இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை! பெருமாளுக்கு மாவிளக்கு போட்டு படையலிடுவது எப்படி?
சென்னை: அனைத்து பெருமாள் கோயில்களிலும் இன்று புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபட்டால் நன்மை கிடைக்கும். இன்றைய தினம் கோயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.
பெருமாளுக்கு உகந்த மாதம் புரட்டாசி. இந்த மாதம் தற்போது தொடங்கியுள்ள நிலையில் பெருமாள் கோயில்கள் திருவிழா கோலம் பூண்டுள்ளன. இன்று முதல் சனிக்கிழமை என்பதால் நேற்றைய தினமே பெருமாள் கோயில்களில் அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வழிகள் ஏற்படுத்தப்பட்டன.

குறிப்பாக சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், முகப்பேர் வரதராஜ பெருமாள் கோயில், சந்தான சீனிவாச பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் அலங்கார மின் விளக்குகள் பொருத்தப்பட்டு பெருமாளை தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த முறை புரட்டாசி முதல் சனிக்கிழமை, செப்டம்பர் 21 ஆம் தேதியான இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி பெருமாளுக்கு பூஜை செய்து வழிபட வேண்டும். திருப்பதி வெங்கடாஜலபதியை சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் பாக்கியம் ஆகும்.
முடிந்தால் திருப்பதிக்கே சென்று பெருமாளை தரிசிக்கலாம். இல்லாவிட்டாலும் வீட்டில் அவருடைய படத்தை வைத்து பூஜை செய்யலாம். ஆடம்பர பூஜைகளை விட ஏழைகளின் பூஜைகளைதான் பெருமாள் ஏற்பார். கோவிந்தா நாமம் சொல்லி பூஜை செய்ய வேண்டும். குறிப்பாக துளசியால் பெருமாளை அர்ச்சனை செய்வது மிகவும் சிறப்பானது.
சனிக்கிழமை அன்று மாவிளக்கு ஏற்றி பெருமாளை வழிபட வேண்டும். அப்படி செய்தால் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும். மகிழ்ச்சியும் அதிகரிக்கும். எப்போதும் மாவிளக்கை ஒற்றை விளக்காக ஏற்றக் கூடாது. இரு தீபங்கள், 4 தீபங்கள் என ஏற்றுவது நல்லது. மாவிளக்கை பூஜைக்கு பிறகு நாம் அதை உண்பதால் சுத்தமான பசு நெய்யை பயன்படுத்தி தீபம் ஏற்றலாம்.
புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு இன்றைய தினம் பெருமாள் கோயில்களில் அதிகாலை 4 மணி முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் கோவிந்தா, வாசுதேவா என முழங்கியபடி பெருமாளை நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பெருமாளுக்கு துளசி மாலையை வாங்கிச் சென்றனர்.
வீடுகளில் முதல் சனிக்கிழமை என்பதால் இன்றைய தினம் அவரவர் பழக்கவழக்கத்திற்கேற்ப 7 அல்லது 9 வகையான காய்கறிகளை சமைத்து , சாதம் , சாம்பார், தயிர், வடை பாயாசம், பழங்கள், நெய் ஆகியவற்றை படையலிட்டு நெய்வேத்தியம் செய்ததும் அவற்றை பிசைந்து உண்ண வேண்டும்.
பெருமாளின் பிரசாதத்தை வீணடிக்கக் கூடாது. பெருமாளுக்கு படைத்த தலைவாழை இலையை குப்பையில் போடாமல் செடியில் வைக்க வேண்டும். இன்றைய தினம் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் சொன்னால் விசேஷமாக இருக்கும்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications