Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி.. டிச.19ல் 4 மணி நேரம் தரிசனம் ரத்து

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு டிசம்பர் 19 ம் தேதி ஸ்ரீவாரி ஆலயத்தில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. பக்தர்களுக்கு காலை 6 மணி முதல் 10 மணி வரையிலான நான்கு மணி நேரம் சுவாமி தரிசனம் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 23 ம் தேதி துவங்கி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. டிசம்பர் 23 ம் தேதி துவங்கி, ஜனவரி 01 ம் தேதி வரை பரமபத வாசல் திறந்திருக்கும். இந்த 10 நாட்களும் பக்தர்கள் பரமபத வாசல் வழியாக சென்று பெருமாளை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு டிசம்பர் 19 ம் தேதி ஸ்ரீவாரி ஆலயத்தில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

Vaikunda Ekadasi at Tirupati Elumalayan temple Sorgavasal Tirappu Dec 19th Aalwar Tirumanjanam

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடத்திற்கு நான்கு முறை மட்டுமே கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் கோவில் முழுவதும் சுத்தம் செய்யும் நிகழ்வு நடைபெறும். இந்த வைபவம் செவ்வாய்கிழமைகளில் மட்டுமே நடத்தப்படும். யுகாதி, ஆனிவார அஸ்தனம், வருடாந்திர பிரம்மோற்சவங்கள், வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்கள் துவங்குவதற்கு முன்பு வரும் செவ்வாய்கிழமையில் கோவில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்வு நடத்தப்படும்.

கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுவதால் டிசம்பர் 19ம் தேதி காலை 6 மணி முதல் 10 மணி வரையிலான நான்கு மணி நேரம் சுவாமி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. இந்த நான்கு மணி நேரமும் கோவில் புரோகிதர்கள், ஆனந்த நிலையம் முதல் பங்காருவாகிளி வரை உள்ள சுவர்கள், கூரை, பூஜைக்கு பயன்படுத்தும் பொருட்கள் என அனைத்தையும் சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்வார்கள். ஆலயம் முழுவதும் சுத்தமான நீரால் தூய்மை செய்யப்படும். இந்த சமயத்தில் மூலவர் ஏழுமலையானின் விக்ரஹம் முழுவதுமாக துணியால் போர்த்தி வைக்கப்பட்டிருக்கும்.

தூய்மை செய்யும் பணிகள் நிறைவடைந்ததும் மஞ்சள், நாமக்காப்பு, சந்தனப் பொடி, பச்சைக் கற்பூரம் உள்ளிட்ட மூலிகைகள் கலந்த புனித நீர் ஆலயம் முழுவதம் தெளிக்கப்படும். அதற்கு பிறகு மூலவரின் திருமேனியில் போர்த்தப்பட்டிருந்த துணிகள் அகற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள், நைவேத்தியம், ஆராதனை உள்ளிட்டவைகள் நடத்தப்படும். அதற்கு பிறகே சர்வ தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளதால் டிசம்பர் 19 ம் தேதியன்று அஷ்டதள பாதபத்ம ஆராதனை சேவை ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பக்தர்கள் இதனை கருத்தில் கொண்டு தங்களின் தரிசன மற்றும் பயண நேரங்களை திட்டமிட்டுக் கொள்ளலாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

திருப்பதியில் புயல் மற்றும் தொடர் மழை காரணமாக தற்போது பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்படுவதால், வைகுண்ட ஏகாதசி சமயத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மார்கழி மாதத்தை முன்னிட்டு ஆழ்வார் திவ்ய பிரபஞ்ச திட்டத்தின் வரும் 17 ஆம் தேதி முதல் ஜனவரி 14 வரை நாடு முழுவதும் உள்ள 216 மையங்களில் சுப்ரபாதத்திற்கு பதில் திருப்பாவை ஓத திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. திருப்பதியில் அன்னமாச்சார்யா கலாமந்திரத்தில் திருப்பாவை ஓதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் கரையை கடந்ததால் பலத்த காற்றுடன் கனமழையும் கொட்டித் தீர்த்தது. தமிழகத்தை போன்றே ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. புயல் காரணமாக, ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு வரும் ரயில்கள், பேருந்து சேவைகள் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் புயல் கரையை கடந்த பிறகும் கூட திருப்பதிக்கு வரும் பக்தர்களின் கூட்டம் பாதியாக குறைந்தது.
வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸில் பக்தர்கள் காத்திருக்க வைக்கப்படவில்லை. பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 20,817 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று உண்டியல் வருமானம் 2.4 கோடி ரூபாய் வசூலானது.

பக்தர்களின் வருகை குறைந்ததால் கடந்த ஒரு வாரமாக திருப்பதியில் உண்டியல் வருமானமும் குறைந்துள்ளது. இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திருப்பதியில் போக்குவரத்தும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதனால் இனிவரும் நாட்களில் பக்தர்களின் கூட்டம் இயல்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழாவிற்காக 6.70 லட்சம் டிக்கெட்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழாவின் போது தரிசனத்திற்காக வரும் ஏராளமான பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீவாரி கோவில் டிரஸ்ட் தெரிவித்துள்ளது.

வைகுண்ட ஏகாதசி விழாவில் பங்கேற்க டிக்கெட் கிடைக்காத பக்தர்களுக்காக 4.25 லட்சம் ஸ்லாடட் சர்வ தரிசன டோக்கன்களை வெளியிட திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருப்பதியில் ஒன்பது இடங்களில் உள்ள 100 கவுண்ட்டர்களில் சாமானிய பக்தர்களுக்காக இந்த டிக்கெட்கள் டிசம்பர் 22 ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

இது தவிர ஸ்ரீவாணி டிக்கெட்தாரர்களுக்காக 20,000 சிறப்பு தரிசன டிக்கெட்களும் வெளியிடப்பட உள்ளன. டிக்கெட் அல்லது டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு டிசம்பர் 23 ம் தேதி முதல் ஜனவரி 01 ம் தேதி வரை மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகள், என்ஆர்ஐ ஆகியோருக்கான சிறப்பு தரிசன சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த 10 நாட்களும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் இந்த நாட்களில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+