திருப்பதி தேவஸ்தானத்தில் ஆச்சரியம்.. பெருமாள் சிலையில் வளரும் முடி சீக்ரெட்? 1000 கிலோ தங்க நகைகளா?
திருப்பதி: ஆந்திர மாநிலத்தின் முதன்மையான சிறப்பு திருப்பதி கோயிலாகும். உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயிலானது, திருமலை மலைகளின் 7 சிகரங்களில் ஒன்றாக உள்ளது.. இந்த கோயிலின் கட்டிடங்கள் பழைய கால முறையில் அமையப்பட்டிருக்கும்.. இதுபோலவே ஏராளமான ஆச்சரியங்கள் திருப்பதி கோயிலுக்கு உண்டு. அவைகளில் சிலவற்றை பார்ப்போம்.
திருப்பதி கோயிலை பொறுத்தவரை, பல வியப்புகளை பெற்றிருக்கிறது.. உதாரணத்துக்கு பெருமாளின் வாகனமாக கருடன் கருதப்படுகிறது.. அதுபோலவே, திருப்பதி மலையும் பார்ப்பதற்கு கருடன் போலவே இருக்கும்.

சிறப்புகள் - ஆச்சரியங்கள்
அதேபோல, பெருமாள் முன்பு அணையா விளக்கு எரிந்து கொண்டிருக்கும்.. இதனை யார் முதன்முதலில் ஏற்றினார்கள்? எப்போது ஏற்றினார்கள்? என்பதெல்லாம் தெரியவில்லை.. ஆனால், பல நூறாண்டுகளுக்கு மேலாகவே விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள்..
வியர்வை வழிகிறது
அதேபோல, திருமலையை சுற்றிலும் வனப்பகுதியாக இருக்கும் என்பதால், எப்போதும் குளிர்ச்சியாகவே காணப்படும். ஆனால், பெருமாளின் சிலை மட்டும் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பமாக இருக்குமாம். தினமும் காலையில் பெருமாளுக்கு பூஜை செய்யும்போது, பெருமாளின் உடலிலிருந்து வியர்வை வழிகிறது.
அதாவது, 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால், மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது.. அபிஷேகம் முடிந்ததுமே ஏழுமலையானுக்கு வியர்க்க துவங்குகிறது.. உடனே பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். பெருமாள் அணிந்திருக்கும் நகைகளை அர்ச்சகர்கள் எடுத்தால், நெருப்பாய் கொதிக்குமாம். இதற்கும் காரணம் தெரியவில்லை.
உண்மையான முடி
அதேபோல, ஏழுமலையான் சிலையில் உண்மையான முடி இருக்கிறதாம்.. இந்த முடியில் எப்போதும் சிக்குகள் வருவதில்லை.. பட்டு போல மென்மையாக முடி இருப்பதாகவும்,
மனித முடியால் ஆன சிலையின் முடி, மர்மமான முறையில் வளர்கிறதாம்.. இதற்கு அறிவியல் ரீதியான விளக்கமும் இல்லை, இந்த முடியின் நீளத்தை பராமரிக்க டோன்சர் சடங்கு அடிக்கடி செய்யப்படுகிறது. சேகரிக்கப்பட்ட முடி, ஏலம் விடப்படுகிறது.. ஒரு சிலையில் எப்படி உண்மையான முடி வளரும் என்பதும் அதிசயமாகவே இருப்பதாக சொல்கிறார்கள்.
பச்சை கற்பூரங்கள்
அதேபோல ஏழுமலையான் சிலைக்கு பச்சை கற்பூரம் சார்த்துகிறார்கள்.. இந்த பச்சை கற்பூரம் ஒருவகையான இரசாயனமாகும்.. அரிப்பை தரும் அமிலமாகும்.. இந்த ரசாயனத்தை சாதாரண கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும்.
ஆனால், சிலாதோரணத்தில் உள்ள பாறைகளில் இதை தடவினால் அந்த பாறைகள் வெடிப்பதில்லை.. ஏழுமலையான் திருவுருவ சிலைக்கு வருடம் முழுவதும் பச்சை கற்பூரம் தடவப்படுகிறது. ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை. திருப்பதியிலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் இந்த சிலாதோரணம் என்ற அபூர்வ பாறைகள் உள்ளன.. உலகிலேயே இங்கு மட்டும்தான் இந்த பாறைகள் உள்ளன. இந்த பாறையும், ஏழுமலையின் திருமேனியும் ஒரே விதத்தில் அமைந்திருக்கின்றன.
தங்க தாம்பாளம்
ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்காகவே ஸ்பெயினிலிருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புணுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயரிய வாசனை பொருட்கள் வரவழைக்கப்படுகின்றன..
அவைகள் தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புணுகு தடவப்படும். அபிஷேகத்துக்கு மட்டும் கிட்டத்தட்ட 1 லட்ச ரூபாய் செலவாகுமாம்.
ஏழுமலையான் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடியாகும். ஆனால், இந்த நகைகளை வைத்துக் கொள்ள இடமில்லை என்பதால், வருடம் ஒருமுறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாள்களில் விளம்பரம் செய்து, அவைகள் ஏலம் விடப்படுகின்றன
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications