ஆவணி பவுர்ணமி: திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது?
திருவண்ணாமலை: ஆவணி மாதத்தில் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த மாதம் பவுர்ணமி எப்போது வருகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும் அடிப்படை வசதிகள் குறித்தும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் உலக பிரதிநிதி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. கோயில் பின்புறம் உள்ள 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட அண்ணாமலை எனப்படும் கிரிவலப் பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள்.

இந்த நிலையில் ஆவணி மாதத்தில் பவுர்மணி எப்போது வருகிறது, கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது என்பது குறித்து கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படிம் பவுர்ணமி வருகிற 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1.46 மணிக்கு (6-ந் தேதி நள்ளிரவுக்கு பின்) தொடங்கி அன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பவுர்ணமி ஞாயிற்றுக்கிழமை வருவதால் கிரிவலம் செல்ல பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.
கிரிவலம் செல்லும் போது நடந்து செல்வதே சிறந்தது. வயதானவர்கள், கர்ப்பிணிகள், உடல் உபாதை உள்ளவர்கள் வேண்டுமானால் ஆட்டோவிலோ அல்லது காரிலோ கிரிவலம் செல்லலாம். கிரிவலம் செல்லும் ஓம் நமசிவாய எனும் மந்திரத்தை உச்சரித்தபடியே செல்வது சிறப்பு!
இந்த கிரிவலப் பாதையில், அஷ்ட லிங்கங்கள் (எட்டு லிங்கங்கள்) அமைந்துள்ளன. இந்த லிங்கங்களை வழிபடுவதன் மூலம் வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் நீங்கி, நன்மைகள் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கிரிவலம் செல்லும்போது மனதில் அண்ணாமலையாரின் திருநாமத்தை உச்சரிப்பது, அமைதியாகவும் நிதானமாகவும் செல்வது போன்றவை மிகவும் முக்கியம். இது ஒரு ஆன்மீகப் பயணம் என்பதால், வீண் பேச்சுகள், அரட்டைகள் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது.
கிரிவலம் செல்ல சில வழிகாட்டுதல்கள்
கிரிவலப் பாதையில் வெறும் கால்களுடன் செல்வது சிறந்ததாகக் கருதப்படுகிறது.
தேவர்கள், சித்தர்கள் மலையை ஒட்டியுள்ள பாதையில் வலம் வருவதாக ஐதீகம் இருப்பதால், நீங்கள் மலையை ஒட்டியுள்ள பாதையில் செல்லாமல் சற்று தூரம் தள்ளி இடதுபுறமாகச் செல்ல வேண்டும்.
கிரிவலத்தை நடந்து மட்டுமே முடிக்க வேண்டும். வாகனங்களில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
கிரிவலம் முடித்தவுடன் அண்ணாமலையார் கோயிலுக்குள் சென்று சுவாமியை தரிசிப்பது முழுமையான பலனைத் தரும்.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications