திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ததற்காக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பக்தர்! என்ன செய்தார்?

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்ததாக ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்டிஸில் இடம் பிடித்து பக்தர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். அப்படி என்னதான் அவர் சாதனை செய்துள்ளார் என்பதை பார்க்கலாம்.

ஸ்ரீகாகுளம் நகரைச் சேர்ந்தவர் மஹந்தி ஸ்ரீனிவாச ராவ். இவர் திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தர் ஆவார். இவர் ஆயுர்வேதா மருந்து கடையை நடத்தி வருகிறார். இவருக்கு ஏழுமலையானே தரிசனம் செய்வதுதான் மிகவும் பிடிக்கும். இதுவரை 449 முறை ஏழுமலையானை பாதயாத்திரையாக சென்று தரிசனம் செய்து சாதனை படைத்துள்ளார்.

tirupati spirtuality

ஒவ்வொரு முறையும் நடந்தே சென்று படிகளில் ஏறி தரிசனம் செய்ததால் அவருக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. அது மட்டுமல்லாமல் தினமும் 2 மணி நேரம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றியும் வருகிறார்.

இவர் தனது முதல் பாதயாத்திரையை 1997 ஆம் ஆண்டு தொடங்கினார் அதன் பிறகு 26 ஜூலை 2018ஆம் ஆண்டு வரை 175 முறை ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார். 1997ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டுக்கு ஒரு முறை சென்று கொண்டிருந்தார். அவர் 2004 ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் 2009ஆம் ஆண்டு வரை 28 முறை ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார்.

மேலும் 2010-2014 ஆம் ஆண்டு 21 முறையும் 2015 ஆம் ஆண்டு 20 முறையும் 2016 ஆம் ஆண்டு 15 முறையும் வெங்கடாஜலபதியை தரிசனம் செய்துள்ளார். இது போல் 2017ஆம் ஆண்டு தனது 50 ஆவது வயதில் சீனிவாச ராவ் 50 முறையும், அதன் பிறகு இருந்து இந்த ஆண்டு ஜூன் 26ஆம் தேதி வரை 40 முறை என மொத்தம் இதுவரை 449 முறை பாதயாத்திரையாக நின்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

இவர் ஒரே நாளில் ஒரு முறை முதல் 3 முறை வரை மலை ஏறி சுவாமியை தரிசித்துள்ளார். இந்த தீவிர பக்தியை பாராட்டி ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அங்கீகாரம் கொடுத்துள்ளது. தனது 27 ஆவது வயது முதல் மலையேறி தரிசனம் செய்து வருகிறார். இவர் வைகுண்ட ஏகாதசி, துவாதசி அன்றும் சென்றுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் நான் இந்த சாதனையை படைத்ததற்கு எனது மனைவி மகந்தி சரஸ்வதி, மகன் மகந்தி ஆஞ்சநேய ராகேஷ் ஆகியோர்தான் காரணம். என் உடல் ஒத்துழைக்கும் வரை ஏழுமலையானை நடந்தே சென்று வழிபடுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.

திருமலை திருப்பதிக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். அது போல் பண்டிகை, விடுமுறை, பிரம்மோற்சவ நாட்களில் இந்த எணணிக்கை லட்சத்தை தாண்டுகிறது.

திருமலைக்கு பக்தர்கள் சர்வ தரிசனம், திவ்ய தரிசனம், ரூ 300 சிறப்பு கட்டண தரிசனம் போன்றவைகளின் மூலம் வருகை தருகிறார்கள். இவர்களில் தேவைப்படுவோர் தங்குமிடங்களை புக் செய்து கொள்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+