திருப்பதி ஏழுமலையான் தரிசனம்..ஒரே மணி நேரத்தில் தேவஸ்தானத்திற்கு கிடைத்த ரூ.13.38 கோடி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கட்டண தரிசனத்திற்காக ஒரே மணி நேரத்தில் விற்று தீர்ந்த மொத்த டிக்கெட்களின் எண்ணிக்கை 4,46,000 என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி: ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு முன்பதிவு செய்துள்ளனர். மார்ச் மாதம் 300 ரூபாய் தரிசனத்திற்காக ஒரே மணி நேரத்தில் 4,46,000 டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன. இதன்மூலம் தேவஸ்தானத்திற்கு ஒரே மணி நேரத்தில் 13 கோடியே 38 லட்ச ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் திருப்பதி திருமலையில் எழுந்தருளியுள்ள ஏழுமலையான் திருக்கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்தக் கோயிலுக்கு வி ஐ பி தரிசனம், 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசனம், இலவச தரிசனம் அப்படின்னு பல்வேறு வகையான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது.

இதில் ஒவ்வொரு மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் தேவஸ்தானத்தின் இணையதளத்தில் முந்தைய மாதமே வெளியிடப்படுவது வழக்கம். இதை அனைத்தும் ஆன்லைன் மூலமாக பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.
அந்த வகையில் திருப்பதி ஏழுமலையானை மார்ச் மாதம் 300 ரூபாய் டிக்கெட் மூலம் தரிசிக்க விரும்பும் பக்தர்கள் இன்று காலை 10 மணிக்கு துவங்கி தேவஸ்தான வெப்சைடில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தான நிர்வாகம் ஆன்லைனில் வெளியிட்டது. இதனை பக்தர்கள் போட்டி போட்டு கொண்டு ஒரே மணி நேரத்தில் மொத்த டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்து முடித்தனர். ஒரே மணி நேரத்தில் விற்று தீர்ந்த மொத்த டிக்கெட்களின் எண்ணிக்கை 4,46,000 என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.இதனால் தேவஸ்தானத்திற்கு ஒரே மணி நேரத்தில் 13 கோடியே 38 லட்ச ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
அதேபோல் ஏப்ரல் மற்றும் மே மாதம் ஏழுமலையான் கோவிலில் அங்கபிரதட்ஷனம் செய்ய விரும்பும் பக்தர்கள் இன்று மதியம் 2 மணி முதல் இலவசமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் தேவஸ்தானத்தின் WWW.tirupathibalaji.ap.gov.in இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம்.
இதனிடையே திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நன்கொடை அளிக்கும் நிலையில் அவர்களுக்கு 500 ரூபாய் கட்டணத்தில் விஐபி பிரேக் தரிசன அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கான கவுண்டர் திருப்பதி மலையில் கூடுதல் நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் அமைக்கப்பட்டது.
திருப்பதியில் உள்ள ஸ்ரீனிவாசம் விருந்தினர் மாளிகையிலும் ஸ்ரீவாணி அறக்கட்டளை விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இதுதவிர திருப்பதி விமான நிலையத்திலும் கவுன்டர் அமைத்து தேவஸ்தான நிர்வாகம் ஸ்ரீவாணி அறக்கட்டளை விஐபி பிரேக் தரிசன டிக்கெட் விற்பனை செய்து வருகிறது. ஆன்லைன் மூலமும் இந்த டிக்கெட்டுகளை பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
இடையில் திருப்பதி, திருமலை ஆகிய ஊர்களில் செயல்பட்டு வந்த கவுன்டர்களை தேவஸ்தான நிர்வாகம் திடீரென்று மூடிவிட்டது. விமான நிலையத்தில் செயல்படும் கவுண்டரில் விமான மூலம் வரும் பக்தர்கள் மட்டுமே டிக்கெட் வாங்க முடியும் என்ற நிலையையும் தேவஸ்தானம் ஏற்படுத்தியது.
மற்ற பக்தர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே இந்த டிக்கெட்டுகளை பெற்று கொள்ளலாம் என்ற நிலை இதனால் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் திருப்பதி மலையில் மூடப்பட்டிருந்த கவுண்டரை நேற்று திடீரென்று மீண்டும் திறந்த தேவஸ்தான நிர்வாகம் தற்போது நாள் ஒன்றுக்கு 150 என்ற எண்ணிக்கையில் டிக்கெட்டுகளை பக்தர்களுக்கு விற்பனை செய்து வருகிறது.
மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல் திருமலையில் உள்ள கவுண்டரில் தினமும் 400 டிக்கெட்டுகளை பக்தர்கள் நேரடியாக பெற்று கொள்ளலாம் என்றும் திருப்பதி விமான நிலையத்தில் உள்ள கவுண்டர்களில் தினமும் 100 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்றும், 750 டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும் என்றும் தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் கவுண்டருக்கு ஆதார் அட்டையுடன் நேரில் வந்தால் மட்டுமே வழங்கப்படும். தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் மூலம் பக்தர்கள் ஸ்ரீவானி அறக்கட்டளை விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளை பெற முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications