வைகாசி மாத பூஜை..சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு..எதிரொலிக்கும் சரணகோஷம்
சபரிமலை: ஐயப்பன் கோவில் நடை வைகாசி மாத பூஜைக்காக திறக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் வரும் 19ஆம் தேதி வரைக்கும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அதேபோல் பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லில் உடனடி தரிசன முன்பதிவும் நடைபெற்று வருகிறது.
கேரளத்தின் பத்தனம் திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை மிகவும் தனித்தன்மை வாய்ந்ததாகும். இந்த கோவிலுக்கு எல்லா மதத்தினரும் வரவேற்கப்படுகிறார்கள். இது ஆண்டு முழுவதும் திறந்திருப்பதில்லை. இந்த கோவில் மண்டல பூஜை, மகர விளக்கு, விஷூ மற்றும் மலையாள மாதத்தின் முதல் நாட்களில் மட்டும் திறந்திருக்கும். மாத பிறப்பு முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

மண்டல பூஜை காலங்களில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் 41 நாட்களுக்கு முன்பிருந்தே பிரம்மச்சரிய விரதம் கடைப்பிடிக்க வேண்டும். பக்தர்கள் பாரம்பரிய கடினமான காட்டுவழிப் பாதையிலும் செல்கின்றனர். அத்துடன் கோவிலை அடைய சற்று சிரமம் குறைவான பம்பை நதி வழிப் பாதையிலும் பயணிக்கின்றனர்.
வைகாசி மாத பூஜைக்காக கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். இதையடுத்து 18ஆம் படிக்கு கீழ் அமைக்கப்பட்டுள்ள கற்பூர ஆழியில் நெருப்பு மூட்டப்பட்டது. பிறகு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அங்கு பயபக்தியுடன் பக்தர்கள் அய்யப்பனை தரிசனம் செய்தனர். பிரதிஷ்டை தினம் 5 நாட்கள் பூஜை முடிவடைந்ததும் 19ஆம்தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.
வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அதேபோல் பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லில் உடனடி தரிசன முன்பதிவும் நடைபெற்று வருகிறது.
ஹரிஹரபுத்திரன் மணிகண்டனுக்கு கோவில் கட்டியவர் மன்னர் ராஜசேகரன். அதற்கான பொருத்தமான இடத்தை தானே தேர்வு செய்தார் மணிகண்டன். மணிகண்டன் தன்னுடைய அம்பை எடுத்து வில்லை எறிந்தார். அது ஒரு இடத்தில் சென்று தைத்தது. அந்த இடம் ராமாயண காலத்தில் ஸ்ரீ ராமரை நோக்கி சபரி என்கிற பெண் துறவி தவமிருந்த இடமாகும். அந்த இடம் தான் சபரிமலை. சபரிமலையில் தனக்கு கோயில் கட்டும்படி மன்னர் ராஜசேகரனிடம் கூறிய மணிகண்டன் உடனடியாக மாயமானார்.
அகஸ்திய முனிவரின் வழிகாட்டுதலின்படி மன்னர் ராஜசேகரன் கோயில் கட்டும் பணியை முடித்தார். சபரிமலை காசியை போன்ற புனித ஸ்தலமாகும். பரசுராமர் கடலுக்கு அடிப்பகுதியிலிருந்து கேரள நிலத்தை சபரிமலையின் உயரத்திற்கு எழுப்பி அவரே ஐயப்ப சுவாமியின் திருவுருவத்தை சிலையாக செதுக்கி பிரதிஷ்டை செய்தாக தல வரலாறு கூறுகிறது.
இந்த நிலையில் பிரதிட்டை தின விழா வரும் 30ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் கொண்டாடப்படுகிறது. பிறகு பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு வருகிற 29ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படுகிறது. 30ஆம் தேதி பிரதிஷ்டை தின சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications