திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு குட் நியூஸ்.. பிப்ரவரி தரிசனத்துக்கான ஆன்லைன் டிக்கெட் ரிலீஸ்
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவில் பிப்ரவரி மாதம் 300 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் இன்று காலை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தரிசன டிக்கெட்டுகள் மற்றும் அறைகளை எப்படி முன்பதிவு செய்வது என்று பார்க்கலாம்.
ஏழுமலையானை தரிசனம் செய்ய தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மணிக்கணக்கில் காத்திருந்தாலும் சில நிமிடங்கள் மட்டுமே ஏழுமலையான் தரிசனம் கிடைக்கிறது. அதைப்பற்றி கவலைப்படாமல் பக்தர்கள் நாள் கணக்கில் கூட காத்திருக்கின்றனர்.

விரைவு தரிசனத்திற்காக 300 ரூபாய் டிக்கெட் ஆன்லைனில் புக் செய்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர். 4 மாதங்களுக்கு முன்பே ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் இணைய தள பக்கத்தில் வெளியிடப்படும். அங்கப்பிரதட்சணம், கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகள் 21ஆம் தேதி வெளியான நிலையில் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை வெளியிடப்பட உள்ளது.
பக்தர்கள் https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளத்தில் தரிசன டிக்கெட் மற்றும் அறைகளை முன்பதிவு செய்து கொள்ளுமாறு தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அத்துடன் திருமலை மற்றும் திருப்பதியில் உள்ள அறைகள் முன்பதிவு இன்று மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
ஏழுமலையான் கோயிலில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 16 ஆம் தேதியன்று நடைபெறும் ரதசப்தமிக்காக தன்னார்வலர்களாக ஸ்ரீவாரி சேவா திட்டத்தில் சேவை செய்வதற்கான முன்பதிவு இந்த மாதம் 27ஆம் தேதி அன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடும். இதற்காக 18 முதல் 50 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே இந்த தன்னார்வலர் சேவையில் பதிவு செய்ய தகுதியுடையவர்கள்.
இதேபோல், 2024 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கான ஸ்ரீவாரி சேவை மற்றும் நவநீத சேவையில் பங்கேற்க இந்த மாதம் 27 அன்று மதியம் 12 மணிக்கு திருமலை மற்றும் திருப்பதியில் பக்தர்களுக்கு சேவை செய்வதற்கான தன்னார்வ சேவைக்காக வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications