திருநள்ளாறு சனி பெயர்ச்சி விழா.. தருமபுரம் ஆதினத்திடம் ஆலோசனை.. புதுச்சேரி அரசு ஹைகோர்ட்டில் தகவல்
சென்னை: தருமபுரம் ஆதினத்தை கலந்தாலோசித்தே திருநள்ளாறு கோயில் சனி பெயர்ச்சி திருவிழா நடத்தப்படுகிறது என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. தருமபுரம் ஆதீனம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதுச்சேரி அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயியில் டிசம்பர் 20ஆம் தேதி சனி பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. சனி பகவான் இங்கு அனுக்கிரக மூர்த்தியாக இருக்கிறார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள். திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் தருமபுரம் ஆதினத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

தருமபுரம் ஆதினம் கட்டுப்பாட்டில் கோயில் உள்ள நிலையில் சனிப்பெயர்ச்சி விழா நடத்த குழு அமைத்ததாக புகார் எழுந்துள்ளது. கோவிலின் அனைத்து விழாக்களும் தருமபுரம் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் தான் நடத்தப்படும் நிலையில், அறங்காவலர் குழுவோ, சிறப்பு அதிகாரியோ இல்லாவிட்டால் விழாக்கள் தொடர்பாக ஆதினத்தை கலந்தாலோசிக்க வேண்டுமென உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது.
அதன்படி, கோவிலின் செயல் அலுவலரையும், சிறப்பு அதிகாரியாக மாவட்ட ஆட்சியரையும் நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. டிசம்பர் 20ம் தேதி சனிப் பெயர்ச்சி நடைபெற உள்ள நிலையில், சனிப்பெயர்ச்சி திருவிழாவை நடத்துவதற்கு சிறப்புக் குழுவை அமைத்து அறநிலையத் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோவிலில் விழாக்கள் நடத்துவது தொடர்பாக எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தருமபுரம் ஆதீனத்தின் கட்டளை தம்பிரானுடன் கலந்து பேசிய பின்னர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 25ம் தேதி புதுச்சேரி அரசிடம் தருமபுரம் ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பரிந்துரை கடிதம் அனுப்பி இருந்தார்.
அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில், விழா பணிகள் தொடர்பாக தன்னை கலந்தாலோசிக்கவில்லை என்றும், விழா தொடர்பான டெண்டர் அறிவிப்பதிலும் கலந்தாலோசிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.எனவே தனது மனுவை பரிசீலிக்கவும், சனி பெயர்ச்சி விழா தொடர்பாக தன்னிடம் கலந்து பேச உத்தரவிடவும் வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆதிகேசவலு முன்பு கடந்த சில நாட்களுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, தருமபுரம் ஆதினகர்த்தர் அளித்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நவம்பர் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு வந்த போது, தருமபுரம் ஆதினத்தை கலந்தாலோசித்தே திருநள்ளாறு கோயில் சனிப்பெயர்ச்சி திருவிழா நடத்தப்படுகிறது என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. தருமபுரம் ஆதீனம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதுச்சேரி அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. புதுச்சேரி அரசின் அறிக்கையை ஏற்று தருமபுரம் ஆதினம் தரப்பு தாக்கல் செய்த வழக்கை ஹைகோர்ட் முடித்து வைத்தது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications