குளியலறையில் மறந்தும் இந்த பொருளை வெக்காதீங்க.. கழிவறை கட்ட பெஸ்ட் திசை எது? ஆன்மீகம் தரும் நன்மைகள்
சென்னை: வீடுகளில் கழிவறைகளை எப்படி அமைக்கலாம்? எந்த திசையில் அமைக்க கூடாது? கழிவறைகளில் பயன்படுத்தக்கூடாத பொருட்கள் என்னென்ன? என்பது குறித்தெல்லாம் வாஸ்துவில் விரிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது.. அதில் ஒருசிலவற்றை மட்டும் இங்கு காண்போம்.
வாஸ்து சாஸ்திரம் வழிவகுத்தபடி, நாம் வீட்டை கட்டி குடியேறும்போது, அந்த வீட்டில் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும், செல்வமும் நிறைந்து இருக்க வேண்டும் என்பதே ஒரே எண்ணமாக இருக்க முடியும். சமையலறை, படுக்கையறையை போலவே, கழிவறைகளையும் சரியாக அமைத்தால் மட்டுமே, அனைத்து வளமும் அந்த குடும்பத்திற்கு கிட்டும்.

வாடகை வீட்டில் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது என்றாலும், சில அடிப்படையான வாஸ்து சாஸ்திரத்தை பின்பற்றியே வீடுகள் கட்டப்பட்டிருக்கும். அந்தவகையில், கழிவறையை எங்கே அமைப்பது? கழிவறையில் வைக்கக்கூடாத பொருட்கள் என்னென்ன என்பதையும் தெரிந்து வைத்து கொள்வது அவசியமாகும்.
கழிவறையை பொதுவாக, வட மேற்கு மூலையில், வீட்டிற்கு உள்பகுதியிலும், வெளிப்பகுதியிலும் அமைக்கலாம்.. வட மேற்கு திசையில் அமைப்பதாக இருந்தால், வீட்டின் சுவரையும், சுற்றுச்சுவரை தொடாமல் வெளியே அமைக்க வேண்டும்.. வீட்டுக்கு வெளியே காம்பவுண்டு சுவரை தொடாமல், வட மேற்கு திசையில் அமைக்கலாம்..
செப்டிக் டேங்க்: விசாலமான இடம் இல்லாவிட்டால் மேற்கு பகுதியில் அமைக்கலாம்.. இவையாவுமே சரியாக பொருந்தாமல் போனால், தென் கிழக்கில் வீட்டுக்கு வெளியே அமைக்கலாம்.. செப்டிக் டேங்க் வைக்கவே கூடாது.
ஆனால், எக்காரணம் கொண்டும், கன்னி மூலை எனப்படும் தென் பகுதியில் வீட்டின் உள்ளேயும், வெளியேவும் கழிவறை கட்டக் கூடாது... அதேபோல, வீட்டின் மையப்பகுதி என்று சொல்லப்படும் பிரம்மஸ்தானத்திலும் கழிவறை அமைக்ககூடாது... வடகிழக்கு என்று சொல்லக்கூடிய ஈசான்ய மூலையில் வீட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் கழிவறை அமைக்கக்கூடாது.. வீட்டிற்குள் நுழையும் கதவுக்கு நேராகவும் கழிவறை வைக்கக்கூடாது. சமையலறை, பூஜையறை பக்கத்திலும் கழிவறை அமைக்கக்கூடாது.
சூரிய தோஷங்கள்: அதேபோல, குளியலறைக்குள் உடைந்த கண்ணாடிகளை பொருத்தி வைக்கக்கூடாது. உடைந்த கண்ணாடியில் அதிகளவு எதிர்மறை ஆற்றல்கள் நிறைந்திருக்கும் என்பது அறிவியல் ரீதியாகவும் நிரூபணமாகியிருக்கிறது. உடைந்த பக்கெட்டுகள், ஈரமான துணிகள், அழுக்கு படிந்த துணிகள், வைத்திருந்தால் வாஸ்து தோஷத்தையும், சூரிய தோஷத்தையும் ஏற்படுத்திவிடும்.
காலி பக்கெட்டுகளை போட்டு வைத்திருக்காமல், அவைகளில் எப்போதுமே தண்ணீர் நிறைந்து இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். கழிவறைக்குள் வைக்கும் செடிகள் வாடிவிடவே கூடாது.
டைனிங் டேபிள்: அதேபோல, எந்த திசையை நோக்கி நாம் உணவு சாப்பிட்டால், உடலில் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்றுகூட வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதன்படி, வீட்டில் டைனிங் டேபிள்களை பிரதான கதவு அல்லது கழிவறைக்கு முன்பு வைக்கக்கூடாது என்பார்கள். கழிவறை முன்பு டைனிங் டேபிளை வைக்க நேரிட்டால் அது வீட்டில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு, மனஉளைச்சலுக்கும் ஆளாகிவிடுமாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications