Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பதி பிரம்மோற்சவம்.. ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் பாதுகாப்புக்கு என்னென்ன ஏற்பாடுகள்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் வரும் 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மாநில அரசு சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பணம் செய்ய இருக்கிறார்.

கலியுக கடவுள் ஏழுமலையான். திருப்பதி சென்று பெருமாளை தரிசனம் செய்தால் வாழ்க்கையில் திருப்பம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதன் காரணமாகவே தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்கின்றனர். பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிவார்கள். தினசரியும் மாட வீதிகளில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக நான்கு மாட வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார். கூட்ட நெரிசலில் ஏழுமலையானை பார்க்க முடியாதவர்களுக்காகவே மலையப்ப சுவாமி வீதி உலா வருகிறார் என்பது நம்பிக்கை.

Tirupati Brahmotsavam Double tucker battery bus for devotees What arrangements are in full detail

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டுக்கான வருடாந்திர பிரம்மோற்சவம் நாளை மறுநாள் பதினெட்டாம் தேதி துவங்கி ஒன்பது நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கோவில் மட்டுமல்லாது சுற்றுவட்டார பகுதிகளும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. ஏழுமலையான் கோவில், மூலஸ்தானம் மின்னொளியில் ஜொலிக்கிறது.

பக்தர்கள் கூடும் முக்கிய இடங்களில் ஏழுமலையான், பத்மாவதி தாயார் மற்றும் இந்து மத கோட்பாடுகளை விளக்கும் வகையிலான பிரம்மாண்டமான மின்னலங்கார கட்டவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. தேவஸ்தான தோட்டத்துறையினர் ஏழுமலையான் கோவிலையும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளையும் பல டன் எடையுள்ள மலர்களால் அலங்கரிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.திருப்பதி மலையில் உள்ள பாபநாசம் சாலையில் மலர் கண்காட்சி அரங்கம் ஒன்றையும் அவர்கள் அமைத்து வருகின்றனர்.

மலையப்பசுவாமி ஊர்வலம் நடைபெறும் போது மாட வீதிகளில் உள்ள கேலரிகளில் இடம் கிடைக்காமல் தவிக்கும் பக்தர்கள் சாமி ஊர்வலத்தை காணும் வகையில் பிரம்மாண்டமான எல்இடி ஸ்கிரீன்களை தேவஸ்தான நிர்வாகம் பக்தர்கள் கூடும் முக்கிய இடங்களில் பொருத்தியுள்ளது. பிரம்மோற்சவ நாட்களில் காலை 6 மணிக்கு துவங்கி இரவு 12 மணி வரை திருமலையில் உள்ள அன்னதான கூடத்தில் பக்தர்களுக்கு இலவச உணவு தொடர்ந்து வழங்கப்படும்.

திருப்பதி மலையில் ஆங்காங்கே இருக்கும் உணவு பரிமாறும் மையங்களில் பக்தர்களுக்கு தொடர்ந்து சாம்பார் சாதம், தயிர் சாதம் உள்ளிட்ட உணவுகளை வழங்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மேலும் நான்கு மாட வீதிகளில் உள்ள கேலரிகளில் சாமி ஊர்வலத்தை காண்பதற்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு டீ, காபி மற்றும் குடிநீர் ஆகியவற்றை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உற்சவ நாட்களில் ஏழுமலையானை வழிபட ஒவ்வொரு நாளும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதி மலைக்கு வருவார்கள். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருட வாகன சேவை இம்மாதம் 22ஆம் தேதி இரவு நடைபெற உள்ளது. அன்று ஒரு நாள் மட்டும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதி மலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

இலவச தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் விரைவாக சாமி கும்பிட்டு செல்லும் வகையில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் ஆகியோருக்கான முன்னுரிமை தரிசனத்தை தேவஸ்தானம் பிரம்மோற்சவம் நாட்களில் ரத்து செய்துள்ளது.

நேரடியாக வரும் புரோட்டோக்கால் தகுதி வாய்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே விஐபி பிரேக் தரிசனம் அனுமதி குறிப்பிட்ட எண்ணிக்கையில் வழங்கப்படும் என்றும் தேவஸ்தான நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிரமோற்சவ நாட்களில் பக்தர்கள் தங்கும் அறைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்ய இயலாது. நேரடியாக வரும் பக்தர்களுக்கு மட்டுமே அறை ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநில சாலை போக்குவரத்து கழகம் ஒரு நிமிடத்திற்கு ஒன்று என்ற அடிப்படையில் திருப்பதி திருமலை இடையே பிரம்மோற்சவ நாட்களில் பேருந்துகளை இயக்க தயார் நிலையில் வைத்துள்ளது. பிரம்மோற்சவம் நாட்களில் திருப்பதி திருமலை இடையே 24 மணி நேரமும் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 6:00 மணி முதல் மாலை ஆறு மணி வரை மட்டுமே பக்தர்கள் உள்ளூர் பொதுமக்கள் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் செல்ல அனுமதி வழங்கப்படும்.

பக்தர்களின் பாதுகாப்பிற்காக திருப்பதி மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாமல் ஆந்திராவின் மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான போலீசார் வரவழைக்கப்பட உள்ளனர். அவசர காலங்களில் விரைந்து செயல்படும் வகையில் ஆந்திர மாநில விரைவு அதிரடி படையினர் ஆக்டோபஸ் போலீஸ் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளனர்.

பக்தர்களின் நடமாட்டத்தை அங்குலம் அங்குலமாக கண்காணிக்கும் வகையில் திருப்பதி மலை முழுவதும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு அவற்றில் பதிவாகும் காட்சிகளை திருப்பதி மலையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர், போலீசார் ஆகியோர் தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பதியில் உள்ள பேருந்து நிலையம். ரயில் நிலையம் மற்றும் திருப்பதி மலையில் உள்ள பக்தர்கள் கூடும் முக்கிய இடங்கள் ஆகியவற்றில் தொடர்ந்து 24 மணி நேரமும் சாதாரண உடை அணிந்த போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள். திருப்பதி வரும் பக்தர்களின் வசதிக்காக மாநகராட்சி சார்பில் ரூ 2 கோடி மதிப்பில் 2 அடுக்குகள் கொண்ட மின்சார ஏ.சி. பஸ்கள் வாங்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+