சமயபுரம் மாரி.. சிறுவாச்சூர் மதுரகாளி.. உறையூர் வெக்காளி.. ஆடியில் அம்மன் தரிசனம்.. புக் பண்ணுங்க
சென்னை: ஆடி மாதத்தையொட்டி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆன்மிக சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுற்றுலாத்துறையும், இந்து சமய அறநிலையத்ததுறையும் இணைந்து ஆன்மிகச் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றுலாவில் பங்கேற்க விரும்புபவர்கள் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடி மாதம் ஆன்மீக அலைகள் வீசும் மாதம். இந்த மாதத்தில் அம்மன் கோவில்கள் திருவிழா கோலம் பூண்டிருக்கும். பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களுக்கு ஒருநாள் சிறப்பு சுற்றுலாவிற்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சிறப்பு வாய்ந்த அம்மன் கோவில்களுக்கு ஒருநாள் சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்படுகிறது.

ஜூலை 17 முதல் ஆடி மாத சுற்றுலா தொடங்கியுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருந்து தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மற்றும் இந்துசமய அறநிலையத்துறை இணைந்து நடத்தும் ஆடி மாத ஆன்மிகச் சுற்றுலாவின் முதல் பயணம் நேற்று செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இச்சுற்றுலாவில் உறையூர் வெக்காளியம்மன் கோயில், கமலவள்ளி நாச்சியார் கோயில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், மாளிக்குடி உஜ்ஜயினி ஓம்காளியம்மன் கோயில், பெரம்பலூர், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில், பொன்மலை பொன்னேஸ்வரியம்மன் கோயில், தென்னூர் உக்கிரகாளியம்மன் கோயில், ஆகிய அம்மன் கோயில்களுக்கு அழைத்துச்செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதன் முதல் பயணமாக இன்று காலை ஓட்டல் தமிழ்நாடு வளாகத்தில் இருந்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக வேன், 8 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. இப்பயணத்தை மேற்கொண்டவர்களுக்கு சுற்றுலாத்துறையின் மூலம் சிறப்பு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு பயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அம்மன் கோயில்களுக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அடுத்தப் பயணம் வரும் 28ம் தேதி ஆடி வெள்ளியன்று செயல்படவுள்ளது. இதற்கான பயணர்கள் ஏற்கனவே முன்பதிவு செய்துவிட்டனர்.
திருச்சி மக்களே உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு, ஆடி மாதத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அம்மனை ஒரே நாளில் தரிசித்து மகிழுங்கள். செவ்வாய், ஞாயிறு, வெள்ளிக்கிழமைகளில் செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள். அதற்கடுத்தப் பயணம் செல்ல விரும்புவோர் ஆடி மாத ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் 0431- 2414346 மற்றும் 9176995874 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. அனைத்து ஆன்மிக பக்தர்களும் இச்சுற்றுலாவில் பங்கேற்று பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications