இந்த டிக்கெட்டுகள் குலுக்கல் மூலம் தேர்வு செய்யும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட சேவைகளுக்கு நாளை காலை 10 மணி முதல் 20 ஆம் தேதி காலை 10 மணி வரை முன் பதிவு செய்யலாம்.
குலுக்கலில் தேர்வு செய்யப்படுவோருக்கு ஜூன் 20ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை மதியம் 12 மணிக்கு முன்பு பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம். இது போன்று செப்டம்பர் மாதம் நடைபெறும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை டிக்கெட்டுகள் வரும் 21 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
இந்த சேவைகளுக்கு பக்தர்கள் நேரடியாக பங்கேற்காமல் சுவாமி தரிசனம் மட்டும் செய்யும் விர்சுவல் சேவைகளுக்கான டிக்கெட் 21 ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். மேலும் செப்டம்பர் மாதம் அங்கபிரதட்சணம் டோக்கன்கள் வரும் 22 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
அதே நாளில் பிற்பகல் 3 மணிக்கு மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கான செப்டம்பர் மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் வெளியிடப்படுகின்றன.
ரூ.300 சிறப்பு நுழைவுச் தரிசன டிக்கெட் வரும் 24ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. திருமலை - திருப்பதியில் ஆகஸ்ட் மாதம் அறைகள் முன்பதிவு செய்ய அதே நாளில் பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். எனவே தேவஸ்தான இணையதளம் மூலம் ஆர்ஜித சேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications