திருப்பதிக்கு 893வது பிறந்த நாள்.. ஏழுமலையானை தரிசிக்க மூத்த குடிமக்களுக்கு இலவச டிக்கெட் ரிலீஸ்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மார்ச் மாத தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியிடப்பட உள்ளது.
திருப்பதி: திருப்பதி நகரம் தனது 893-வது பிறந்தநாளை வரும் 24ஆம் தேதி கொண்டாடத் தயாராகி வருகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதம் தோறும் இணையதளம் வாயிலாக அனைத்து தரிசன டிக்கெட்டுகளையும் வெளியிட்டு வருகிறது. மார்ச் மாதத்திற்கான, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான டிக்கெட்டுகளை இன்று இலவசமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். வயதானவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக இலவச டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் வெளியிடப்படுகின்றன.
சிறப்பு பாதை வழியாகவும் குறைவான நேரத்தில் மூத்த குடிமக்கள்,மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்களை ஏழுமலையானை தரிசனம் செய்ய அனுப்பி வைக்கின்றனர்.
இந்தவகையில் வரும் மார்ச் மாதம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய விரும்பும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளி பக்தர்களுக்கான ஆன்லைன் டிக்கெட் இன்று வெளியிடப்பட உள்ளது.

இன்று காலை 9.00 மணிக்கு தேவஸ்தான இணையதளமான tirupatibalaji.ap.gov.in மூலம் டிக்கெட்டுகளை இலவசமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
மார்ச்,ஏப்ரல், மே மாதத்திற்கான கட்டண சேவை தரிசன டிக்கெட் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இந்த நிலையில் மூத்த குடிமக்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய இலவச டிக்கெட் இன்று வெளியாகிறது.
இதனிடையே திருப்பதி நகரம் தனது 893-வது பிறந்தநாளை இம்மாதம் 24ஆம் தேதி கொண்டாடத் தயாராகி வருகிறது. ஸ்ரீ லக்ஷ்மி தேவியைத் தேடி வைகுண்டத்தை விட்டு பூமியை அடைந்த ஸ்ரீ மஹாவிஷ்ணு, ஸ்ரீநிவாஸர் என்ற பெயரில் ஆதிவராஹ ஸ்தலமான திருமலை மலைக்கு வந்தார் என புராணங்கள் கூறப்பட்டுள்ளன.
திருமலையின் ஆகமத்தின் பணிகளை இயக்கிய ராமானுஜாச்சாரியார் கிட்டத்தட்ட 8 நூற்றாண்டுகளுக்கு முன்பு திருப்பதி நகரத்தை தோற்றுவித்தார் என்று வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை, திருமலையில் பல்வேறு வகையான திருவிழாக்கள் தெளிவற்ற நடைமுறைகளுடன் நடந்தது. அந்தந்த வம்சங்கள் ராமானுஜச்சாரியார் 11ம் நூற்றாண்டில் தனது வாழ்நாளில் 3 முறை திருமலைக்கு வந்து கருவறையில் காணப்படும் அசல் தன்மை குறித்த சந்தேகங்களைப் போக்கினார். அந்தச் சந்தர்ப்பத்தில் தான் திருமலை மூலமூர்த்திக்கு சங்குச்சக்கரங்களைக் காணிக்கையாகக் கொடுத்து, ஸ்தல லட்சுமியை பிரதிஷ்டை செய்து, ஸ்ரீ மஹாவிஷ்ணு தசாவதார ரூபம் என்று அறிவித்தார்.
திருமலை கோவிலின் நித்ய பூஜைகள், கைங்கர்ய நடைமுறைகளை பரம்பரையாக ஆகம விதிகளின்படி மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார். அந்த வழக்கமான பூஜைகளின் பொறுப்புகளை கண்காணிக்க பஞ்சராத்ர துணை ஜீயர் அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

அந்த நேரத்தில், ஏழுமலையான் கோவில் பகுதி வனப்பகுதியாக இருந்தது, அங்கு வழக்கமான சேவைகள் மற்றும் திருவிழாக்கள் நடைபெற்றன. கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெற்றது. அதன்பின், கோவிலின் நான்கு புறமும் மாடவீதிகள், அர்ச்சகர்கள் குடியிருப்புகள், ஜீயரைக் கொண்டு கட்டப்பட்டது. கோவிந்தப்பட்டினம் என்ற பெயரில் மடங்கள் மற்றும் மக்கள்தொகை விரிவாக்கம் தொடங்கியது. அவ்வாறு உருவான கோவிந்தப்பட்டினம், திருமலை அடிவாரத்தில் உள்ள கபிலதீர்த்தம் அருகே ஏற்கனவே மறைந்துவிட்ட கோத்தூர் என்ற கிராமப் பகுதி வரை நீண்டு, தற்போதைய திருப்பதி நகரம் உருவாகக் காரணமாக இருந்தது.
தற்போதைய திருப்பதி நகரத்தை ராமானுஜாச்சாரியார் 1130ஆம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று நிறுவினார் என்பதை அந்த ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன. இதற்கு சாட்சியாக கோவிந்தராஜசுவாமி கோவிலில் பரம்பரை பரம்பரையாக நடைபெறும் நித்ய பூஜை நடவடிக்கைகளில் அன்றைய தேதி தொடர்பான வருட, திதி, வார, நட்சத்திரங்களை வைத்து அர்ச்சகர்கள் தீர்மானம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
உலகப் புகழ் பெற்ற திருப்பதி நகரம் திருமலையின் பாத பீடமாகத் திகழ்கிறது. அதன் தோற்றத்தின் விழாவின் ஒரு பகுதியாக, நகர மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 4 மாட வீதிகளில் பிரமாண்டமான நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் திருப்பதி மாநகராட்சி சார்பில் வண்ண மின் விளக்குகள் மற்றும் தோரணங்கள் மூலம் அழகுபடுத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications