உகாதி..திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோலாகலம்..விஐபி பிரேக் தரிசனம் ரத்து
உகாதி புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி: உகாதி பண்டிகை திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. உகாதி பண்டிகையை முன்னிட்டு திருமலையில் விஐபி பிரேக் தரிசனம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உகாதி ஆஸ்தானத்தையொட்டி கோவிலில் 22ஆம் தேதி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் ஆகியவை ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளனது. விஐபி பிரேக் தரிசனத்துக்கான சிபாரிசு கடிதங்களும் நிராகரிக்கப்படுகின்றன. பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுக்கு நான்கு முறை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடத்தப்படுகிறது. அவை ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவ விழா, யுகாதி பண்டிகை, வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்கள் நடக்கும் முந்திய வாரத்தில் வரும் செவ்வாய்க்கிழமை அன்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கும்.
உகாதி பண்டிகையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலையில் திருமலையில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடைபெற்றது. கருவறை, தங்க கோபுரம், கொடிமரம், பலிபீடம், துணை கோவில்கள், பிரசாத தயாரிப்பு கூடங்கள் ஆகியவை உட்பட அனைத்து பகுதிகளும் கழுவி சுத்தம் செய்யப்பட்ட பின் சந்தனம், ஜவ்வாது, கிச்சிலி கட்டை, நாமக்கட்டி ஆகியவை உள்ளிட்ட பல்வேறு சுகந்த திரவியங்களால் தயார் செய்யப்பட்ட பரிமளம் என்று கூறப்படும் பசை கோவில் சுவர்களுக்கு பூசப்பட்டது.இதனையடுத்து பொதுமக்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்
உகாதி பண்டிகையை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு சுப்ரபாதம் முடிந்ததும், மூலவர் சன்னதி சுத்தி, காலை 6 மணிக்கு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி, விஷ்வக்சேனருக்கு விசேஷ சமர்ப்பணம், காலை 7 மணியில் இருந்து காலை 9 மணிக்குள் விமான பிரகார வலம், மூலவருக்கும் மற்றும் உற்சவருக்கும் புதிய பட்டு வஸ்திரம் அணிவித்தல், பஞ்சாங்க சிரவணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்க வாசலில் ஆகம பண்டிதர்கள் மற்றும் பிரதான அர்ச்சகர்கள் அமர்ந்து சாஸ்திர பூர்வமாக உகாதி ஆஸ்தானத்தை நடத்துகின்றனர். உகாதி ஆஸ்தானத்தையொட்டி கோவிலில் 22ஆம் தேதி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.
கோவிலில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விஐபி பிரேக் தரிசனத்துக்கான சிபாரிசு கடிதங்களும் நிராகரிக்கப்படுகின்றன. பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
உகாதி ஆஸ்தானத்தை முன்னிட்டு மலையப்பசுவாமி முன்னிலையில் புது வருட பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். ஏழுமலையான் கோவில் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பூலோக சொர்க்கமாக மாறியுள்ளது. புத்தாண்டு நாளில் ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.












Click it and Unblock the Notifications