சந்திரகிரகணம் 2025: திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை திறப்பு! பக்தர்கள் அதிகாலை முதலே சுவாமி தரிசனம்
திருப்பதி: சந்திரகிரகணத்தையொட்டி நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு அடைக்கப்பட்ட திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை, இன்று அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது. அப்போது முதலே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக கோயில் சுத்தம் செய்யப்பட்டு தோஷ நிவர்த்தி பூஜைகள் செய்யப்பட்டன.
செப்டம்பர் 7, 2025 அன்று நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சுமார் 12 மணி நேரம் மூடப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) அறிவித்துள்ளது.
சந்திரகிரகணத்தையொட்டி நேற்று பவுர்ணமி பூஜைகள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து நேற்றைய தினம் பிற்பகல் 3:30 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது. முழு சந்திரகிரகணம் இரவு 9.24 மணிக்கு ஆரம்பித்து நள்ளிரவு 1.26 மணிக்கு முடிந்தது. இதையடுத்து கோயிலை ஊழியர்கள் தண்ணீர் விட்டு சுத்தம் செய்தனர்.
மேலும் திருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர்கள் ஆகமவிதிப்படி, தோஷ நிவர்த்தி பூஜைகளை செய்தனர். இதையடுத்து அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது.

சந்திர கிரகணம் இரவு 9:50 மணிக்கு தொடங்கி, அதிகாலை 1:31 மணிக்கு நிறைவடைந்தது. ஜோதிட சாஸ்திரப்படி, கிரகணம் தொடங்குவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்பாகவே கோயில் நடையை மூடுவது வழக்கம்.
இந்த காலகட்டத்தில், அர்ச்சனைகள் மற்றும் அன்னதானம் போன்ற சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் உள்ள பிற கோவில்களான கோவிந்தராஜ சாமி கோயில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் உள்ளிட்ட மற்ற கோயில்களின் நடை அடைப்பு நேரங்களும் அறிவிக்கப்பட்டன. அத்துடன் திருப்பதியில் மாதந்தோறும் நடைபெறும் பவுர்மணி கருட சேவையும் ரத்து செய்யப்பட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications